சனிப்பெயர்ச்சியால் யோகங்களை பெற உள்ள ரிஷப ராசி (Rishabam rasi sani peyarchi palangal)
ரிஷப ராசி நிலராசி … எனவே பூமியைப் போன்ற பொறுமையை உடையவர்கள் ரிஷப ராசிக்காரர்கள்., உங்கள் ராசிநாதன் சுக்ரன் என்பதால் ஏதாவது ஒரு கலையில் உங்களுக்கு ஈடுபாடு வரும். உங்கள் ராசியில் சந்திரன் உச்சம் ஆவதால் நீங்கள் எந்த காரியத்தையும் மனத் துணிவோடு நிறைவேற்றி விடுவீர்கள்.. மன உறுதியும் தாய் பாசமும் உடைய உங்களுக்கு இதுவரை சனிபகவான் எட்டாம் இடத்தில் அஷ்டமச் சனியாக சஞ்சாரம் செய்து வந்தார்.. இதுவரை எண்ணற்ற அல்லல் தொல்லைகளை நீங்கள் அனுபவித்து வந்தீர்கள்..
ரிஷப ராசிக்கு மிகச் சிறந்த யோக பலன்கள் பெற உள்ளனர். வாக்கிய பஞ்சாங்கத்தின் படி சனிப் பெயர்ச்சி வரும் டிசம்பர் 27ஆம் தேதி நடக்க உள்ளது. இதில் சனி பகவான் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு பெயர்ச்சி ஆக உள்ளார். ரிஷப ராசிக்கான பலன்கள், குரு மற்றும் ராகு – கேது பெயர்ச்சியை அடிப்படையாகவும், சனி பார்வையைப் பொறுத்தும் இங்கு விரிவாக பார்ப்போம்.
ரிஷப ராசிக்கு மிகச் சிறந்த யோக பலன்கள் பெற உள்ளனர். வாக்கிய பஞ்சாங்கத்தின் படி சனிப் பெயர்ச்சி வரும் டிசம்பர் 27ஆம் தேதி நடக்க உள்ளது. இதில் சனி பகவான் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு பெயர்ச்சி ஆக உள்ளார். ரிஷப ராசிக்கான பலன்கள், குரு மற்றும் ராகு – கேது பெயர்ச்சியை அடிப்படையாகவும், சனி பார்வையைப் பொறுத்தும் இங்கு விரிவாக பார்ப்போம்.
ரிஷப ராசிக்கான சனிப்பெயர்ச்சி பலன்கள்
சனிப்பெயர்ச்சிக்கான பலன்கள் என்பது இரண்டரை ஆண்டு காலம் கொண்டது என்பதால், இந்த காலத்தின் இடையே நடக்கும் குரு பெயர்ச்சி மற்றும் ராகு கேது பெயர்ச்சி பலன்களையும் உள்ளடக்கியதாகவும் இருக்கும் என்பதால், 2020 – 2023 வரையிலான சனிப் பெயர்ச்சி ரிஷப ராசிக்கான பலன்கள் குரு பெயர்ச்சி மறும் ராகு – கேது பெயர்ச்சியைப் பொறுத்து பலன்களை உள்ளடக்கியதாக இங்கு விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது.
குரு பெயர்ச்சி முடிந்த நிலையில், அடுத்து பலரை குழப்பி வரும் கேள்வியாக சனிப் பெயர்ச்சி எப்போது என்ற கேள்வி தான். இரண்டு 2020 ஜனவரி 24ஆம் தேதி, டிசம்பர் 26ஆம் தேதி என இரு தினங்கள் சொல்லப்படுகின்றதே என்ற குழப்பம் நிலவுகின்றது.
திருக்கணித பஞ்சாங்கத்தின் படி ஜனவரி 24ஆம் தேதி சனிப் பெயர்ச்சி என்றும், வாக்கிய பஞ்சாங்கப்படி டிசம்பர் 27ஆம் தேதி சனிப் பெயர்ச்சி நிகழ்வு நடக்க உள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இருப்பினும் தற்போது ஒரு குழந்தை பிறந்தால் அவருக்கு கணிக்கப்படும் ஜாதகம் பெரும்பாலும் திருக்கணித முறையில் இருப்பதால் இந்த திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையில் சனிப்பெயர்ச்சி பலன்கள் பார்ப்பது முக்கியத்துவம் பெறுகின்றது. அதன் அடிப்படையில் ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கான சனிப் பெயர்ச்சி எப்படிபட்ட பலன்களை தர உள்ளன என்பதைப் பார்ப்போம்…
2020 டிசம்பர் 27ஆம் தேதி தனுசு ராசியிலிருந்து தனது சொந்த வீடான 10ஆம் வீட்டிற்கு அதாவது மகர ராசிக்கு பெயர்ச்சி ஆகி பலமாக உள்ளார். இதனால் ரிஷப ராசிக்கு நல்ல பலன்கள் பெருகப் போகின்றது.
ஏனென்றால் ரிஷப ராசிக்கும் பாக்கிய ஸ்தானம் மற்றும் சனி பகவானுக்கு லக்கின சுபர், லக்கின யோகாதிபதி என்பதால், ரிஷப ராசிக்கு மிகச் சிறந்த யோக பலன்களை அள்ளி தர உள்ளார்.
ரிஷப ராசியின் குணங்கள்
ரிஷப ராசியினர் தன்னை சுற்றி உள்ளவர்களை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள நினைப்பார்கள். இந்த ராசியின் அதிபதி சுக்கிரன் என்பதால் கலை, இசையில் ஆர்வமிக்கவராக இருப்பார்.
தற்போது ரிஷப ராசிக்கு 8ம் இடத்திலிருந்த சனி 9ம் இடத்திற்கு பெயர்ச்சி ஆவதால் எப்படிப்பட்ட பலன்கள் கிடைக்கும் என்பதை பார்ப்போம்.
சனி சுபர் கிரகம் இல்லம். இவர் தனது 3,6,11 ஆகிய பார்வை பலன்களை கொண்டவர். அந்த வகையில் தற்போது மகர ராசியில் பெயர்ச்சி ஆகும் சனி தனது 3,6,7 ஆகிய இடங்களுக்கு அசுப கிரகம் சுப பலன்களை தரக் கூடிய இடம். இதன் காரணமாக இந்த இடங்களைப் பார்க்கும் சனி பகவான், ரிஷப ராசிக்கு மிகச் சிறந்த பலன்களை வழங்க உள்ளார்.
சனிப்பெயர்ச்சி பலன்
சனிப்பெயர்ச்சின் காரணமாக இதுவரை வேலை, வியாபாரம், உத்தியோகத்தில் இருந்த தடைகள் நீங்கும். சனி நல்லது அல்லது கெட்டது செய்தாலும் சற்று மெதுவாக தான் பலன்கள் தருவார்.
எப்போது சிறப்பான பலன்கள் கிடைக்கும்?
அதன் காரணமாக ஜனவரியில் பெயர்ச்சி ஆனாலும் 2020 மத்தியிலிருந்து நல்ல பலன்களை தரத் தொடங்குவார். அவர் ஒரு சூப்பர்வைசர் மாதிரி நமக்கான வேலையை நாம் சரியாக செய்கிறோமா என்பதை பார்க்கக் கூடியவராக சனி இருப்பார்.
என்ன பலன்
சனி எப்போதும் சரியான வழியில் நடப்பவர்களுக்கு சிறப்பான பலன்களைத் தான் தருவார். ஒருவர் ஏமாற்றி முன்னேறிவிட்டார் என நாம் ஆதங்கப்படத் தேவையில்லை. அதை சனி அவருக்கான காலத்தில் சரியான பலன்களை கொடுத்துவிடுவார்.
தன் வேலையை மற்றவர்களின் தலையில் கட்ட நினைப்பவர்களுக்கு சிக்கல் தான். தற்போது 9ம் இடத்திற்கு அதாவது தந்தை, பாக்கிய ஸ்தானத்திற்கு செல்வதால் அனைத்து வகை பாக்கியங்களை தர உள்ளார்.
ரிஷப ராசிக்கான பரிகாரம்:
ரிஷப ராசிக்கு அதிபதி சுக்கிரன், அதே போல் உங்கள் 5ம் இட அதிபதி புதன். இந்த இருவரின் அதிபதியாக விளங்கக் கூடியார் சரஸ்வதி தேவி.
இவர்கள் புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் சரஸ்வதி தேவியை வழிபட்டு வர மிக சிறந்த முன்னேற்றத்தை அடையலாம். அதோடு புதன் ஹோரையில் வழிபாடு செய்வது விசேஷமானது.
சனிக்கிழமை தோறும் அருகில் உள்ள கோயிலுக்கு சென்று வருவது நல்லது. உங்களால் இயன்ற தான தர்மங்கள் செய்ய உங்களின் நிலைமை மேம்படும்.
மேஷம் சனிப்பெயர்ச்சி பலன்கள் 2020-2023 | ரிஷபம் சனிப்பெயர்ச்சி பலன்கள் 2020-2023 | மிதுனம் சனிப்பெயர்ச்சி பலன்கள் 2020-2023 | கடகம் சனிப்பெயர்ச்சி பலன்கள் 2020-2023 | சிம்மம் சனிப்பெயர்ச்சி பலன்கள் 2020-2023 | கன்னி சனிப்பெயர்ச்சி பலன்கள் 2020-2023 | துலாம் சனிப்பெயர்ச்சி பலன்கள் 2020-2023 | விருச்சிகம் சனிப்பெயர்ச்சி பலன்கள் 2020-2023 | தனுசு சனிப்பெயர்ச்சி பலன்கள் 2020-2023 | மகரம் சனிப்பெயர்ச்சி பலன்கள் 2020-2023 | கும்பம் சனிப்பெயர்ச்சி பலன்கள் 2020-2023 | மீனம் சனிப்பெயர்ச்சி பலன்கள் 2020-2023
சந்திரனுக்குக் கிடைத்த சாபம் | Chandran Vinayagar Story Tamil சந்திரனுக்குக் கிடைத்த சாபம்! ஒருமுறை, சந்திரன் கயிலைக்குச் சென்றிருந்தபோது,… Read More
Vinayaga 100 special information விநாயகர் சதுர்த்தி விரதம் சிறப்பு பதிவு. விநாயகர் பற்றிய 100 அரிய குறிப்புகள் .… Read More
Vinayagar Agaval Lyrics in Tamil விநாயகர் அகவல் (Vinayagar Agaval) - ஆசிரியர் ஔவையார் (14-ஆம் நூற்றாண்டு) விநாயகர்… Read More
ஓம் கணநாதனே போற்றி போற்றி ஓம் ஞான முதல்வனே போற்றி ஓம் வெள்ளை கொம்பனே போற்றி கணபதியே கணபதியே… கணபதியே… Read More
Vinayaka Chathurthi Pooja Procedure Tamil விநாயகர் சதுர்த்தி (7/9/2024) வழிபடும் முறைகள் (Vinayagar Chathurthi Pooja Procedure in… Read More
Vinayagar Statue directions வீட்டில் விநாயகர் சிலையை எங்கு வைக்க வேண்டும்? ⭐ விநாயகர் சதுர்த்தி, விநாயகரின் முக்கியமான விழாவாகும்.… Read More
Leave a Comment