Events

Mesham sani peyarchi palangal 2020-23 | மேஷம் ராசி சனிப்பெயர்ச்சி பலன்கள்

Mesham sani peyarchi palangal 2020-23

மேஷராசிக்கான சனிப் பெயர்ச்சி பலன்கள் (Mesham sani peyarchi)

வேகமும் ,சுறுசுறுப்பும், நேரம் தவறாமையும் ,கடமையே கண்ணாக கொண்ட மேஷ ராசி நேயர்களே உங்களுக்கு இதுவரையிலும் ஒன்பதாம் இடத்தில் இருந்து வந்த சனி பகவான் இந்த வருடம் 24 1 2020 அன்று உங்கள் ராசிக்கு பத்தாம் இடத்திற்கு பெயர்ச்சியாகிறார்.

இது வரையிலும் உங்கள் ராசிக்கு 9-ம் இடமான தனுசு ராசியில் சாதகமற்ற பலன்களை தந்து வந்த சனீஸ்வர பகவான் இந்த வருடம் முதல் அவருடைய சொந்த ராசியான மகர ராசியில் ஆட்சி பலம் பெற்று சஞ்சாரம் செய்ய உள்ளார்..

பொதுவாக சொந்த வீட்டில் உள்ள சனிபகவான் ஆட்சி பலம் பெறுவது உங்களுக்கு ஒரு பலம்ஆகும்.. மேஷ ராசிக்கு சனி 10, 11 ம் பாவகங்களுக்கு ஆதிபத்தியம் பெறுவார் ..3, 6, 10, 11 பாவங்கள் உபஜெய ஸ்தானத்தில் வரும் .. ஒரு உப ஜெய ஸ்தானாதிபதி ,இன்னொரு உபஜெய ஸ்தானத்தில் இருப்பது யோகமாகும்.

அதுமட்டுமல்லாமல் உங்களுக்கு அதாவது மேஷ ராசியினருக்கு இந்த வருடம் முழுவதும் “தர்மகர்மாதிபதி யோகம் “என்ற ஒரு யோகம் செயல்பட இருக்கிறது.. ஒன்பதுக்கு உடையவன் ஒன்பதிலும் , பத்துக்குடையவன் பத்திலும் ஆட்சி பெற்றிருப்பது தர்மகர்மாதிபதி யோகம் ஆகும் …

2020 கர்ம சனி எப்படிப்பட்ட பலன் தரும்?

சனிப் பெயர்ச்சி எப்போது? :

கிரக பெயர்ச்சிகளில் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி ஆக நீண்ட காலம் எடுத்துக் கொள்ளும் கிரகம் சனி பகவான். அந்த வகையில் வாக்கிய பஞ்சாங்கப்படி சனி பகவான் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு வரும் மார்கழி 12ம் தேதி (டிசம்பர் 27) பெயர்ச்சி ஆக உள்ளார். திருக்கணித பஞ்சாங்கப்படி 2020 ஜனவரி 24ல் இந்த சனி பெயர்ச்சி நடந்தது.

 

​மேஷ ராசிக்கு அதிர்ஷ்டம் அடிக்குமா?

காலபுருஷ தத்துவத்தில் 10ம் இடம் மகர ராசி. சனி பகவான் அதிபதியாக இருக்கும் மகர ராசியில் சொந்த வீட்டில் சனி பெயர்ச்சி ஆவது மிகவும் சிறப்பாக பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே 9, 12ம் இட அதிபதி குரு பகவான் கடந்த நவம்பர் 15ம் தேதி மகரத்திற்கு பெயர்ச்சி ஆனார்.

சனி மற்றும் குரு சேர்ந்து ஒரு ராசியில் அமர்ந்திருக்கக்கூடிய அமைப்பிற்கு தர்ம கர்மாதிபதி யோகம் என்பார்கள்.

3, 6,10, 11 ஆகிய இடங்கள் உப ஜெய ஸ்தானங்கள் என்பார்கள். சனி மேஷ ராசிக்கு 10ம் இடத்தில் இருப்பதால் மிக சிறப்பான பலன்கள் கிடைக்க உள்ளது. அந்த வகையில் ராசிக்கு 10ம் இடத்தில் சனி இருப்பதால் சிறப்பான பலன் கிடைக்கும்.

மேலும் ஜாதகத்தில் நல்ல தசை, புத்தி நடப்பவர்களுக்கு அவர்கள் விரும்பியது போல பல நன்மைகளும், காரிய வெற்றியும் அமையும்.

 

புதிய வேலை வாய்ப்புக்கள் கிடைக்கும்

தொழில் முன்னேற்றம் இருக்கும்

 

சனிபார்வை பலன்

 

சனி பகவான் பார்வை 3, 7, 10ம் இடங்களில் விழுகிறது. பொதுவாக சனியின் பார்வை விழும் இடத்திற்கு பலன் குறைவு என்பார்கள். ஆனால் சனியுடன் குரு சேர்ந்திருப்பதால் சனி பார்க்கும் இடங்களுக்கு சுப பலன்கள் தான் ஏற்படக்கூடும்.

 

தொழில்

தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு அவர்கள் சார்ந்த துறையில் நல்ல புதிய வாய்ப்புகள் அமையும். அதோடு புதிய தொழில் தொடங்கும் யோசனையும், அதை சிறப்பாக தொடங்கி வெற்றி அடைய வாய்ப்புள்ளது.

இரண்டாவது தொழில் தொடங்கும் யோகமும். அதற்கான முதலீடுகள் சொந்த பணமாகவோ அல்லது கடனாகவோ எளிதில் கிடைக்கும்.

இந்த சனிப் பெயர்ச்சி காலம் மேஷ ராசிக்கு மிக சிறப்பான காலமாக இருக்கும். அதனால் உழவுத் தொழில், ஏற்றுமதி, இறக்குமதி தொழில் என எதுவாக இருந்தாலும் அதில் லாபம் தரக்கூடியதாக இருக்கும். அதனால் நன்கு ஆலோசனை செய்து தொழில் முதலீடு செய்ய நல்ல லாபம் கிடைக்கும்.

 

​ சிறப்பான பலன் :

சனி பகவான் தொழில் மாற்றத்தை தரக்கூடியவர். சனி பகவான் கால சக்கரத்தை சுற்றிவர 30 ஆண்டு காலம் ஆகும். அப்படி 30 வயதைக் கடந்தவர்களுக்கு ஜாதகத்தில் தசை, புத்தி சிறப்பாக இருந்தால் சிறப்பான பலனைப் பெறுவீர்கள்.

இந்த காலகட்டத்தில் தொழில் செய்பவர்களுக்கு புதிய தொழில் முயற்சி செய்பவர்களுக்கு தொழில் தொடங்க வாய்ப்புகள் அமையும். உத்தியோகஸ்தர்களுக்கு புதிய இடத்தில் வேலை கிடைக்கும்.

தசை புத்தி சரியில்லாத மேஷ ராசியினர் புதிய தொழில் தொடங்குவதோ, பெரிய முதலீடு செய்வது, கடன் வாங்குதல் கூடாது. இருக்கும் இடத்தில் அல்லது நிலையில் மேன்மை அடையப் பார்ப்பது அவசியம்.

30 வயதுக்கு மேற்பட்ட மேஷ ராசியினருக்கு 2வது முறையாக சனி பெயர்ச்சி ஓரளவு சிறப்பான பலன் தரும் என்பதால், வீடு, மனை வாங்கக்கூடிய பாக்கியங்கள் உண்டாகும்.

 

​எச்சரிக்கையாக இருக்க வேண்டியவை :

மூத்த சகோதரர்கள் உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது அவசியம். சித்தி, மாமா ஆகியோரின் உடல் நலனில் கவனம் வேண்டும். கணவன் – மனைவி உறவு இடையே தேவையற்ற கருத்து வேறுபாட்டால் மனக்கசப்பு உண்டாகும். கண்டிப்பாக விட்டுக் கொடுத்து செல்வது மிக அவசியம்.

ஆனால் தொழில் சம்பந்தமாக உங்கள் வேலையாட்கள் உங்களை அஞ்சி வேலை செய்வார்கள். ஏனெனில் நீங்கள் செய்து முடிக்க வேண்டிய விஷயங்களை செய்து முடிப்பீர்கள்.

மூத்த சகோதர – சகோதரிகள் வழியில் சற்று மனஸ்தாபம் உண்டாகும். ஆனால் உங்களுக்கு மிக சிறப்பான அனுகூல நிலை உண்டாகும்.

 

​சிறப்பான பலன்கள்

உங்கள் ராசிக்கு மன மகிழ்ச்சி, இன்பம், சந்தோஷம், உணர்வு பூர்வமான திருப்தி போன்றவை 60% பலன்கள் கிடைக்கும் என்றாலும், நிதி, பொருளாதாரத்தை உயர்த்தக்கூடிய, சம்பள உயர்வு, வாடகை, லாபம் முன்னேற்றத்தை தரக்கூடிய விஷயம் 90% மேல் பலனைத் தரக்கூடியதாக இருக்கும். இதனால் நீங்கள் தொட்ட காரியம் துலங்கும். ஆலோசித்து செய்யக்கூடிய முதலீடுகள் மிகப்பெரிய லாபத்தை தரும்.

 

உங்கள் உத்தியோகத்தில் பதவி உயர்வு, சம்பள உயர்வு சிறப்பாக இருக்கும் என்பது நிச்சயம்.

 

​பரிகாரம்

உடல் ஊனமுற்றோர்களுக்கு உணவு தானம், துப்புரவுத் தொழிலாளர்களுக்கு பாதணி (செருப்பு) வாங்கி தரலாம்.

உங்கள் ராசிக்கான கடவுள் முருகன் என்பதால் உங்களால் முடியும் போதெல்லாம் முருகன் கோயில் சென்று கந்தனை தரிசித்து வருவதும், கந்த சஷ்டி கவசத்தைப் பாடி வர தைரியமும், ஆரோக்கியமும், முன்னேற்றமும் கூடும்.

 

மேஷம் சனிப்பெயர்ச்சி பலன்கள் 2020-2023 | ரிஷபம் சனிப்பெயர்ச்சி பலன்கள் 2020-2023 | மிதுனம் சனிப்பெயர்ச்சி பலன்கள் 2020-2023 | கடகம் சனிப்பெயர்ச்சி பலன்கள் 2020-2023 | சிம்மம் சனிப்பெயர்ச்சி பலன்கள் 2020-2023 | கன்னி சனிப்பெயர்ச்சி பலன்கள் 2020-2023 | துலாம் சனிப்பெயர்ச்சி பலன்கள் 2020-2023 | விருச்சிகம் சனிப்பெயர்ச்சி பலன்கள் 2020-2023 | தனுசு சனிப்பெயர்ச்சி பலன்கள் 2020-2023 | மகரம் சனிப்பெயர்ச்சி பலன்கள் 2020-2023 | கும்பம் சனிப்பெயர்ச்சி பலன்கள் 2020-2023 | மீனம் சனிப்பெயர்ச்சி பலன்கள் 2020-2023

Share
ஆன்மிகம்

Published by
ஆன்மிகம்
  • Recent Posts

    Today rasi palan 22/04/2025 in tamil | இன்றைய ராசிபலன் செவ்வாய்கிழமை சித்திரை 9

    Today Rasi Palan in Tamil | இன்றைய இராசிப்பலன் _*பஞ்சாங்கம்*_°°°°°°°°°°°°°°°*சித்திரை - 09**ஏப்ரல் - 22 - (… Read More

    8 hours ago

    2025-26 தமிழ் புத்தாண்டு: விசுவாவசு வருடத்தின் பஞ்சாங்க கணிப்பும் பலன்களும்

    # 2025-26 தமிழ் புத்தாண்டு: விசுவாவசு வருடத்தின் பஞ்சாங்கக் கணிப்பும் பலன்களும் **தமிழ் புத்தாண்டு** இந்த ஆண்டு ஏப்ரல் 14,… Read More

    1 week ago

    பங்குனி உத்திரம் நாள் | 11.4.2025 வெள்ளிக்கிழமை | Panguni uthiram

    Panguni Uthiram 2025 11-04-2025 மாதந்தோறும் உத்திர நட்சத்திரம் வந்தாலும், பங்குனி மாதத்தில் வரும் உத்திரத்திற்கு அதிக மகிமைகள் உண்டு.… Read More

    2 weeks ago

    பங்குனி உத்திரம்: அசுரனை வீழ்த்திய நாள் | Panguni Uthiram special

    Panguni Uthiram Special பங்குனி உத்திரம்: அசுரனை வீழ்த்திய நாள்... Panguni Uthiram special அனைத்து அறுபடைவீடுகளில் பங்குனி உத்திரம்… Read More

    2 weeks ago

    Rama Navami | ஸ்ரீ ராம நவமி விரதமுறை மற்றும் பலன்கள் | Rama Navami Special

    Rama Navami ஸ்ரீ ராம நவமி ஸ்பெஷல் இராமாயணத்தில் ஒரு சம்பவத்தின் நிகழ்ச்சியால் ராம மந்திர மகிமையை உணரமுடியும். ஹனுமான்,… Read More

    2 weeks ago

    உங்கள் வீட்டில் செல்வம், அதிர்ஷ்டம், சந்தோஷம் பெருக இந்த 3 விஷயங்களை இப்போதே செய்யுங்கள்!

    வியாழக்கிழமைகளில் இவைகளைச் செய்தால் வீட்டில் செல்வம் கொட்டும். நவகிரகங்களில் குரு மிகவும் முக்கியமானவராகவும், சிறப்பானவராகவும் கருதப்படுகிறார். ஒருவரது ஜாதகத்தில் குரு… Read More

    3 weeks ago