Mesha rasi guru peyarchi palangal 2018-19

மேஷ ராசி பலன்கள்

குருப்பெயர்ச்சி பலன்கள் 2020-21

மேஷம் குருப்பெயர்ச்சி பலன்கள் 2020 | ரிஷபம் குருப்பெயர்ச்சி பலன்கள் 2020 | மிதுனம் குருப்பெயர்ச்சி பலன்கள் 2020 | கடகம் குருப்பெயர்ச்சி பலன்கள் 2020 | சிம்மம் குருப்பெயர்ச்சி பலன்கள் 2020 | கன்னி குருப்பெயர்ச்சி பலன்கள் 2020 | துலாம் குருப்பெயர்ச்சி பலன்கள் 2020 | விருச்சிகம் குருப்பெயர்ச்சி பலன்கள் 2020 | தனுசு குருப்பெயர்ச்சி பலன்கள் 2020 | மகரம் குருப்பெயர்ச்சி பலன்கள் 2020 | கும்பம் குருப்பெயர்ச்சி பலன்கள் 2020 | மீனம் குருப்பெயர்ச்சி பலன்கள் 2020

108 குரு பகவான் போற்றி 

ஶ்ரீ குரு ஸ்தோத்ரம் பாடல் வரிகள்

குரு பகவானுக்குரிய திருத்தலங்கள்

குருப்பெயர்ச்சி பலன்கள் 2019-20

இந்த குருப்பெயர்ச்சி சற்று போராடி புதிய முயற்சிகளை முடிக்க வைப்பதாக அமையும்.

50 % to 60 %

பரிகாரம்

வியாழக்கிழமை தோரும் குருபகவானையும், தட்சிணாமூர்த்தியையும் கொண்டைக்கடலை மாலை சாற்றி, மஞ்சள் நிற பூக்களை சமர்ப்பித்து, நெய் தீபம் ஏற்றி வழிபடுவது சிறந்த பரிகாரம் ஆகும். சனி பகவானுக்கும் சனிக்கிழமைகளில் எள் தீபம் ஏற்றி வழிபடுவது நல்லது. தினந்தோறும் விநாயக பெருமானை வழிபட்டு வர நன்மைகள் நடக்கும்.

கரூர் மாவட்டம் வெண்ணெய்மலை என்ற ஊரில் அருள்பாலிக்கும் ஶ்ரீபாலசுப்பிரமணியரை கிருத்திகையன்று நெய்தீபம் ஏற்றி வழிபடவும்.

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் எனும் ஊரில் அருட்பாலித்துக் கொண்டிருக்கும் ஸ்ரீசுப்ரமணிய சுவாமியை கிருத்திகை நட்சத்திரம் நடைபெறும் நாளில் சென்று வணங்குங்கள்.

பிரச்னைகளை சமாளிக்கும் மன தைரியம் கொண்ட நீங்கள், மனசாட்சிக்கு விரோதமாக எதையும் செய்யத் த்தயங்குவீர்கள். வாழ்க்கை வாழ்வதற்கே என்பதை அறிந்த நீங்கள், சோதனைகளையும் சாதனைகளாக மாற்றி முன்னேறத் துடிப்பவர்கள். இதுவரை உங்கள் ராசிக்கு 7ம் வீட்டில் அமர்ந்து ஓரளவு உங்களை சாதிக்க வைத்ததுடன், வசதி, வாய்ப்புகளையும் தந்த உங்கள் பாக்யாதிபதியாகிய குருபகவான் 04.10.2018 முதல் 28.10.2019 வரை உங்கள் ராசிக்கு 8ம் வீட்டில் மறைவதால் எதையும் சமாளிக்கும் சாமர்த்தியத்தையும், மனப்பக்குவத்தையும் தருவார். அலைச்சலுடன் ஆதாயமும் கிடைக்கும். பயணங்களும், தவிர்க்க முடியாத செலவுகளும் துரத்தும்.

மறைமுக எதிரிகளால் ஆதாயமடைவீர்கள். வேலைச்சுமையால் தூக்கம் குறையும். கனவுத் தொல்லைகளும் அவ்வப்போது வந்து நீங்கும். எல்லாப் பிரச்னைகளுக்கும் மற்றவர்களை நீங்கள் காரணம் கூறுவது அவ்வளவு நல்ல தல்ல. ஒரே நேரத்தில் இரண்டு, மூன்று வேலைகளை சேர்த்துப் பார்க்க வேண்டி வரும். சொத்துக்கான வரியை செலுத்தி சரியாக பராமரியுங்கள். தாயாரின் உடல் நிலை பாதிக்கும். வாகனத்திற்கான லைசன்ஸ், இன்ஸ்யூரன்ஸை குறிப்பிட்ட காலத்திற்குள் புதுப்பிக்கத் தவறாதீர்கள். அபராதம் கட்ட வேண்டி வரும். சிறுசிறு விபத்துகள் ஏற்படக்கூடும். யாரை நம்புவது என்கிற குழப்பத்திற்கு ஆளாவீர்கள்.

 

குருபகவானின் பார்வை பலன்கள்

குருபகவான் 2ம் வீட்டை பார்ப்பதால் பணப்புழக்கம் கணிசமாக உயரும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். வீடு கட்ட சி.எம்.டி.ஏ., எம்.எம்.டி.ஏ ப்ளான் அப்ரூவலாகி வரும். அரசால் அனுகூலம் உண்டு. பூர்வீக சொத்து கைக்கு வரும். சுப aநிகழ்ச்சிகளால் வீடு களை கட்டும். குழந்தை பாக்யம் கிடைக்கும். குரு உங்கள் சுக ஸ்தானத்தைப் பார்ப்பதால் தாயாரின் ஆரோக்யம் சீராகும். அவருடனான மனத்தாங்கல் நீங்கும். தாய்வழி சொத்து சம்பந்தப்பட்ட வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். உறவினர், நண்பர்கள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். உங்களுடைய படைப்புகள் தொலைக்காட்சி, வானொலி, செய்தி தாள்களில் வருவதற்கு வாய்ப்பிருக்கிறது. பிள்ளைகளின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளுங்கள். குரு 12ம் வீட்டை பார்ப்பதால் புகழ் பெற்ற புண்ணிய தலங்களுக்குச் சென்று வருவீர்கள். ஒரு சொத்தை விற்று மற்றொன்று வாங்குவீர்கள்.

 

குருபகவானின் நட்சத்திர சஞ்சாரம்

04.10.2018 முதல் 20.10.2018 வரை உங்களின் பாக்யவிரயாதிபதியான குருபகவான் தன் சாரமான விசாகம் நட்சத்திரத்தில் செல்வதால் அடுத்தடுத்து சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். வி.ஐ.பிகளின் நட்பு கிடைக்கும். தந்தையார் ஆதரவாக இருப்பார். அவர்வழி உறவினர்களும் உதவிகரமாக இருப்பார்கள். பிதுர்வழி சொத்து கைக்கு வரும். வழக்கு சாதகமாகும். புது வேலை கிடைக்கும். 21.10.2018 முதல் 19.12.2018 வரை உங்களின் ஜீவனாதிபதியும்லாபாதிபதியான சனி பகவானின் அனுஷம் நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் வேலைச்சுமை, பணப்பற்றாக்குறை, இனந்தெரியாத கவலைகள், குடும்பத்தில் சலசலப்பு, உத்யோகத்தில் எதிர்ப்புகள் வந்து செல்லும்.

வேற்றுமதத்தைச் சேர்ந்த நண்பர்களால் ஆதாயமடைவீர்கள். அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். மூத்த சகோதரங்கள் உதவுவார்கள். 20.12.2018 முதல் 12.03.2019 வரை மற்றும் 09.08.2019 முதல் 27.10.2019 வரை உள்ள காலகட்டங்களில் உங்களின் சேவகாதிபதியும்சஷ்டமாதிபதியுமான புதனின் கேட்டை நட்சத்திரத்தில் செல்வதால் வீண் செலவுகள், சிறுசிறு விபத்துகள், உங்களைப் பற்றிய வதந்திகள், பழைய கடனை நினைத்து அச்சம், இளைய சகோதர வகையில் மனத்தாங்கல்கள் வந்து செல்லும். வங்கிக் காசோலையில் முன்னரே கையொப்பமிட்டு வைக்காதீர்கள்.

 

குருபகவானின் அதிசார வக்ர சஞ்சாரம்

13.03.2019 முதல் 18.05.2019 வரை குருபகவான் அதிசாரத்தில் ராசிக்கு 9ம் வீட்டில் கேதுவின் நட்சத்திரமான மூலம் நட்சத்திரத்தில் செல்வதால் சூழ்ச்சிகளை முறியடித்து வெற்றி பெறுவீர்கள். பிதுர்வழி சொத்து கைக்கு வரும். அரசாங்க விஷயம் உடனே முடியும். தந்தையார் உறுதுணையாக இருப்பார். அவரின் உடல் நிலையும் சீராகும்.

 

குருபகவானின் வக்ர சஞ்சாரம்

10.04.2019 முதல் 18.5.2019 வரை மூலம் நட்சத்திரத்தில் வக்ர கதியிலும் மற்றும் 19.05.2019 முதல் 08.08.2019 வரை கேட்டை நட்சத்திரத்திலும் வக்ர கதியில் செல்வதால் அக்காலக்கட்டத்தில் அரைகுறையாக நின்ற வேலைகள் முடிவடையும். குடும்பத்தில் ஓரளவு நிம்மதி உண்டு. பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்ய உதவிகள் கிடைக்கும். குழந்தை பாக்யம் உண்டு. மனைவிவழியில் இருந்த மோதல்கள் விலகும். அரைகுறையாக நின்ற வீடு கட்டும் பணியை தொடங்குவீர்கள்.

வியாபாரிகளுக்கு:

அலுவலகத்தில் பணிகளில் அலட்சியம் வேண்டாம். மற்றவர்களின் வேலைகளையும் சேர்த்துப் பார்க்கவேண்டி வரும். உயரதிகாரிகள் உங்களைப் புரிந்துகொள்ள மாட்டார்கள். உங்கள் தவறுகளைச் சுட்டிக்காட்டினால் பொறுமையாக ஏற்றுக்கொள்ளுங்கள். உங்களை விட வயதிலும் அனுபவத்திலும் குறைவானவர்களிடமும் பணிந்து செல்லவேண்டிய நிலை ஏற்படும். சிலருக்கு விரும்பத் தகாத இடமாற்றம் உண்டாகும். சிலருக்கு வெளிநாடு செல்லவேண்டிய வாய்ப்பு ஏற்படும்.

 

மாணவர்களுக்கு:

பாடங்களில் கூடுதல் கவனம் தேவை. அன்றன்றைய பாடங்களை அன்றே படிப்பது நல்லது. விளையாட்டுப் போட்டிகளில் கவனமாக ஈடுபடவும். சக மாணவர்களிடம் எச்சரிக்கையுடன் பழகவேண்டியது அவசியம்.

 

கலைத்துறையினருக்கு:

சின்னச் சின்ன வாய்ப்புகளைக்கூட போராடித்தான் பெறவேண்டி வரும். மூத்த கலைஞர்களை அனுசரித்துச் செல்லவும்.

குருப்பெயர்ச்சி பலன்கள் 2020-21

மேஷம் | ரிஷபம் | மிதுனம் | கடகம் | சிம்மம் | கன்னி | துலாம் | விருச்சிகம் | தனுசு | மகரம் | கும்பம் | மீனம்

108 குரு பகவான் போற்றி 

ஶ்ரீ குரு ஸ்தோத்ரம் பாடல் வரிகள்

குரு பகவானுக்குரிய திருத்தலங்கள்

குருப்பெயர்ச்சி பலன்கள் 2019-20

#குருப்பெயர்ச்சி பலன்கள் 2019-20

5/11/2019 அன்று நடைபெறும் குருப்பெயர்ச்சி பலன்கள் 2019-2020

http://bit.ly/gurupeyarchi19-20

மேஷம்http://bit.ly/mesham

ரிஷபம்http://bit.ly/rishabam

மிதுனம்http://bit.ly/mithunam

கடகம்http://bit.ly/kadagam

சிம்மம்http://bit.ly/simmam

கன்னிhttp://bit.ly/kannirasi

துலாம்http://bit.ly/thulam

விருச்சிகம்http://bit.ly/viruchigam

தனுசுhttp://bit.ly/thanusu

மகரம்http://bit.ly/magaram

கும்பம்http://bit.ly/kumbam

மீனம்http://bit.ly/meenamrasi

 

2018-19

மேஷம் – https://bit.ly/2RnZj3m

ரிஷபம் – https://bit.ly/2ycoVYe

மிதுனம் – https://bit.ly/2xWDPT1

கடகம் – https://bit.ly/2P41TKd

சிம்மம் – https://bit.ly/2O7a7oz

கன்னி – https://bit.ly/2QxXaRJ

துலாம் – https://bit.ly/2Nke1Fp

விருச்சிகம் – https://bit.ly/2zPM8l1

தனுசு – https://bit.ly/2zQ3gHf

மகரம் – https://bit.ly/2zQ54Ad

கும்பம் – https://bit.ly/2y0mngu

மீனம்- https://bit.ly/2NkdFyz

Leave a Comment