Kandha Sasti Kavasam Lyrics in Tamil, English & Meaning (கந்த சஷ்டி கவசம்)
கந்த சஷ்டி கவசம் பாடல் வரிகள் (Kandha sasti kavasam lyrics tamil) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது. முருகப்பெருமானை வழிபட மிக சிறந்த வழியாக இருப்பது இந்த சஷ்டியை நோக்க என தொடங்கும் கந்த சஷ்டி கவசம் முருகர் பாடல்… இதன் முழு பாடல் வரிகள் பின்வருமாறு… இந்த பாடலை நாம் பாடி முருகப்பெருமானின் அருளை பெறுவோம்…
குறள் வெண்பா
துதிப்போர்க்கு வல்வினைபோம்… துன்பம் போம்,
நெஞ்சில் பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக் கதித்து ஓங்கும்,
நிஷ்டையுங் கைகூடும்…
நிமலர் அருள், கந்தர் சஷ்டி கவசந் தனை….
காப்பு
அமரர் இடர்தீர அமரம் புரிந்த
குமரன் அடி நெஞ்சே குறி…
நூல்
சஷ்டியை நோக்க சரவணபவனார்
சிஷ்டருக் குதவும் செங்கதிர் வேலோன்
பாதமிரண்டில் பன்மணிச் சதங்கை
கீதம் பாட கிண்கிணி யாட(4) (இரண்டு முறை பாடவும்)
மையல் நடஞ்செய்யும் மயில்வாகனனார்
கையில் வேலால் எனைக் காக்கவென்றுவந்து
வர வர வேலா யுதனார் வருக
வருக வருக மயிலோன் வருக…. (8)
இந்திர முதலா எண்திசை போற்ற
மந்திர வடிவேல் வருக வருக..
வாசவன் மருகா வருக வருக,
நேசக் குறமகள் நினைவோன் வருக (12)
ஆறுமுகம் படைத்த ஐயா வருக
நீறிடும் வேலவன் நித்தம் வருக
சிரகிரி வேலவன் சீக்கிரம் வருக
சரஹணபவனார் சடுதியில் வருக….. (16)
ரஹண பவச ரரரர ரரர
ரிஹண பவச ரிரிரிரி ரிரிரி
விணபவ சரஹண வீரா நமோ நம
நிபவ சரஹண நிறநிற நிறென
வசர ஹணப வருக வருக
அசுரர் குடிகெடுத்த ஐயா வருக
என்னை ஆளும் இளையோன் கையில்
பன்னிரண்டா யுதம் பாச அங்குசமும் (24)
பரந்த விழிகள் பன்னிரண்டிலங்க
விரைந்தெனைக் காக்க வேலோன்வருக
ஐயும் கிலியும் அடைவுடன்செளவும்
உய்யொளி செளவும் உயிர் ஐயும் கிலியும்
கிலியும் செளவும் கிளரொளி ஐயும்
நிலை பெற் றென்முன் நித்தம் ஒளிரும்
சண்முகம் நீயும் தணியொளி யொவ்வும்
குண்டலி யாம் சிவ குகன்தினம் வருக (32)
ஆறுமுகமும் அணிமுடி ஆறும்
நீறிடு நெற்றியும் நீண்ட புருவமும்
பன்னிரு கண்ணும் பவளச் செவ்வாயும்
நன்னெறி நெற்றியில் நவமணிச் சுட்டியும்.
ஈராறு செவியில் இலகு குண்டலமும்
ஆறிரு திண்புயத் தழகிய மார்பில்
பல் பூஷணமும் பதக்கமும் தரித்து
நன்மணி பூண்ட நவரத்ன மாலையும்
முப்புரி நூலும் முத்தணி மார்பும்
செப்பழகுடைய திருவயிறு உந்தியும்
துவண்ட மருங்கில் சுடரொளிப் பட்டும்
நவரத்தினம் பதித்த நற்சீராவும்
இருதொடை அழகும் இணைமுழந்தாளும் (45)
திருவடி யதனில் சிலம்பொலி முழங்க
செககண செககண செககண செகண
மொகமொக மொகமொக மொகமொக மொகென
நகநக நகநக நகநக நகென
டிகுகுண டிகுடிகு டிகுகுண டிகுண (50)
ரரரர ரரரர ரரரர ரரர
ரிரிரிரி ரிரிரிரி ரிரிரிரி ரிரிரி
டுடுடுடு டுடுடுடு டுடுடுடு டுடுடு
டகுடகு டிகுடிகு டங்கு டிங்குகு
விந்து விந்து மயிலோன் விந்து
முந்து முந்து முருகவேள் முந்து (56)
என்றனை யாளும் ஏரகச் செல்வ
மைந்தன் வேண்டும் வரமகிழ்ந்து தவும்
லாலா லாலா லாலா வேசமும்
லீலா லீலா லீலா வினோதனென்று (60)
உன்திரு வடியை உருதி யென்றெண்ணும்
என்தலை வைத்துன் இணையடி காக்க
என் உயிர்க் குயிராம் இறைவன் காக்க
பன்னிரு விழியால் பாலனைக் காக்க
அடியேன் வதனம் அழகுவேல் காக்க (65)
பொடிபுனை நெற்றியைப் புனிதவேல் காக்க
கதிர்வேல் இரண்டும் கண்ணினைக் காக்க
விதிசெவி யிரண்டும் வேலவர் காக்க
நாசிகளிரண்டும் நல்வேல் காக்க
பேசிய வாய்தனைப் பெருவேல் காக்க
முப்பத் திருபல் முனைவேல் காக்க
செப்பிய நாவைச் செவ்வேல் காக்க (72)
கன்னமிரண்டும் கதிர்வேல் காக்க
என்னிளங் கழுத்தை இனியவேல் காக்க
மார்பை ரத்ன வடிவேல் காக்க
சேரிள முலைமார் திருவேல் காக்க
வடிவே லிருதோள் வளம்பெறக் காக்க
பிடரிக ளிரண்டும் பெருவேல் காக்க
அழகுடன் முதுகை அருள்வேல் காக்க
பழுபதி னாறும் பருவேல் காக்க (80)
வெற்றிவேல் வயிற்றை விளங்கவே காக்க
சிற்றிடை அழகுறச் செவ்வேல் காக்க
நாண் ஆம் கயிற்றை நல்வேல் காக்க
ஆண்பெண் குறிகளை அயில்வேல் காக்க
பிட்ட மிரண்டும் பெருவேல் காக்க
வட்டக் குதத்தை வல்வேல் காக்க
பணைத்தொடை யிரண்டும் பருவேல் காக்க
கணைக்கால் முழந்தாள் கதிர்வேல் காக்க (88)
ஐவிரல் அடியிணை அருள்வேல் காக்க
கைக ளிரண்டும் கருணைவேல் காக்க
முன்கையிரண்டும் முரண்வேல் காக்க
பின்கையிரண்டும் பின்னவள் இருக்க
நாவில் சரஸ்வதி நற்றுணை ஆக
நாபிக் கமலம் நல்வேல் காக்க
முப்பால் நாடியை முனை வேல் காக்க
எப்பொழுதும் எனை எதிர்வேல் காக்க
அடியேன் வசனம் அசைவுள நேரம்
கடுகவே வந்து கனக வேல் காக்க
வரும் பகல் தன்னில் வச்சிரவேல் காக்க
அறையிருள் தன்னில் அனையவேல் காக்க (100)
ஏமத்தில் சாமத்தில் எதிர்வேல் காக்க
தாமதம் நீக்கிச் சதுர்வேல் காக்க
காக்க காக்க கனகவேல் காக்க
நோக்க நோக்க நொடியில் நோக்க (104)
தாக்கத் தாக்கத் தடையறத் தாக்க
பார்க்கப் பார்க்கப் பாவம் பொடிபட
பில்லி சூனியம் பெரும்பகை அகல
வல்ல பூதம் வலாஷ்டிகப் பேய்கள்
அல்லற் படுத்தும் அடங்கா முனியும்
பிள்ளைகள் தின்னும் புழக்கடை முனியும்
கொள்ளிவாய்ப் பேய்களும் குறளைப் பேய்களும்
பெண்களைத் தொடரும் பிரமராட்சதரும்
அடியனைக் கண்டால் அலறிக்கலங்கிட
இரிசிக் காட்டேரி இத்துன்ப சேனையும்
எல்லினும் இருட்டினும் எதிர்படும் அண்ணரும்
கனபூசை கொள்ளும் காளியோடனே வரும்
விட்டாங் காரரும் மிகுபல பேய்களும்
தண்டியக் காரரும் சண்டாளர்களும்
என்பெயர் சொல்லவும் இடிவிழுந்தோடிட… (119)
ஆனை அடியினில் அரும்பாவைகளும்
பூனை மயிரும் பிள்ளைகள் என்பும்
நகமும் மயிரும் நீண்முடி மண்டையும்
பாவைகளுடனே பலகலசத்துடன்
மனையிற் புதைத்த வஞ்சனை தனையும்
ஒட்டியச் செருக்கும் ஒட்டியப் பாவையும்
காசும் பணமும் காவுடன் சோறும்
ஓதும் அஞ்சனமும் ஒருவழிப் போக்கும்
அடியனைக் கண்டால் அலைந்து குலைந்திட
மாற்றார் வஞ்சகர் வந்து வணங்கிட
கால தூதாள் எனைக்கண்டாற் கலங்கிட
அஞ்சி நடுங்கிட அரண்டு புரண்டிட
வாய்விட்டலறி மதிகெட்டோட
படியினில் முட்ட பாசக்கயிற்றால்
கட்டுடன் அங்கம் கதறிடக் கட்டு
கட்டி உருட்டு கால்கை முறிய
கட்டு கட்டு கதறிடக் கட்டு
முட்டு முட்டு முழிகள் பிதுங்கிட
செக்கு செக்கு செதில் செதிலாக
சொக்கு சொக்குச் சூர்ப்பகைச் சொக்கு (139)
குத்து குத்து கூர்வடி வேலால்
பற்று பற்று பகலவன் தணலெரி
தணலெரி தணலெரி தணலது வாக
விடு விடு வேலை வெருண்டது வோட
புலியும் நரியும் புன்னரி நாயும்
எலியும் கரடியும் இனித்தொடர்ந் தோட
தேளும் பாம்பும் செய்யான் பூரான்
கடிவிட விஷங்கள் கடித்துய ரங்கம்
ஏறிய விஷங்கள் எளிதுடன் இறங்க
ஒளிப்புஞ் சுளுக்கும் ஒருதலை நோயும்
வாதம் சயித்தியம் வலிப்புப் பித்தம்
சூலைசயங் குன்மம் சொக்குச் சிரங்கு
குடைச்சல் சிலந்தி குடல்விப் பிருதி
பக்கப் பிளவை படர் தொடை வாழை
கடுவன் படுவன் கைத்தாள் சிலந்தி
பற்குத்து அரணை பருஅரை யாப்பும் (155)
எல்லாப் பிணியும் எந்தனைக் கண்டால்
நில்லா தோட நீ எனக் கருள்வாய்
ஈரேழ் உலகமும் எனக்கு உறவாக
ஆணும் பெண்ணும் அனைவரும் எனக்கா
மண்ணா ளரசரும் மகிழ்ந்துற வாகவும்
உன்னைத் துதிக்க உன் திருநாமம்
சரஹண பவனே சைலொளி பவனே
திரிபுர பவனே திகழொளி பவனே
பரிபுர பவனே பவம்ஒளி பவனே
அரிதிரு மருகா அமரா பதியைக்
காத்துத் தேவர்கள் கடுஞ்சிறை விடுத்தாய்
கந்தா குகனே கதிர்வேலவனே
கார்த்திகை மைந்தா கடம்பா கடம்பனே
இடும்பனை அழித்த இனியவேல் முருகா
தணிகா சலனே சங்கரன் புதல்வா
கதிர்கா மத்துறை கதிர்வேல் முருகா (171)
பழநிப் பதிவாழ் பால குமாரா
ஆவினன் குடிவாழ் அழகிய வேலா
செந்தின்மா மலையுறும் செங்கல்வராயா
சமரா புரிவாழ் சண்முகத் தரசே (175)
காரார் குழலாள் கலைமகள் நன்றாய்
என்நா இருக்க யான் உனைப் பாட
எனைத்தொடர்ந் திருக்கும் எந்தை முருகனைப்
பாடினேன் ஆடினேன் பரவசமாக
ஆடினேன் நாடினேன் ஆவினன் பூதியை (180)
நேச முடன்யான் நெற்றியில் அணியப்
பாச வினைகள் பற்றது நீங்கி
உன்பதம் பெறவே உன்னருளாக
அன்புடன் இரக்ஷி அன்னமுஞ் சொன்னமும் (184)
மெத்த மெத் தாக வேலா யுதனார்
சித்திபெற் றடியேன் சிறப்புடன் வாழ்க
வாழ்க வாழ்க மயிலோன் வாழ்க
வாழ்க வாழ்க வடிவேல் வாழ்க
வாழ்க வாழ்க மலைக்குரு வாழ்க
வாழ்க வாழ்க மலைக்குற மகளுடன்
வாழ்க வாழ்க வாரணத்துவசம் (191)
வாழ்க வாழ்க என் வறுமைகள் நீங்க
எத்தனை குறைகள் எத்தனை பிழைகள்
எத்தனை யடியேன் எத்தனை செய்தால்
பெற்றவன் நீ குரு பொறுப்பது உன் கடன் (195)
பெற்றவள்குறமகள் பெற்றவளாமே
பிள்ளையென் றன்பாய் பிரிய மளித்து
மைந்தனென் மீது உன் மனமகிழ்ந் தருளித்
தஞ்சமென் றடியார் தழைத்திட அருள் செய்
கந்தர் சஷ்டி கவசம் விரும்பிய
பாலன் தேவ ராயன் பகர்ந்ததைக்
காலையில் மாலையில் கருத்துடன் நாளும்
ஆசா ரத்துடன் அங்கந் துலக்கி
நேச முடன்ஒரு நினைவது வாகி
கந்தர் சஷ்டிக் கவசம் இதனைச்
சிந்தை கலங்காது தியானிப்பவர்கள்
ஒருநாள் முப்பத் தாறுருக் கொண்டு
ஓதியே செபித்து உகந்து நீறணிய (208)
அஷ்டதிக் குள்ளோர் அடங்கலும் வசமாய்த்
திசைமன்ன ரெண்மர் செயலது அருளுவர்
மாற்றல ரெல்லாம் வந்து வணங்குவர்
நவகோள் மகிழ்ந்து நன்மை யளித்திடும்
நவமத னெனவும் நல்லெழில் பெறுவர்
எந்த நாளுமீ ரெட்டா வாழ்வர்
கந்தர்கை வேலாம் கவசத் தடியை (215)
வழியாற் காண மெய்யாய் விளங்கும்
விழியாற் காண வெருண்டிடும் பேய்கள்
பொல்லா தவரைப் பொடிப் பொடி யாக்கும்
நல்லோர் நினைவில் நடனம் புரியும் (219)
சர்வ சத்துரு சங்கா ரத்தடி
அறிந்தென துள்ளம் அஷ்டலட் சுமிகளில்
வீரலட் சுமிக்கு விருந்துண வாகச்
சூரபத்மாவைத் துணித்தகை யதனால்
இருபத் தேழ்வர்க்கு உவந்தமு தளித்த
குருபரன் பழநிக் குன்றினி லிருக்கும்
சின்னக் குழந்தை சேவடி போற்றி
எனைத்தடுத் தாட்கொள என்றன துள்ளம்
மேவிய வடிவுறும் வேலவ போற்றி
தேவர்கள் சேனா பதியே போற்றி
குறமகள் மனமகிழ் கோவே போற்றி
திறமிகு திவ்விய தேகா போற்றி
இடும்பா யுதனே இடும்பா போற்றி
கடம்பா போற்றி கந்தா போற்றி
வெட்சி புனையும் வேளே போற்றி
உயர்கிரி கனக சபைக்கு ஓரரசே (235)
மயில்நட மிடுவோய் மலர் அடி சரணம்
சரணம் சரணம் சரஹண பவ ஓம்
சரணம் சரணம் சண்முகா சரணம்
சரணம் சரணம் சண்முகா சரணம்… (240)
ஓம் முருகா போற்றி… அரோகரா!!! அரோகரா!!! அரோகரா!!!
முருகப்பெருமானுக்கு உகந்த நாட்களான செவ்வாய்க்கிழமை, சஷ்டி, கிருத்திகை, கந்த சஷ்டி விரதம் மற்றும் தைப்பூசம் ஆகிய தினங்களில் காலை மற்றும் மாலை வேளைகளில் அனைவரும் இந்த பொக்கிஷத்தை பாடி முருகப்பெருமான் அருளை பெறுவோம்…. மேலும் இந்த பதிவில் முருகர் காயத்ரி மந்திரங்கள் பதிவிட்டுள்ளோம்….. அரோகரா… ஓம் முருகா…. அரோகரா… ஓம் முருகா….
You can also save Kandha sasti kavasam lyrics in tamil pdf free download by clicking on the save as pdf option in your mobile or web browser option
கந்த சஷ்டி கவசம் காணொளி
ஸ்ரீ முருகர் காயத்ரி மந்திரம்
உங்களுக்காக இங்கே கொடுக்கப்பட்டுள்ளது….
1. ஓம் தத்புருஷாய வித்மஹே
மஹா சேநாய தீமஹி
தந்நோ சண்முக: ப்ரசோதயாத்….
2. ஓம் தத் புருசாய வித்மஹே
மகேஷ்வர புத்ராய தீமஹி
தந்நோ சுப்ரமண்ய ப்ரசோதயாத்…
ஸ்ரீ தேவாராய ஸ்வாமியால் இயற்றப்பட்ட கந்த சஷ்டி கவசம், ஒரு அரிய மற்றும் மதிப்புமிக்க புதையல் ஆகும். இது நம் வாழ்வில் வெற்றி பெற உதவுகிறது. நம் மனதை ஒரு நிலை படுத்தி முருகப்பெருமானை நினைத்து இதனை தொடர்ந்து படிக்கவும்… கந்த சஷ்டி கவசம் என்பது தேவராய சுவாமிகளால் முருகப் பெருமான் மீது இயற்றப்பட்ட பாடலாகும். ஆறுபடை வீடுகளுக்கும் தனித்தனியே கந்தர் சஷ்டி கவசம் பாடியுள்ளார். அவற்றுள், திருச்செந்தூர் சஷ்டி கவசமே மிகவும் பிரபலம். இதன் காலம் 19ஆம் நூற்றாண்டு. இதனை திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அரங்கேற்றினார்.
முருகனுக்குரிய ஆறெழுத்து மந்திரமான “சரவணபவ” உடன்
“ஓம் ஐம் சரவணபவாய நம”,
“ஓம் க்லீம் சிகாயை வஷட்”,
“ஓம் ஸெளம் சுப்ரமண்யாய நமஹ”
என்று மந்திரங்களைச் சேர்த்துச் சொல்லும்போது, அதன் சக்தி மிக மிக அதிகமாகிறது. ஆனால், இதை எல்லாரும் சொல்லக்கூடாது. ஒரு குருவின் மூலம் உபதேசம் பெற்று, முறையாக சொன்னால் நினைக்க முடியாத சித்திகளை எல்லாம் முருக பெருமான் அருளினால் வாரங்களாக பெறலாம்.
இது சத்தியம். கந்தசஷ்டி கவசம் எழுதிய தேவராயசுவாமிகள், தனது பாடல் வரிகளில் இந்த மந்திரச் சொற்களைச் சேர்த்து விட்டார்.
தேவராய சுவாமிகள் என்பவர் ஒரு தமிழ்ப் புலவராவார். இவரது இயற்பெயர் தேவராயன் (தேவராசன்)ஆகும். இவர் 1857 இல் தொண்டை மண்டலம் வல்லூரில் பிறந்தார். இவருடைய தந்தையார் வீரசாமிப்பிள்ளை பெங்களூரில் மைசூர் அரசரிடம் கணக்கர் (துபாஷ்) வேலை பார்த்தவர் என்று சில நூல்களில் குறிப்புகள் உள்ளன. இவர் இயற்றியவற்றுள் மிகவும் புகழ் பெற்றது கந்த சஷ்டி கவசம் ஆகும். இவர் இயற்றிய பிற நூல்கள்: சிவ கவசம், சண்முக கவசம், சக்தி கவசம், குசேலோபாக்கியானம் மற்றும் நாராயண கவசம் ஆகும்.
இந்த கந்த சஷ்டி கவசம் பாடினால் மனதில் இருக்கும் பயம் அகலும், எதிரிகள் விலகுவர், வெற்றியை தேடித் தரும். இந்த பாடலை தினமும் பாடலாம். கந்த சஷ்டி விரதம் தினங்களில் பாடுவது மேலும் விசேஷமானது. சூலமங்கலம் சகோதரிகளான ராஜலட்சுமி, ஜெயலட்சுமி ஆகியோர் இந்த பாடலைப் பாடியுள்ளனர். கந்த சஷ்டி கவசம் (Kandha Sasti Kavasam song lyrics in tamil) என்றாலே அவர்களின் குரலும் சேர்ந்தே நம் மனதில் வந்து போகும்…
முருகர் பாடல் வரிகள்:
மேலும் படிக்க..
Kandha Sasti Kavasam Lyrics in ENGLISH
வேல்மாறல் மகா மந்திரம் பாடல் வரிகள்
ஸ்ரீ கந்த குரு கவசம் பாடல் வரிகள்
அழகென்ற சொல்லுக்கு முருகா பாடல் வரிகள்
விஷ்ணு சஹஸ்ரநாமம் பாடல் வரிகள்
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (Frequently Asked Questions – FAQ)
(முக்கிய SEO குறிப்பு: இந்த கேள்விகள் மற்றும் பதில்களுக்கு FAQ Schema Markup கண்டிப்பாக பயன்படுத்த வேண்டும்.)
1. கந்த சஷ்டி கவசம் படிப்பதால் கிடைக்கும் பலன்கள் என்ன?
(What are the benefits (Palangal) of reading Kandha Sashti Kavasam?)
கந்த சஷ்டி கவசத்தை பாராயணம் செய்வதன் மூலம் நோய்கள், எதிரிகள், தீய சக்திகள், மற்றும் கிரக தோஷங்களின் தாக்கம் நீங்கி, பாதுகாப்பு கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. இது செல்வ வளம், மன அமைதி மற்றும் ஆன்மீக முன்னேற்றத்தை அளிக்கும் ஒரு சக்திவாய்ந்த கவசமாகும்.
2. கந்த சஷ்டி கவசத்தை ஒரு நாளைக்கு எத்தனை முறை ஓத வேண்டும்?
(How many times should I chant Kandha Sashti Kavasam a day?)
இதற்கு ஒரு உறுதியான விதி இல்லை என்றாலும், தீவிர பக்தர்கள் ஒரு நாளைக்கு 3, 5, அல்லது 7 முறை ஓதுவது வழக்கம். எண்ணிக்கை முக்கியமல்ல; முழுமையான கவனத்துடனும் பக்தியுடனும் ஒரு முறை ஓதுவது கூட மிகுந்த பலன் அளிக்கும்.
3. கவசத்தை பாராயணம் செய்ய சிறந்த நேரம் எது?
(When is the best time to recite the Kavasam?)
கவசத்தை பாராயணம் செய்ய சிறந்த நேரம் அதிகாலையில் வரும் பிரம்ம முகூர்த்தம் ஆகும். செவ்வாய்க் கிழமைகள், வெள்ளிக் கிழமைகள் மற்றும் மாலையில் வரும் பிரதோஷ நேரத்தில் ஓதுவது விசேஷமான பலன்களைத் தரும்.
4. கந்த சஷ்டி கவசத்தை இயற்றியவர் யார்?
(Who wrote the Kandha Sashti Kavasam?)
இந்த சக்திவாய்ந்த கவசத்தை முருகப்பெருமானின் தீவிர பக்தரான ஸ்ரீ பாலதேவராய சுவாமிகள் இயற்றினார்
🙏 கவசம் தோன்றியதன் மகத்துவம் மற்றும் பலன்கள் (The Power and Significance)
கந்த சஷ்டி கவசம் என்பது முருகப்பெருமானின் மீது பாடப்பட்ட சக்திவாய்ந்த பாடல்களில் ஒன்றாகும். 19-ஆம் நூற்றாண்டில் ஸ்ரீ பாலதேவராய சுவாமிகளால் இயற்றப்பட்ட இந்தத் தெய்வீக கவசமானது, இதை ஓதுவோரை அனைத்து விதமான தீமைகள், நோய்கள், எதிர்ப்புகள் மற்றும் கிரக தோஷங்களில் இருந்தும் காக்கும் ஒரு ‘ஆன்மீக கவசம்’ (Spiritual Armor) என்று நம்பப்படுகிறது.
எப்போது ஓத வேண்டும்? சஷ்டி விரத நாட்களிலும், செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளிலும், அதிகாலையில் (பிரம்ம முகூர்த்தத்தில்) மன ஒருமைப்பாட்டுடன் பாராயணம் செய்வது அதிக பலன் தரும். ஒவ்வொரு அங்கத்திற்கும் பாதுகாப்பு வேண்டி முருகனிடம் கோரும் இந்தத் துதி, பக்தர்களுக்கு மன அமைதியையும் வெற்றியையும் அளிக்கும்

SUPER……
Some lines are missing and some spelling mistakes are there. Kindly correct them please. Thanks.
Mistakes have been rectified… Thanks for your feedback…
There are some mistakes in the post. Please rectify it
Mistakes have been rectified.. thanks for feedback…
Some Spelling mistakes are there.
Thank you. The spelling mistakes have been corrected.
It’s so useful
Can u put meaning for this lyrics
வணக்கம் சித்ரா அவர்களே…. கந்த சஷ்டி கவசத்தின் விளக்கம்….
https://aanmeegam.co.in/blogs/arthamulla-aanmeegam/kandha-sashti-kavasam-description/
கந்தர் சஷ்டி கவசம் படித்தால் கிடைக்கும் நன்மை…
https://aanmeegam.co.in/blogs/arthamulla-aanmeegam/kandha-sashti-kavasam-benefits/
கந்த சஷ்டி கவசம் உருவான வரலாறு
https://aanmeegam.co.in/blogs/arthamulla-aanmeegam/kanda-sasti-history/
Kadavulae Murugaa.. un arul elloru melaium padanum.. when we sing kantha shashti kavAcham.. it creates unique vibration at home.. thanks to the person who had written the lyrics here.. Murugaa un pugazh men melum paranthu viriyattum.. un thamizh ellor manathilum nirainthu valiyattum.. vaazhga valamudan.
Mikka Nandri.. Your appreciation means a lot to us! thanks for your support :)
Arumai.. Murugan, makkal anivaraium kakkattum..
மிக்க நன்றி…
Pls tell who wrote kanda sashti kavasam
ஸ்ரீ தேவாராய ஸ்வாமியால் இயற்றப்பட்ட கந்த சஷ்டி கவசம், ஒரு அரிய மற்றும் மதிப்புமிக்க புதையல் ஆகும். இது நம் வாழ்வில் வெற்றி பெற உதவுகிறது. நம் மனதை ஒரு நிலை படுத்தி முருகப்பெருமானை நினைத்து இதனை தொடர்ந்து படிக்கவும்….
மனதை நெகிழ வைக்கும் முருகனின் தமிழ் திருப்புகழ் பாடல் -நன்றி
மிக்க நன்றி….
மனதை நெகிழ வைக்கும் முருகனின் தமிழ் திருப்புகழ் பாடல்
மிக்க நன்றி……
Thank you
Thank you so much
kandha sashti kavasam song lyrics in tamil is posted in this article. Get the blessing for lord muruga.
The lyrics of kandha sashti kavasam song has been updated with the correct spelling and spell errors are now corrected.
கந்த சஷ்டி கவசம் பாடல் வரிகள்
https://aanmeegam.co.in/blogs/lyrics/kandha-sasti-kavasam-lyrics-tamil/