மகரம் ராசி சனிப்பெயர்ச்சி பலன்கள் (magaram rasi sani peyarchi palangal 2020)
ராசி கட்டத்தில் பத்தாவது ராசியான மகர ராசி நேயர்கள், சனியை ராசிநாதனாக கொண்டவர்கள்.. இதன் சின்னம்.. கடல்குதிரை என்னும் மகரமீன் ஆகும்.. எனவே இவர்கள் மிகவும் அழுத்தமானவர்கள்… கடலின் ஆழத்தை கூட கண்டுபிடித்து விடலாம் .ஆனால் இவர்களின் மனதிற்குள் இருப்பதை யாராலும் கண்டுபிடிக்க முடியாது.. இவர்களிடம் ரகசியம் தங்கும்…
கடந்த மூன்று வருடங்களாக மகர ராசிகாரர்கள் ஏகப்பட்ட செலவுகளை எதிர்கொண்டு வாழ்ந்து வந்திருப்பர். எதைத் தொட்டாலும் வீண்விரயம் தான் என்ற நிலை அவர்களுக்கு இருந்து வந்திருக்கும். இந்த சனிப் பெயர்ச்சியில் சனி பகவான் தனுசு ராசியில் இருந்து மகரத்திற்கு இடப்பெயர்ச்சி ஆகின்றார். இனி வரப்போகும் காலகட்டத்தில் உங்களது செலவுகள் சிறிது குறைக்கபடுமே தவிர முற்றிலுமாக நீங்காது. உங்களுக்கு இனி வரப்போகும் காலம் ஜென்மச்சனி காலமாக இருக்கப்போகிறது. இந்த சனிப் பெயர்ச்சியில் உங்களது இராசியில் அமரப்போகும் சனிபகவான் உங்களது உடல் நலனில் பிரச்சனைகளை ஏற்படுத்துவார். உங்களது ஆரோக்கியத்தில் எவ்வளவுதான் அக்கறை எடுத்துக் கொண்டாலும் அவ்வப்போது சில பிரச்சினைகள் வரும். மனதைரியம் குறைவது போல ஒரு சூழ்நிலை ஏற்படும். இதுநாள் வரை எல்லா பிரச்சினைகளையும் தன்னம்பிக்கையோடும் தைரியத்தோடும் எதிர்கொண்ட நீங்கள் சற்று தடுமாறுவார்கள். பயம் வேண்டாம். சனி பகவான் உங்களுக்கு பல கஷ்டங்களைக் கொடுத்து வந்தாலும் அதற்கான தீர்வையும் கொடுத்துவிடுவார் என்பதை மறந்து விடாதீர்கள். குடும்பத்தில் அடிக்கடி பிரச்சனைகள் வரவாய்ப்பு உள்ளது. கணவன் மனைவி இடையே பிரச்சினைகள் ஏற்பட்டாலும் வாக்கு வாதத்தில் ஈடுபடாமல் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. வீட்டில் இருக்கும் பெண்களுக்கு எப்படிப்பட்ட பிரச்சனை வந்தாலும் பொறுமை காப்பது அவசியம். பெண்களுக்கு உடல்நிலை சரியில்லை என்றால் உடனே மருத்துவரை அணுகுவது நல்லது. கவனிக்காமல் விட்டுவிட்டால் பிரச்சினை பெரிதாகிவிடும்.
வேலை தேடுபவர்களுக்கு
உங்கள் மனதிற்கு பிடித்த வேலை கிடைக்குமா என்றால் அது சந்தேகம்தான். கொஞ்சம் கஷ்டமான சூழ்நிலையில் தான் வேலை கிடைக்கும். அப்படி இருக்கும் பட்சத்தில் நீங்கள் எதிர்பார்த்த பதவி இல்லை, சம்பளம் இல்லை என்று அந்த வேலையை நிராகரிக்க வேண்டாம். கிடைத்த வேலையை மனதார ஏற்றுக்கொண்டு செய்தால் மட்டுமே வரும் கஷ்டத்தில் இருந்து தப்பித்துக்கொள்ள முடியும். உங்களுக்கு புதியதாக கிடைக்கும் வேலையில் அதிகமாக கெட்ட பெறுவதற்கு கூட வாய்ப்பு உள்ளது. பொறுமையை கடைபிடியுங்கள் பின்னால் வெற்றி காத்திருக்கின்றது என்பதை மறக்காதீர்கள்.
வேலை செய்து கொண்டிருப்பவர்களுக்கு
உங்கள் உடன் வேலை செய்பவர்கள் உங்களுக்கு ஒத்துழைப்பு கொடுப்பது போல் இருந்தாலும் பின்னால் உங்களைப் பற்றி தவறாகப் பேசுவார்கள். சக ஊழியர்களிடம் உஷாராக இருப்பது நல்லது. வேலை செய்யும் இடத்தில் எப்படிப்பட்ட பிரச்சனை வந்தாலும் மௌனம் ஒன்றே பதிலாக கொடுங்கள். அந்த பிரச்சினைக்கு நிச்சயம் நீங்கள் காரணமாக இருக்க மாட்டீர்கள். ஆனால் உங்களின் மீது வரும் அந்த பழி கூடிய விரைவில் விலகும். அனாவசிய பேச்சில் ஈடுபடவேண்டாம்.
மாணவர்கள்
மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் குறைவதற்கு வாய்ப்பு உள்ளது. தேவையற்ற மற்ற விஷயங்களில் கவனத்தை செலுத்தாமல் படிப்பில் மட்டும் அதிக கவனம் செலுத்தி படிப்பது நல்லது. உயர்கல்வி படிக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு நீங்கள் விரும்பிய படிப்பினை படிக்க இடம் கிடைப்பது கொஞ்சம் கஷ்டமான விஷயம்தான். எக்காரணத்தைக் கொண்டும் சோம்பேறித் தனத்திற்கு இடம் கொடுக்காதீர்கள்.
திருமணம்
வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெற வேண்டுமென்றால் இன்னும் சில காலம் காத்திருப்பது நல்லது. ஏழரைச் சனியில் திருமணம் நடக்கும் பட்சத்தில் கணவன் மனைவிக்கிடையே பிரிவு ஏற்பட வாய்ப்பு உள்ளதால் திருமணத்தை தள்ளி வைப்பது நன்மை தரும். திருமணம் நடத்தியே ஆக வேண்டும் என்ற கட்டாயம் உள்ளவர்களாக இருந்தால், பல தடைகளை இன்னல்களை தாண்ட வேண்டியதாக இருக்கும்.
சொந்தத் தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு
நீங்கள் செய்யும் தொழில் தனிநபர் தொழிலாக இருந்தால் எந்த பிரச்சனையும் வராது. நீங்கள் பங்குதாரர்களுடன் சேர்ந்து செய்யும் தொழிலாக இருந்தால் உங்களது பங்குதாரரிடம் உஷாராக இருப்பது நல்லது. நீங்கள் அவர்களிடம் ஏமாறுவதற்கு கூட வாய்ப்புகள் அதிகம் உள்ளது. கடன் வாங்கி அகலகால் வைக்க வேண்டாம். இந்த சமயத்தில் வாங்கப்படும் கடனை திருப்பிக் கொடுப்பது மிகவும் கஷ்டமாகி விடும்.
பரிகாரம்
சனிக்கிழமைகளில் பெருமாளையும் செவ்வாய்க்கிழமைகளில் முருகனை வழிபடுவது நன்மை தரும். உங்களால் முடிந்தால் சுமங்கலிப் பெண்களுக்கு ரவிக்கை துணியையும், சிறிய குழந்தைகளுக்கும் வளையல், பொட்டு, ரிப்பன் போன்ற அழகு சாதனப் பொருட்களை தானமாக கொடுக்கலாம்
மேஷம் சனிப்பெயர்ச்சி பலன்கள் 2020-2023 | ரிஷபம் சனிப்பெயர்ச்சி பலன்கள் 2020-2023 | மிதுனம் சனிப்பெயர்ச்சி பலன்கள் 2020-2023 | கடகம் சனிப்பெயர்ச்சி பலன்கள் 2020-2023 | சிம்மம் சனிப்பெயர்ச்சி பலன்கள் 2020-2023 | கன்னி சனிப்பெயர்ச்சி பலன்கள் 2020-2023 | துலாம் சனிப்பெயர்ச்சி பலன்கள் 2020-2023 | விருச்சிகம் சனிப்பெயர்ச்சி பலன்கள் 2020-2023 | தனுசு சனிப்பெயர்ச்சி பலன்கள் 2020-2023 | மகரம் சனிப்பெயர்ச்சி பலன்கள் 2020-2023 | கும்பம் சனிப்பெயர்ச்சி பலன்கள் 2020-2023 | மீனம் சனிப்பெயர்ச்சி பலன்கள் 2020-2023
பக்தியோடு பக்தர்களால் சுற்றிக் கும்பிடப்படும் நிகழ்வு மலைவலம் அல்லது கிரிவலம் எனப்படும். கிரி என்றால் மலை ; வலம் என்றால் சுற்றுதல்… Read More
Today Rasi Palan in Tamil | இன்றைய இராசிப்பலன் Join our 3rd WhatsApp group … Read More
வைகாசி விசாகம் விரதமுறை மற்றும் பலன்கள் | Vaikasi Visakam Fasting Benefits வைகாசி விசாகம் (Vaikasi Visakam) விரதம்… Read More
செல்வ வளம் தரும் சித்ரா பவுர்ணமி::°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°ஒவ்வொரு மாதமுமே பவுர்ணமி வரும். ஆனால் மற்ற எந்தப் பவுர்ணமிக்கும் இல்லாத சிறப்பு, சித்ரா… Read More
🌻🙏ஶ்ரீ நரசிம்மர் ஜெயந்தி ஸ்பெஷல் (4/5/23, வியாழக் கிழமை) 🌻🕉️ 🍒ஶ்ரீ லக்ஷ்மீந்ருஸிம்ஹ பரப்ரஹ்மணே நம🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾 🌹 ஸ்ரீ லக்ஷ்மி… Read More
அட்சய திரிதியை பூஜை முறையும் பலனும் Akshaya Tritiya benefits சித்திரை (10) நாள் 23.4.2023 ஞாயிற்றுக்கிழமை அட்சய திருதியை… Read More
Leave a Comment