Chellatha Chella Mariatha Lyrics in Tamil

செல்லாத்தா செல்ல மாரியாத்தா பாடல் வரிகள் (Chellatha chella mariatha lyrics in tamil)…  இந்த பதிவில் உள்ள பாடல் வரிகள் திருமதி LR ஈஸ்வரி அவர்கள் பாடிய பாடலின் முழு பாடல் வரிகள் ஆகும்… இந்த பாடலின் காணொளியும் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது…

ஆத்தாளை எங்கள் அபிராமவல்லியை அண்டம் எல்லாம்
பூத்தாளை மாதுளம் பூ நிறத்தாளை புவி அடங்கக்
காத்தாளை ஐங்கணைப் பாசாங்குசமும் கரும்புவில்லும் அங்கை
சேர்த்தாளை முக்கண்ணியைத் தொழுவார்க்கு ஒரு தீங்கும் இல்லையே…
தேவி கருமாரி அம்மனை தொழுவார்க்கும் ஒரு தீங்கும் இல்லையே…

செல்லாத்தா செல்ல மாரியாத்தா பாடல் வரிகள்

செல்லாத்தா செல்ல மாரியாத்தா
எங்கள் சிந்தையில் வந்து அரை வினாடி நில்லாத்தா

கண்ணாத்தா உன்னைக் காணாட்டா
இந்த கண்களிருந்து என்ன புண்ணியம் சொல்லாத்தா
உந்தன் பெருமையை இந்த உலகுக்கு எடுத்து பாடாட்டா
இந்த ஜென்மமெடுத்து என்ன பயனென்று சொல்லடி நீயாத்தா

செல்லாத்தா செல்ல மாரியாத்தா
எங்கள் சிந்தையில் வந்து அரை வினாடி நில்லாத்தா

ஆசை தீர உன் அழகை பார்த்து மாரியாத்தா
அந்த பாசத்தோடு வந்தேன் அடி தாயே மாரியாத்தா

ஆசை தீர உன் அழகை பார்த்து மாரியாத்தா
அந்த பாசத்தோடு வந்தேன் அடி தாயே மாரியாத்தா

பொன்னும் பொருளும் தந்தருள்வாய் கருமாரியாத்தா
பொன்னும் பொருளும் தந்தருள்வாய் கருமாரியாத்தா
என்னை புகழோடு வைத்துடுவாய் ஆதி சக்தி மாதா
என்னை புகழோடு வைத்துடுவாய் ஆதி சக்தி மாதா

அம்மா… அம்மா…….

தென்னமரத் தோப்பினிலே தேங்காயப் பறிச்சிகிட்டு (2)
தேடி வந்தோம் உந்தனையே சின்னாத்தா….
நீ இளநீரை எடுத்துகிட்டு எங்க குறை கேட்டுபுட்டு (2)
வளமான வாழ்வு கொடு மாரியாத்தா – நல்ல
வழி தன்னையே காட்டிவிடு மாரியாத்தா…

உந்தன் பெருமையை இந்த உலகுக்கு எடுத்து பாடாட்டா
இந்த ஜென்மமெடுத்து என்ன பயனென்று சொல்லடி நீயாத்தா…

ஆயிரங்கண் உடையவளே செல்லாத்தா….
மக்களை ஆதரிக்க வேண்டுமடி செல்லாத்தா ….
ஆயிரங்கண் உடையவளே செல்லாத்தா….
மக்களை ஆதரிக்க வேண்டுமடி செல்லாத்தா ….

this song lyrics is originally posted in aameegam.co.in

திரிசூலமுடன் வீற்றிருக்கும் செல்லாத்தா…
திரிசூலமுடன் வீற்றிருக்கும் செல்லாத்தா…
பாமாலை உனக்கு பாடிடுவேன் செல்லாத்தா…
பாமாலை உனக்கு பாடிடுவேன் செல்லாத்தா…

பசும்பாலைக் கறந்துகிட்டு கறந்தபால எடுத்துகிட்டு (2)
புற்றினிலே ஊற்ற வந்தோம் மாரியாத்தா
நாங்க பக்தியுடன் ஊற்ற வந்தோம் மாரியாத்தா….
நீ பாம்பாக மாறி……

அம்மா தாயே கருமாரி அருள்புரிவாயே சுகுமாரி
அம்மா தாயே கருமாரி அருள்புரிவாயே சுகுமாரி
அம்மா தாயே கருமாரி… அருள்புரிவாயே சுகுமாரி
அம்மா தாயே கருமாரி… அருள்புரிவாயே சுகுமாரி
அம்மா தாயே கருமாரி அருள்புரிவாயே சுகுமாரி
அம்மா தாயே கருமாரி அருள்புரிவாயே சுகுமாரி …..

this song lyrics is originally posted in aameegam.co.in

நீ பாம்பாக மாறி  அதைப் பாங்காகக் குடித்துவிட்டு
தானாக ஆடிவா நீ மாரியாத்தா
உந்தன் பெருமையை இந்த உலகுக்கு எடுத்து பாடாட்டா
இந்த ஜென்மமெடுத்து என்ன பயனென்று சொல்லடி நீயாத்தா…

கண்ணாத்தா உன்னைக் காணாட்டா
இந்த கண்களிருந்து என்ன புண்ணியம் சொல்லாத்தா

செல்லாத்தா செல்ல மாரியாத்தா
எங்கள் சிந்தையில் வந்து அரை வினாடி நில்லாத்தா

ஆதி சக்தி மாதா, கருமாரி மாதா – எங்கள்
ஆதி சக்தி மாதா, கருமாரி மாதா…

Chellatha Chella Mariatha Video song

துளசி ஸ்தோத்திரம் பாடல் வரிகள்

திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை 108 போற்றி

அனைத்து துயரங்களுக்கும் பரிகார காயத்ரி மந்திரம்

கற்பூர நாயகியே கனகவல்லி பாடல் வரிகள்

Leave a Comment