Subscribe for notification
Events

Thanusu sani peyarchi palangal 2020-23 | தனுசு ராசி சனிப்பெயர்ச்சி பலன்கள்

Thanusu rasi sani peyarchi palangal 2020-2023

தனுசு ராசி சனிப்பெயர்ச்சி பலன்கள்.. (Thanusu sani peyarchi palangal 2020-23)

தனுசு

தனுசு ராசி, ராசி கட்டத்தில் ஒன்பதாவது ராசி. இதன் அதிபதி குரு பகவான்.இதன் சின்னம் பாதி மனித முகமும், பாதி குதிரை உடலும் கொண்டு, கையில் வில் அம்பை ஏந்தியிருப்பது இருப்பது இதன் சின்னமாகும் .. உங்கள் ராசியின் ராசி நாதன் குரு பகவான் என்பதால், குருபகவான் ஒரு பிராமண கிரகம் என்பதால் ,தனுசு ராசியில் பிறந்தவர்கள் யாரையும் கெடுக்க மாட்டார்கள். தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பவர்கள்… பிறருக்கு உதவி செய்யும் குணம் கொண்டவர்கள்… வில்லிலிருந்து புறப்படும் அம்பு எப்படி இலக்கை போய் சரியாகஅடையுமோ?? அதுபோல ,இவர்கள் எடுத்த காரியத்தை முடித்து விட்டுத்தான் வேறு ஜோலி பார்ப்பார்கள்.

சுறுசுறுப்பு மிக்கவர்கள் ..குதிரையின் கம்பீரத்தை கொண்டவர்கள்.. தனது மதிப்பு மரியாதை ,அந்தஸ்துக்கு பாதிப்பு வரக் கூடிய எந்த ஒரு இழிவான செயலையும் இந்த தனுசு ராசிக்காரர்கள் செய்ய மாட்டார்கள் …இவர்களுக்கு பணம் வேண்டுமா ?புகழ் வேண்டுமா? என்று கேட்டால் புகழ் வேண்டும் என்பவர்கள் இந்த தனுசு ராசிக்காரர்கள்.

🏹கடந்த ஐந்து வருடங்களாக உங்கள் வாழ்க்கையில் பல கஷ்டங்களை எதிர்கொண்டு வாழ்ந்து இருப்பீர்கள். உடல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் அதிகமாக இருந்திருக்கும். இந்த சனிப் பெயர்ச்சியில் சனி பகவான் உங்கள் ராசிக்கும் இரண்டாம் வீடான மகர ராசிக்கு பெயர்ச்சியாகிறார். தனுசு ராசிக்கு பாதச்சனி நடக்கப்போகும் காலமிது. பேசும் வார்த்தையில் அதிக கவனம் தேவை. குடும்பத்தில் உறவினர்களிடையே அனுசரித்து செல்வது நல்லது. கடந்த வருடங்களில் இருந்த கஷ்டமானது இந்த சனிப் பெயர்ச்சி மூலம் சற்று தனியும். அதிகப்படியான பயம் வேண்டாம். தனுசு ராசிக்காரர்களின் தாய்க்கு உடல்நிலை சரியில்லாமல் போவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. வருமானத்தில் தடை ஏற்படும். சங்கடங்கள் உண்டாகும். குடும்பத்தில் குழப்பமான சூழ்நிலை ஏற்படும்போது நிதானமாக யோசித்து முடிவு எடுக்க வேண்டிய காலமிது. எவ்வளவு பெரிய பிரச்சனையாக இருந்தாலும் மௌனத்தையே பதிலாக கொடுங்கள். அவசரப்பட்டு வார்த்தையை விட்டுவிட வேண்டாம். குடும்பத்தில் உள்ள பெண்களுக்கு தங்கள் குழந்தைகளின் மூலம் சந்தோஷமான சூழ்நிலை நிலவும். பயணங்களின்போது கவனமாக இருப்பது நல்லது. குறிப்பாக காலில் அடி படுவதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளது.

 

🏹வேலை தேடுபவர்களுக்கு

 

🏹இதுநாள்வரை வேலை இல்லாமல் கஷ்டப்பட்டு கொண்டிருந்தவர்களுக்கு இந்த சனிப் பெயர்ச்சியின் மூலம் வேலை கிடைக்கும். ஆனால் என்ன வேலை கிடைக்கின்றதோ அதை உங்கள் மனதார ஏற்றுக் கொள்வது நல்லது. சம்பளம் குறைவாக இருந்தாலும், கிடைக்கும் வேலைக்கு செய்தால் பாதிப்பில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம். ஏழரைச் சனியில் வேலை கிடைப்பது மிக கஷ்டம். மனதிற்குப் பிடித்த வேலை தான் கிடைக்க வேண்டுமென்று,  கிடைத்த வேலைக்கு செல்லாமல் இருந்து விடாதீர்கள். வேலையே இல்லாமல் இருப்பதற்கு ஏதோ ஒரு வேலைக்கு செல்வது நல்லது என்று நினைத்துக் கொள்ளுங்கள்.

 

🏹வேலை செய்து கொண்டிருப்பவர்களுக்கு

 

உங்கள் அலுவலகத்தில் நீங்கள் எவ்வளவுதான் வேலை செய்தாலும் நல்ல பெயர் கிடைப்பது கொஞ்சம் கஷ்டம்தான். நீங்கள் செய்த வேலைக்கு ஊதியம் குறைவாகத்தான் கிடைக்கும். நிறைய சங்கடங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இருந்தாலும் பொறுமையோடு செயல்பட வேண்டிய காலம் இது. வேலைப்பளு அதிகமாக உள்ளது என்று வேலையை விட்டு விட வேண்டும் என்ற எண்ணம் மட்டும் உங்களுக்கு வரவே கூடாது. உங்களது கடமையை தொடர்ந்து செய்துவாருங்கள் பலன் தானாகவே கிடைக்கும்.

 

🏹மாணவர்கள்

 

🏹உங்கள் ராசியில் இருக்கும் குருவின் பார்வை ஐந்தாமிடத்தில் விழுகிறது. படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உங்கள் உடன் படிக்கும் மாணவர்களிடம் அனாவசியமாக எந்த பேச்சுவார்த்தையும் வைத்துக்கொள்ள வேண்டாம். நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருந்தால் எந்த பிரச்சனையும் வராது. பெற்றோர்கள் சொல்லையும், ஆசிரியர்களின் சொல்லையும் கேட்டு நடப்பது மாணவர்களுக்கு நன்மை தரும். விதண்டாவாதம் வேண்டாம்.

 

🏹திருமணம்

 

🏹இந்த சமயத்தில் திருமண பேச்சுவார்த்தையை சற்று தள்ளிப்போடுவது நன்மை தரும். சுப நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் என்றால் பல வகையான தடங்கல்களை கடந்து செல்லவேண்டியிருக்கும். கணவன்-மனைவி இடையே விரிசல் உண்டாக வாய்ப்பு உள்ளது. பிரச்சனை என்று வரும் போது விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது.

 

🏹சொந்த தொழில் மற்றும்

வியாபாரம்

 

🏹செய்பவர்களுக்கு

சனிபகவான் இரண்டாம் இடத்தில் இருப்பதால் லாபம் குறைவாகத்தான் வரும். உங்கள் தொழிலில் யாரை நம்பியும் கடனாக பணத்தையோ, பொருளையோ கொடுக்கவேண்டாம். நிச்சயம் நீங்கள் கடனாக கொடுக்கும் அந்த பொருளானது உங்களுக்கு திரும்ப வராது. ‘வியாபாரத்தில் உங்களுக்கு உதவியாக இருப்பேன்’ என்று வருபவர்களை முழுமையாக நம்பி விடாதீர்கள். புதிய முதலீடு செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை முற்றிலுமாக தவிர்த்து விடுங்கள்.

🏹பரிகாரம்

🏹சனிக்கிழமை தோறும் எள் கலந்த சாதத்தை காகத்திற்கு காலையில் வைப்பது நல்ல பலனைக் கொடுக்கும். உங்களால் முடிந்தால் ஏழை பெண் குழந்தைகளுக்கு படிப்பதற்கான சிறு சிறு உதவிகளை செய்து வரலாம்.

மேஷம் சனிப்பெயர்ச்சி பலன்கள் 2020-2023 | ரிஷபம் சனிப்பெயர்ச்சி பலன்கள் 2020-2023 | மிதுனம் சனிப்பெயர்ச்சி பலன்கள் 2020-2023 | கடகம் சனிப்பெயர்ச்சி பலன்கள் 2020-2023 | சிம்மம் சனிப்பெயர்ச்சி பலன்கள் 2020-2023 | கன்னி சனிப்பெயர்ச்சி பலன்கள் 2020-2023 | துலாம் சனிப்பெயர்ச்சி பலன்கள் 2020-2023 | விருச்சிகம் சனிப்பெயர்ச்சி பலன்கள் 2020-2023 | தனுசு சனிப்பெயர்ச்சி பலன்கள் 2020-2023 | மகரம் சனிப்பெயர்ச்சி பலன்கள் 2020-2023 | கும்பம் சனிப்பெயர்ச்சி பலன்கள் 2020-2023 | மீனம் சனிப்பெயர்ச்சி பலன்கள் 2020-2023

Share
ஆன்மிகம்

Published by
ஆன்மிகம்
  • Recent Posts

    Thirumeeyachur lalithambigai temple | திருமீயச்சூர் ஸ்ரீலலிதாம்பாள் திருக்கோயில்

    Thirumeeyachur lalithambigai temple பூர்வ ஜென்மத்தில் புண்ணியம் செய்தால் தான் வரமுடியும்... திருமீயச்சூர் ஸ்ரீலலிதாம்பாள் திருக்கோயில்... ஸ்ரீலலிதாம்பாள் எனும் இந்தத் திருநாமத்தில்… Read More

    1 week ago

    அன்பெனும் பிடியுள் பாடல் வரிகள் | Anbenum pidiyul lyrics in tamil

    Anbenum pidiyul lyrics in tamil வள்ளலாரின் புகழ் பெற்ற பாடல் வரிகள் அன்பெனும் பிடியுள் அகப்படும் மலையே அன்பெனும்… Read More

    2 weeks ago

    சென்னையின் நவக்கிரக ஸ்தலங்கள்

    சென்னையின் நவக்கிரக ஸ்தலங்கள்!!.. சென்னைக்கு அருகிலேயே பல ஆண்டுகளுக்கு முன்பே நமது முன்னோர்கள் நவக்கிரக ஸ்தலங்களை அமைத்துள்ளனர். சென்னைக்கு அருகிலுள்ள… Read More

    2 weeks ago

    தை அமாவாசை தினத்தின் சிறப்பு | thai amavasai special

    தை அமாவாசை முன்னிட்டு  செய்ய வேண்டிய பித்ரு கடமைகள் thai amavasai special...   அமாவாசை தினம் நமது சமயத்தில்… Read More

    3 weeks ago

    தைப்பூச விரதத்தை எளிமையான முறையில் வீட்டிலேயே கடைபிடிப்பது எப்படி?

    தைப்பூசம் தைப்பூசம் அன்று முருகப்பெருமானுக்கு விசேஷ பூஜைகள் செய்யப்படுகிறது தைப்பூச விரதத்தை எளிமையான முறையில் வீட்டிலேயே கடைபிடிப்பது எப்படி? 🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔… Read More

    4 weeks ago

    Today rasi palan 19/2/2025 in tamil | இன்றைய ராசிபலன் புதன்கிழமை மாசி – 7

    Today Rasi Palan in Tamil | இன்றைய இராசிப்பலன் இன்றைய பஞ்சாங்கம் _*பஞ்சாங்கம்*_ °°°°°°°°°°°°°° *மாசி - 07*… Read More

    19 hours ago