Viruchigam rasi guru peyarchi palangal 2017-18

விருச்சிக இராசி அன்பர்களே….

உங்கள் இராசிக்கு 12-ம் இடத்திற்கு குரு பகவான் 02.09.2017 அன்று பெயர்ச்சி ஆகி வருகிறார். 12-ல் குரு பகவான் வந்துவிட்டதே என்ற பயம் வேண்டாம். 6-க்குரிய குரு பகவான் 12-ல் வருவது நன்மையே தரும். குரு பகவான், செவ்வாய் சாரத்தில் இருப்பதால் சில இடையூறுகளும் வரலாம். ஆனால் 4, 6, 8-ம் இடங்களை குரு பார்வை செய்வதால், குடும்பத்தில் இருந்த சண்டை – சச்சரவுகள், பிரச்னைகள் நீங்கும். வீடு, மனை அமையும். சில கடன் பிரச்னைகள் தீரும். வழக்கு இருந்தாலும் வெற்றி பெறுவீர்கள். சிலர் அயல்நாட்டுக்கு சென்று வேலை வாய்ப்பு, படிப்பு போன்ற அனுகூலங்கள் பெறுவீர்கள். திருமணம் ஆனவர்களுக்கு தங்களின் துணைவன் – துணைவியால் நன்மைகள் நடக்கும். பிரயாணங்கள் அதிகரிக்கும். பெற்றோருடன் சில நேரங்களில் கருத்து வேறுபாடு வந்து நீங்கும். காரணம், ஒன்பதாம் இடத்திற்கு 12-யை குரு பார்வை செய்வதால் இத்தகைய விஷயங்கள் ஏற்படும். தொழில்துறையில் முன்னேற்றம் வரும். பொன் – பொருள் சேரும். சரி, எந்த விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் ? பேச்சில் நிதானம், பர,பரப்பு கூடாது. வயிற்று பிரச்னை வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மற்றபடி குரு பெயர்ச்சி உங்களுக்கு யோகமே தரும். நல்வாழ்த்துக்கள்.

 

விசாகம் 4, அனுஷம், கேட்டை

அதிக புத்திக்கூர்மையும், சமூகப்பற்றும் கொண்ட விருச்சிக ராசி நேயர்களே!

உங்கள் ராசியாதிபதி செவ்வாய்க்கு நட்பு கிரகமும் தன, பஞ்சமாதிபதியுமான பொன்னவன் எனப் போற்றப்படும் குரு பகவான் வாக்கியப்படி 2-9-2017 முதல் 4-10-2018 வரை விரய ஸ்தானமான 12-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்ய இருப்பதால் எதிர்பாராத வீண்விரயங்கள், தேவையற்ற செலவுகள் உண்டாகும். பணவிஷயத்தில் மட்டும் பிறருக்கு வாக்குறுதி கொடுப்பது, முன்ஜாமீன் கொடுப்பது போன்றவற்றைத் தவிர்க்கவும். குடும்பத்தில் ஒற்றுமை குறையக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். இதனால் மனநிம்மதி குறையும். எதிர்பாராத வீண்பிரச்சினைகளாலும் மனக்குழப்பம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் மிகவும் கவனம் செலுத்த வேண்டியிருக்கும். குடும்பத்தில் உள்ளவர்களாலும் மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும். உற்றார்-உறவினர்களிடையே வீண் கருத்துவேறுபாடுகள் ஏற்பட்டு பிரிந்துசெல்ல நேரிடும். எதிர்பார்க்கும் உதவிகளும் தாமதப்படும். திருமண சுபகாரிய முயற்சிகளுக்கான பேச்சு வார்த்தைகளைத் தவிர்ப்பது நல்லது. முடிந்தவரை பேச்சில் நிதானத்தைக்கடைப்பிடிப்பது, பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாதிருப்பது, குடும்ப விஷயங்களை பிறரிடம் பகிர்ந்து கொள்ளாதிருப்பது உத்தமம்.

சனியும் சாதகமற்று சஞ்சரித்து ஏழரைச்சனி தொடருவதால் தொழில், வியாபாரம் செய்பவர்களும் புதிய முயற்சிகளில் ஈடுபடும்போது சிந்தித்து செயல்படுவது உத்தமம். கூட்டாளிகளை அனுசரித்துச் சென்றால் ஓரளவுக்கு அனுகூலமான பலனைப் பெறுவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பாராத இடமாற்றங்களால் குடும்பத்தை விட்டுப் பிரியக்கூடிய சூழ்நிலைகள் ஏற்படும். வேலைப்பளு அதிகரிப்பதால் உடல்நிலை சோர்வடையும். அதிகாரிகளின் கெடுபிடிகள் அதிகரிக்கும். அரசியல்வாதிகளுக்கு சோதனை நிறைந்த காலமாக இருக்கும். மக்களின் தேவையறிந்து செயல்படுவது உத்தமம். மாணவர்களுக்கு கல்வியில் மந்தநிலை ஏற்படும் என்பதால் அதிக கவனம் செலுத்துவது, தேவையற்ற பொழுதுபோக்குகளைத் தவிர்ப்பது நல்லது.

உடல் ஆரோக்கியம்
உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் ஏற்பட்டாலும் மருத்துவச் செலவுகளுக்குப்பின் உடனே குணமாகும். மனைவி, புத்திரர்களின் உடல்நிலை சுமாராக இருக்கும். எதிர்பாராத பயணங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும். தேவையற்ற மனசஞ்சலங்களும், வீண் செலவுகளும் ஏற்படக்கூடும் என்றாலும் எதையும் சமாளிக்கக்கூடிய ஆற்றல் உண்டாகும்.

குடும்பம் ,பொருளாதாரநிலை
குடும்ப வாழ்வில் சிறுசிறு பிரச்சினைகள் தோன்றினாலும் அனைவரையும் அனுசரித்துச் செல்வதினால் ஒற்றுமை குறையாது. பொருளாதாரநிலை சிறப்பாக இருந்தாலும் வரவுக்குமீறிய செலவுகள் ஏற்படும். முயற்சிகளில் சில தடைகளுக்குப்பின் நற்பலன் உண்டாகும். திருமண காரியங்கள் தடைப்படும். தெய்வ தரிசனங்களுக்காக பயணங்கள் மேற்கொள்ளக்கூடிய வாய்ப்புகள் அமையும். பல பெரிய மனிதர்களின் நட்பு கிட்டும். புதிய பொருட்சேர்க்கைகளும் ஆடை, ஆபரணமும் சேரும்.

கொடுக்கல்வாங்கல்
கமிஷன் ஏஜென்சி போன்றவற்றில் சிந்தித்துச் செயல்பட்டால் மட்டுமே லாபம் காணமுடியும். பணவிஷயங்களில் பிறருக்கு முன்ஜாமீன் கொடுப்பது போன்றவற்றைத் தவிர்த்துவிடுவது உத்தமம். வம்பு வழக்குகளில் சாதகமான பலன்கள் உண்டாகும். கொடுத்த கடன்கள் வசூலாக கால தாமதம் ஏற்படும்.

தொழில், வியாபாரம்
தொழில், வியாபாரம் செய்பவர்கள் பெரிய முதலீடுகளில் செய்ய நினைக்கும் காரியங்களில் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. எதிர்பார்க்கும் லாபங்களைப்பெற இயலாது. தொழிலாளர்களுக்கு சம்பளப் பாக்கிகள் உண்டாவதால் அவர்களால் வீண்பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடும். பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும்.

உத்தியோகம்
உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் இடமாற்றங்கள் தாமதப்பட்டாலும், கௌரவமான பதவிகளைப் பெறமுடியும். உயரதிகாரிகளின் ஆதரவும் உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பும் உங்களின் வேலைப்பளுவைக் குறைக்கும். பணியில் நிம்மதியான நிலைகள் ஏற்பட்டாலும் சில நேரங்களில் பிறர்செய்யும் தவறுகளுக்கு பொறுப்பேற்கக்கூடிய சூழ்நிலைகளும் உண்டாகும். புதிய வேலை தேடுபவர்களுக்குத் தகுதிக்கேற்ற வேலை வாய்ப்புகள் கிடைக்கும்.

பெண்கள்
பெண்கள் எடுக்கும் காரியங்களை சிறப்பாக செய்துமுடிக்க முடியும். உடல் ஆரோக்கியத்தில் சோர்வு, தூக்கமின்மை, மனஉளைச்சல்கள் ஏற்படக்கூடும். நெருங்கியவர்களை அனுசரித்துச்செல்வது நல்லது. பணவரவுகளில் தடைகள் உண்டாகக்கூடிய காலம் என்பதால் வீண்செலவுகளைக் குறைப்பது நல்லது. பிறருக்குக் கொடுக்கும் பணத்தையும் எளிதில் வசூலிக்கமுடியாத நிலைகள் ஏற்படக்கூடும். திருமண சுபகாரிய முயற்சிகளைச் சற்றுத் தள்ளிவைப்பது நல்லது. புத்திரவழியில் சுபச்செலவுகள் ஏற்படக்கூடும். பணிபுரியும் பெண்களுக்கு வேலைப்பளு சற்றே அதிகரிக்கும்.

அரசியல்
அரசியல்வாதிகளுக்கு செல்வம், செல்வாக்கு, பெயர், புகழ் உயரக்கூடிய காலம் என்றாலும் கட்சிப்பணிகளுக்காக நிறைய செலவுசெய்ய நேரிடும். வெளியூர், வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வீர்கள். உடனிருப்பவர்களால் சில பிரச்சினைகளைச் சந்திக்கக்கூடும் என்பதால் எதிலும் கவனம் தேவை.

விவசாயிகள்
விளைச்சல் சுமாராகத்தான் இருக்கும். முதலீட்டினை எடுக்க அரும்பாடுபட வேண்டி வரும். நீர் வரத்து போதிய அளவு இருக்கும் என்றாலும் வேலையாட்கள் சரியான நேரத்திற்கு வேலைக்குக் கிடைக்கமாட்டார்கள். வாய்க்கால், வரப்பு பிரச்சினைகளால் வீண் விவாதங்கள் ஏற்படும். பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை.

கலைஞர்கள்
தொழில்ரீதியாக போட்டிகள் ஏற்பட்டாலும் புதிய வாய்ப்புகளுக்கு பஞ்சம் இருக்காது. வரவேண்டிய பணப்பாக்கிகள் மட்டும் இழுபறி நிலையிலேயே இருந்து வரும். இடைவிடாத உழைப்பால் உடல்நிலையில் சோர்வு உண்டாகும். தேவையற்ற பயணங்களால் அலைச்சல்கள் ஏற்படக்கூடும் என்பதால் முடிந்தவரைத் தவிர்த்துவிடுவது நல்லது.

மாணவமாணவியர்
கல்வி பயில்பவர்கள் சற்றுக்கூடுதல் கவனம்செலுத்திப் படித்தால் எதிர்பார்க்கும் மதிப்பெண்களைப் பெறமுடியும். விளையாட்டுப்போட்டிகளில் பல பரிசுகளைத் தட்டிச்செல்வீர்கள். கல்விக்காக நீங்கள் அரசுவழியில் எதிர்பார்க்கும் உதவிகள் சில தடைகளுக்குப்பின் கிடைக்கப்பெறும். நல்ல நண்பர்களின் உதவிகள் தக்கசமயத்தில் அமையும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் ஏற்படும்.

குரு பகவான் சித்திரை நட்சத்திரத்தில் 2-9-2017 முதல் 5-10-2017 வரை
குரு பகவான் உங்கள் ராசியாதிபதி செவ்வாயின் நட்சத்திரத்தில் ஜென்ம ராசிக்கு விரய ஸ்தானமான 12-ல் சஞ்சரிக்கும் இக்காலங்களில் எடுக்கும் முயற்சிகளில் தடைகளுக்குப்பின் வெற்றி அடைவீர்கள். உடல் ஆரோக்கியத்திலும் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகி மருத்துவச் செலவுகளும் ஏற்படும். குடும்பத்தில் ஏற்படக்கூடிய பிரச்சினைகளால் மனநிம்மதி குறையும். பணவரவுகளில் தடைகள் நிலவுவதால் குடும்பத்தேவைகளைப் பூர்த்தி செய்வதில் சில சங்கடங்களை எதிர்கொள்ள நேரிடும். தேவையற்ற செலவுகளைக் குறைத்துக் கொண்டால் கடன்களைத் தவிர்க்கலாம். எந்தவொரு புதிய முயற்சியிலும் பெரிய தொகை ஈடுபடுத்துவதைத் தவிர்ப்பது நல்லது. கொடுக்கல்- வாங்கலில் பிறரைநம்பி முன்ஜாமீன் கொடுப்பதைத் தவிர்க்கவும். ஏழரைச்சனி தொடருவதால் தொழில், வியாபாரத்தில் மறைமுக எதிரி களின் தொல்லைகள் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்களுக்கும் எதிர்பாராத இடமாற்றங்கள் கிடைக்கப்பெற்று குடும்பத்தை விட்டுப் பிரியக்கூடிய சூழ்நிலைகள் ஏற்படும். மாணவர்கள் கல்வியில் சற்று ஈடுபாட்டுடன் செயல்பட்டால் எதிர்பார்த்த மதிப்பெண்களைப் பெறமுடியும். கலைஞர் களுக்கு வாய்ப்புகள் சுமாராக இருக்கும். சனிக்குரிய பரிகாரங்களைச் செய்வது நல்லது.

குரு பகவான் சுவாதி நட்சத்திரத்தில் 6-10-2017 முதல் 7-12-2017 வரை
குரு பகவான் உங்கள் ராகுவின் நட்சத்திரத்தில் ஜென்ம ராசிக்கு விரய ஸ்தானமான 12-ல் சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பு என்பதால் உடல்நலனில் கவனம் செலுத்த வேண்டிவரும். புத்திரர்களால் மனசஞ்சலங்களும், தேவையற்ற வீண்செலவுகளும் அதிகரிக்கும். கொடுக்கல்-வாங்கலில் சிந்தித்துச் செயல்படுவது நல்லது. முயற்சிகளில் தடைகள் நிலவினாலும் எதிர்நீச்சல் போட்டாவது வெற்றி வாய்ப்புகளைப் பெறுவீர்கள். பொருளாதாரநிலையில் கடுமையான நெருக்கடிகளைச் சந்திப்பீர்கள். உற்றார்-உறவினர்களிடையே வீண்விரோதங்கள் உண்டாகும். கணவன்-மனைவியிடையே கருத்து வேறுபாடுகளும் ஏற்படும். தொழில், வியாபார நிலையில் அதிகமான போட்டிகளால் லாபம் குறையும். கூட்டாளிகளும் சாதகமின்றி செயல்படுவார்கள். எதிர்பார்க்கும் கடனுதவிகளும் தாமதப்படுவதால் பொருளாதார நெருக்கடிகள் ஏற்பட்டு அபிவிருத்தி குறையும். எந்தவொரு காரியத்திலும் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்துச் செயல்படுவது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு உடல்நலக்குறைவுகளால் அடிக்கடி விடுப்பெடுக்க வேண்டிய சூழ்நிலைகள் ஏற்படும். மேலதிகாரிகளின் அதிருப்திக்கு ஆளாக நேரிடும். தட்சிணாமூர்த்தியை வழிபடுவது நல்லது.

குரு பகவான் விசாக நட்சத்திரத்தில் 8-12-2017 முதல் 13-2-2018 வரை
குரு பகவான் தன் சொந்த நட்சத்திரத்தில் ஜென்ம ராசிக்கு விரய ஸ்தானமான 12-ல் சஞ்சரிப்பதாலும், வாக்கியப்படி 19-12-2017 முதல் சனி குடும்ப ஸ்தானமான 2-ல் சஞ்சரிப்பதாலும் நீங்கள் சோதனையான பலன்களையே சந்திப்பீர்கள். உடல்நிலையில் தேவையற்ற பிரச்சினை களால் மருத்துவச் செலவுகளை எதிர்கொள்ள நேரிடும். எவ்வளவுதான் பாடுபட்டாலும் எதிலும் முழுப்பலனை அடையமுடியாது. தொழில், வியாபார நிலையிலும் நெருக்கடிகள் ஏற்படும். பெரிய முதலீடுகளில் புதிய முயற்சிகளை மேற்கொள்ளாதிருப்பது நல்லது. எதிலும் சற்று சிந்தித்துச் செயல்படுவது உத்தமம். வெளிவட்டாரப் பழக்கவழக்கங்களால் அனுகூலமான பலனை அடைவீர்கள். முன்கோபத்தைக் குறைத்துக் கொண்டு பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. அரசியல்வாதிகள் கட்சிப்பணிகளை சரிவரச்செய்து முடிக்க முடியாமல் மக்களின் ஆதரவுகளை இழப்பார்கள். தங்கள் பதவிகளைக் காப்பாற்றிக் கொள்ளவே அரும்பாடுபட வேண்டியிருக்கும். திருமண சுபகாரியங் களுக்கான முயற்சிகளில் தடை தாமதங்களே நிலவும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகை ஈடுபடுத்தாதிருப்பது உத்தமம். துர்க்கை யம்மனை வழிபாடு செய்வது நல்லது.

குரு பகவான் அதிசாரமாக விருச்சிக ராசியில் 14-2-2018 முதல் 6-3-2018 வரை
குரு பகவான் அதிசாரமாக ஜென்மராசியில் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. சனியும் சாதகமற்று சஞ்சரிப்பதால் குடும்பத்தில் உள்ளவர்களாலும் மருத்துவச்செலவுகள் ஏற்படும். உணவு விஷயத்தில் கட்டுப்பாட்டுடன் இருப்பது உத்தமம். பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். கொடுக்கல்-வாங்கலில் சிந்தித்துச் செயல்பட்டால் மட்டுமே கொடுத்த வாக்குறுதிகளைச் சரியான நேரத்தில் காப்பாற்றி அனைவரின் ஆதரவுகளைப் பெறமுடியும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் எதிர் பார்த்த லாபத்தைப்பெற நிறைய போட்டிகளை சமாளிக்க நேரிடும். கூட்டாளிகளை அனுசரித்துச்செல்வதன்மூலம் அபிவிருத்தியைப் பெருக்கிக்கொள்ள முடியும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளை சற்றுத் தள்ளிவைப்பது நல்லது. சிலருக்கு வீடு, மனை, வண்டி, வாகனம் போன்றவற்றால் வீண் செலவுகள் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் எதிர் பார்த்த கௌரவமான பதவி உயர்வுகளைப்பெற தாமதநிலை ஏற்படும். வேலைப்பளு அதிகரிப்பதால் அதிகநேரம் உழைக்க வேண்டி வரும். குரு வுக்குரிய பரிகாரங்களைச் செய்வது, தட்சிணாமூர்த்தியை வழிபாடு செய்வது நற்பலனை தரும்.

குரு பகவான் வக்ரகதியில் 7-3-2018 முதல் 3-7-2018 வரை
குரு பகவான் இக்காலங்களில் வக்ரகதியில் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகளில் சிறுசிறு தடைகளுக்குப்பின் வெற்றி கிட்டும். எதிர்நீச்சல் போட்டாவது நினைத்த காரியங்களை நிறைவேற்றிக்கொள்ள முடியும். பொருளாதாரநிலை ஏற்ற இறக்கமாக இருந்தாலும் குடும்பத்தேவைகள் பூர்த்தியாகும். கடன்கள் சற்றே குறையும். உற்றார்-உறவினர்களின் ஆதரவுகள் ஓரளவுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். கொடுக்கல்-வாங்கலில் கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்ற சில இடையூறுகள் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் போட்டிகள் ஏற்பட்டாலும் எதிர்பாராத மேன்மைகள் உண்டாகும். வீடு, மனை வாங்க வேண்டும் என்ற கனவுகளும் நிறைவேறும். சனி 2-ல் சஞ்சரிப்பதால் கணவன்- மனைவி யிடையே சில கருத்து வேறுபாடுகள் தோன்றும். எதிலும் அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. முடிந்தவரை பிறர்விஷயங்களில் தலையீடு செய்யாமல் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உயர்வுகள் தடைப்படும். பயணங்களால் ஓரளவுக்கு அனுகூலப்பலன்கள் ஏற்படும். தொழில், வியாபாரம் சுமாரானமுறையில் நடைபெறும். கூட்டாளிகள் ஆதரவுடன் செயல்படுவார்கள். சனிப்ரீதியாக ஆஞ்சநேரை வழிபடுவது உத்தமம்.

குரு பகவான் விசாக நட்சத்திரத்தில் 4-7-2018 முதல் 4-10-2018 வரை
குரு பகவான் தன் சொந்த நட்சத்திரத்தில் சஞ்சரித்தாலும் ஜென்ம ராசிக்கு விரய ஸ்தானமான 12-ல் சஞ்சரிப்பதாலும் சனி 2-ல் சஞ்சரிப்பதாலும் உடல்நிலையில் அடிக்கடி பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவச்செலவுகளை எதிர்கொள்ள நேரிடும். மனைவி, பிள்ளைகள்வழியிலும் நிம்மதியற்ற நிலையே நீடிக்கும். பொருளாதாரநிலையிலும் தடைகள் ஏற்படும் என்பதால் எல்லாவகையிலும் முடக்கங்கள் உண்டாகும். கணவன்-மனைவியிடையே ஒற்றுமைக் குறைவு ஏற்படும். எடுக்கும் காரியங்களிலும் எவ்வளவுதான் பாடுபட்டாலும் அதற்கேற்ற முழுப்பலனை அடையமுடியாது. தொழில், வியாபாரம் செய்பவர்களும் நிம்மதியற்ற நிலைகளை சந்திப்பார்கள். வீணான போட்டிகள் அதிகரிக்கும். எதிர்பார்க்கும் கடனுதவிகளும் தாமதப்படும். கூட்டாளிகளிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாகக்கூடும். உத்தியோகஸ்தர்களுக்கும் தேவையற்ற பயணங்களும், அதன்மூலம் அலைச்சல்களும் உண்டாகும். பணிகளை ஒழுங்காகச் செய்து முடிக்க முடியாமல் உயரதிகாரிகளின் அதிருப்திக்கு ஆளாக நேரிடும். அரசியல்வாதிகள் எதிலும் சிந்தித்துச் செயல்படுவது நல்லது. கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்ற வீண் பிரச்சினைகளை எதிர்கொள்வீர்கள். மக்களின் ஆதரவு குறையும். குரு ,சனிக்குப் பரிகாரம் செய்வது உத்தமம்.

பரிகாரம்
விருச்சிக ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு குரு 12-ல் சஞ்சரிப்பதால் குருவுக்குரிய பரிகாரங்களைச் செய்வது, தட்சிணாமூர்த்திக்கு நெய் தீபமேற்றி முல்லை மலர்களால் அர்ச்சனை செய்வது, ஏழை மாணவர்களுக்கு நோட்டுப் புத்தகங்களை வழங்குவது நல்லது. ஏழரைச்சனி நடப்பதால் சனிக்கிழமைதோறும் சனி பகவானுக்கு நல்லெண்ணெய் தீபமேற்றி வழிபடுவதும் நற்பலனைத் தரும்.

அதிர்ஷ்டம் அளிப்பவை
எண்: 1, 2, 3, 9.
நிறம்: ஆழ்சிவப்பு, மஞ்சள்.
கிழமை: செவ்வாய், வியாழன்.
கல்: பவளம்.
திசை: தெற்கு.
தெய்வம்: முருகன்.

Leave a Comment