Subscribe for notification
Events

Kadagam sani peyarchi palangal 2020-23 | கடகம் ராசி சனிப்பெயர்ச்சி பலன்கள்

கடகம் ராசி சனிப்பெயர்ச்சி பலன்கள்.. Kadagam sani peyarchi palangal 2020-23

நவ கிரகங்களில் மிக சுறுசுறுப்பான கிரகம் சந்திரன் .  முதலாளியான சூரியனுக்கு, மிக பிடித்தமான வேலைக்காரன் யாருன்னா? இந்த சந்திரன் தான்… ஒரு ராசியை இரண்டேகால் நாளில் கடக்கக் கூடிய சந்திரன், ஒரு ராசி மண்டலத்தை இருபத்தி ஏழே நாளில் சுற்றி வந்து விடுவார்.

முதலாளியான சூரியனுக்கு பிடிக்காத வேலைக்காரன் யாருன்னா? அவர் வேறு யாரு? சனி பகவான்தான். சனி பகவான் ஒரு ராசியைக் கடக்க இரண்டரை வருடங்கள் எடுத்துக்கொள்கிறார் ..ஒரு ராசி மண்டலத்தை, பன்னிரண்டு ராசிகளை சுற்றி வர 30 வருடங்கள் தேவைப்படுகிறது சனீஸ்வர பகவானுக்கு.. ரொம்ப சோம்பேறியான மந்தன், முடவன் என்று சொல்லப்படக்கூடிய வேலைக்காரனை எந்த முதலாளிக்கு தான் பிடிக்கும்???

அப்பேர்பட்ட சுறுசுறுப்பான சந்திரனின் ராசியில் பிறந்த நீங்கள் ரொம்ப சுறுசுறுப்பானவர்கள்…. பாசக்கார பய புள்ளைகள்… உங்கள் ராசிநாதனான சந்திரன் மனதை ஆளக்கூடிய கிரகம் …உங்கள் ராசிநாதனான சந்திரனுக்கு வளர்பிறை, தேய்பிறை என்று இரட்டை நிலைகள் உள்ளது ..இவர் வளர்பிறையில் சுபராகவும், தேய்பிறையில் பாவராகவும் இருப்பார் ..

சந்திரனின் வளர்பிறையில் பிறந்தவர்கள் எடுத்த காரியத்தை மன உறுதியுடன் முடித்துவிடுவார்கள். ஒரு காரியத்தை முடித்து போட்டு தான் வேற வேலை(ஜோலி) பார்ப்பார்கள்.. இவர்களை, இந்த ராசிக்காரர்களை நம்பலாம். இவர்களை நம்பி எந்த ஒரு பொறுப்பையும் ஒப்படைக்கலாம்.

🙏🏼கண்டகசனி பலன்கள் எப்படி இருக்கும் தெரியுமா?

வாக்கிய பஞ்சாங்கத்தின் படி சனிப் பெயர்ச்சி வரும் டிசம்பர் 27ஆம் தேதி நடக்க உள்ளது.

சனிப்பெயர்ச்சி 2020 – 2023 நிகழும் போது கடக ராசிக்கு கண்டக சனி நடக்க உள்ளது. அந்த இரண்டரை ஆண்டு காலத்தில் கடக ராசி எப்படிப் பட்ட பலன்களைப் பெற உள்ளது என்பதை விரிவாக பார்ப்போம்…

​சனிப்பெயர்ச்சி கடக ராசிக்கான பலன்கள்

🙏🏼 இதுவரை கடக ராசிக்கு 6ஆம் இடத்திலிருந்து, மிக நல்ல பலன்களை கொடுத்து வந்தார். நிறைய பொருளாதார மேன்மை, வேலை முன்னேற்றம், திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடந்திருக்கும். தற்போது கடக ராசிக்கு, 7ஆம் இடத்தில் அமரப் போகின்றார்.

சனிப்பெயர்ச்சி அஷ்டமத்து சனி, கண்டக சனி, அர்த்தாஷ்டமச் சனி என்றால் என்ன?- சனி பெயர்ச்சி பரிகாரங்கள்

​கண்டக சனி எப்படி இருக்கும்?

கண்டக சனி என்பது ஒரு செயலை செய்ய சிறப்பான சூழல் இருந்தாலும் அதற்கான முடிவையும் பலனையும் எட்ட பல சிரமங்களைப் பட வேண்டி வரும். இந்த காலத்தில் நாம் எண்ணியதை அதற்கான நேரத்தில் முடிப்பது சிரம்ம், சுப காரியங்கள் திட்டமிடுதல் நடக்காமல் போகலாம்.

​7ஆம் இடம் எப்படி?

உங்கள் ராசிக்கு 7வது இடம் அதாவது மனைவி தொழில் கூட்டாளி ஸ்தானத்தில் சனி அமர உள்ளார். இதனால் குடும்பத்தில் சிறு சச்சரவுகள் ஏற்படும். அமைதியைக் காப்பது நல்லது.

நண்பர்கள், பங்குதாரர் உங்களுக்கு சாதகமற்ற நிலையில் இருப்பார். இதனால் உங்களுக்குள் இருக்கும் உறவு, பழக்கம் சற்று விரிசலை சந்திக்க நேரிடும்.

பல முயற்சிகள் எடுத்தாலும் திருமணம் உள்ளிட்ட சுப காரியங்கள் தடை ஏற்படலாம். ஆனால் பின்னர் சிறப்பாக நடக்கும்.

​3 வருடங்களில் சற்று கூட, குறைய கிடைக்கும் சனி பலன்கள்

3 வருடங்களில் சற்று கூட, குறைய கிடைக்கும் சனி பலன்கள்

 

கண்டக சனியாக தற்போது இருக்கும் நிலையை விட அவர் வக்கிர கதியாக மீண்டும் தனுசு ராசிக்கு செல்லும் போது மிக கவனமாக இருக்க வேண்டியது அவசியம். 2020 கண்ட சனி தொடக்கம் என்பதால் சற்று சுமாரான ஆண்டாக செல்லும்.

​2020 பலன்கள்:

குரு 2020 நவம்பர் வரை 6ல் இருப்பதால் சற்று சுமாரான பலன்கள் தான் கிடைக்கும். இருப்பினும் அவர் அதிசாரமாக செல்லும் 3 மாத காலம் சற்று சிறப்பான பலன்களை உங்கள் ராசியினர் பெற உள்ளீர்கள்.

2020ல் கடக ராசியினர் பண விஷயத்தில் சற்று கவனமாக இருப்பது நல்லது. பணம் வாங்குதல், கொடுத்தல் சிக்கலை தரும். யாருக்காவும் ஜாமின் கையெழுத்து போடுவது உங்களையே அந்த பிரச்னையில் சிக்க வைக்க வாய்ப்புண்டு.

​2021 பலன்

2021ல் குரு 7ம் இடமான மகரத்தில் இருப்பார். சனியோடு சேர்ந்திருந்தாலும், சனியின் கெடு பார்வையை சாந்தப்படுத்தி, நற்பலன்களை வழங்குவார். சனியால் இதுவரை இருந்த சாதகமற்ற சூழல் மாறும். திட்டமிட்ட செயல்கள் நடக்கும். முயறிக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். மன நிம்மதியை தரக்கூடிய ஆண்டாக இருக்கும்.

​2022 பலன்

2022ல் மீண்டும் குரு 8ம் இடமான அஷ்டம ஸ்தானத்திற்கு செல்வார். இதனால் குருவால் கிடைத்த நற்பலன் குறைவாக கிடைக்கும். இதனால் 2020ல் இருந்த நிலை தான் இருக்கும். அதனால் நீங்கள் செயலில் கவனம் செலுத்துவது அவசியம்.

படிப்பினை தரும் சனி

 

இரண்டரை ஆண்டுகள் கண்ட சனியாக அமைவதால் உங்களுக்கு நல்ல படிப்பினையாக அனுபவத்தை தருவார். எந்த செயல்களில், வேலைகளில் எப்படிப்பட்ட சிக்கல்கள் உள்ளது அதை எப்படி சமாளிப்பது என்பதை கற்றுத்தருவார்.

 

கடின சூழலை சமாளிக்கும் நல்ல தைரியம், சிந்தனையை வழங்குவார்.

​கடக ராசிக்கான பரிகாரம்

கடக ராசிக்கு அதிபதியாக சந்திரன் உள்ளார். அவருக்கு அதிபதியாக பெண் தெய்வங்கள் உள்ளதால் அம்மன் கோயில் வழிபாடு மிக சிறப்பான பலன்களை தரும். பெளர்ணமி அன்று சந்திர தரிசனம், சந்திர பூஜை செய்வது சிறப்பானது. உங்களின் குல தெய்வ வழிபாடு நன்மையை தரும்.

 

மேஷம் சனிப்பெயர்ச்சி பலன்கள் 2020-2023 | ரிஷபம் சனிப்பெயர்ச்சி பலன்கள் 2020-2023 | மிதுனம் சனிப்பெயர்ச்சி பலன்கள் 2020-2023 | கடகம் சனிப்பெயர்ச்சி பலன்கள் 2020-2023 | சிம்மம் சனிப்பெயர்ச்சி பலன்கள் 2020-2023 | கன்னி சனிப்பெயர்ச்சி பலன்கள் 2020-2023 | துலாம் சனிப்பெயர்ச்சி பலன்கள் 2020-2023 | விருச்சிகம் சனிப்பெயர்ச்சி பலன்கள் 2020-2023 | தனுசு சனிப்பெயர்ச்சி பலன்கள் 2020-2023 | மகரம் சனிப்பெயர்ச்சி பலன்கள் 2020-2023 | கும்பம் சனிப்பெயர்ச்சி பலன்கள் 2020-2023 | மீனம் சனிப்பெயர்ச்சி பலன்கள் 2020-2023

Share
ஆன்மிகம்

Published by
ஆன்மிகம்
  • Recent Posts

    Thirumeeyachur lalithambigai temple | திருமீயச்சூர் ஸ்ரீலலிதாம்பாள் திருக்கோயில்

    Thirumeeyachur lalithambigai temple பூர்வ ஜென்மத்தில் புண்ணியம் செய்தால் தான் வரமுடியும்... திருமீயச்சூர் ஸ்ரீலலிதாம்பாள் திருக்கோயில்... ஸ்ரீலலிதாம்பாள் எனும் இந்தத் திருநாமத்தில்… Read More

    1 week ago

    அன்பெனும் பிடியுள் பாடல் வரிகள் | Anbenum pidiyul lyrics in tamil

    Anbenum pidiyul lyrics in tamil வள்ளலாரின் புகழ் பெற்ற பாடல் வரிகள் அன்பெனும் பிடியுள் அகப்படும் மலையே அன்பெனும்… Read More

    2 weeks ago

    சென்னையின் நவக்கிரக ஸ்தலங்கள்

    சென்னையின் நவக்கிரக ஸ்தலங்கள்!!.. சென்னைக்கு அருகிலேயே பல ஆண்டுகளுக்கு முன்பே நமது முன்னோர்கள் நவக்கிரக ஸ்தலங்களை அமைத்துள்ளனர். சென்னைக்கு அருகிலுள்ள… Read More

    2 weeks ago

    தை அமாவாசை தினத்தின் சிறப்பு | thai amavasai special

    தை அமாவாசை முன்னிட்டு  செய்ய வேண்டிய பித்ரு கடமைகள் thai amavasai special...   அமாவாசை தினம் நமது சமயத்தில்… Read More

    3 weeks ago

    தைப்பூச விரதத்தை எளிமையான முறையில் வீட்டிலேயே கடைபிடிப்பது எப்படி?

    தைப்பூசம் தைப்பூசம் அன்று முருகப்பெருமானுக்கு விசேஷ பூஜைகள் செய்யப்படுகிறது தைப்பூச விரதத்தை எளிமையான முறையில் வீட்டிலேயே கடைபிடிப்பது எப்படி? 🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔… Read More

    4 weeks ago

    Today rasi palan 19/2/2025 in tamil | இன்றைய ராசிபலன் புதன்கிழமை மாசி – 7

    Today Rasi Palan in Tamil | இன்றைய இராசிப்பலன் இன்றைய பஞ்சாங்கம் _*பஞ்சாங்கம்*_ °°°°°°°°°°°°°° *மாசி - 07*… Read More

    9 hours ago