Events

Kadaga rasi Guru peyarchi palangal 2021-22 | கடகம் ராசி குருப்பெயர்ச்சி பலன்கள்

Kadaga rasi guru peyarchi palangal 2021-22

கடகம் ராசி குருப்பெயர்ச்சி பலன்கள்.. Kadaga rasi guru peyarchi palangal 2021-22

மென்மையான மனமும்… சிந்தித்து செயல்படும் உள்ளமும் கொண்ட கடக ராசி அன்பர்களே…!!

கடக ராசி அன்பர்களே, இதுவரை ராசிக்கு 7ம் இடத்தில் இருந்து ராசியை பார்த்து கலப்படமான பலன்களை தந்த குரு பகவான் ராசிக்கு 8ம் இடமான கும்ப ராசிக்கு இடம் பெயர்கிறார். 8ல் குரு இருக்கப்போவதால் மிக பெரிய நன்மைகளும் இல்லை தீமைகளும் இல்லை. கும்ப ராசிக்கு குரு நன்மை செய்யாத கிரகம் என்பதால் 8ம் இடத்தில் அது மறைவு பெறுவதை கண்டு பயப்பட தேவையில்லை. 8ல் குரு வருவது சற்று சிரமமான நேரம் தான். இந்த குரு பெயர்ச்சியை பொறுத்த வரை கும்ப ராசிக்காரர்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட மாட்டார்கள். குரு உங்கள் ராசிக்கு 12, 2, 4 ஆகிய இடங்களை பார்வையிடுகிறார்.

இதன் பயனாக சில நன்மைகள் ஏற்படும். 2ம் இடத்தையும் 12ம் இடத்தையும் குரு பார்ப்பதால் பொருளாதார நிலையில் முன்னேற்றம் இருக்கும்.செல்வ செழிப்பு அபாரமாக இருக்கும். கடன் பிரச்சனைகள் தீரும். கொடுக்கல் வாங்கல் தொடர்பான சர்ச்சைகள் முடிவுக்கு வரும். பூர்வீக சொத்துக் வகையில் கணிசமான தொகை கைக்கு வரும். 4ம் இடத்தை குரு பார்ப்பதால் வசதியான வீட்டிற்கு குடிபெயர்வீர்கள். சொந்த வீடு வாங்கும் யோகம் அமையும். வாழ்க்கைத்துணை வழியில் சொத்துக்கள் கிடைக்கும். வெளிநாட்டு பயணங்கள் மேற்கொள்ளவும் அதற்க்கான வாய்ப்புகளும் உருவாகும். அடிக்கடி பயணங்களால் நன்மையையும் மகிழ்ச்சியும் அடைவீர்கள். தாயின் அன்பும் ஆதரவும், தாய் வழி உறவுகளின் உதவியும் கிடைக்க வாய்ப்புள்ளது. 8ம் இட குருவால் உடலில் ஏதேனும் பிரச்சனைகள் ஏற்படலாம்.

எந்த ஒரு செயலிலும் நிதானத்துடன் சிந்தித்து செயல்படுவது நன்மையளிக்கும். காரணம் எட்டாமிடம் என்றாலே சற்று சிக்கலான இடம் தான். (அஷ்டமத்தில் குரு அவ்வளவு சிறப்பில்லை) அஷ்டமத்தில் குரு இருந்தால் நிறைய பிரச்சனைகளை சந்திக்க வேண்டிவரும், 8ல் குரு அலைச்சலுடன் ஆதாயத்தையும் தருவார். வாழ்க்கையில் பலவிதமான புதிய அனுபவங்களையும், சில சோதனைகளையும் கடந்து வெற்றி வாகையை அளிக்கக்கூடிய காலங்களாக இருக்கக்கூடியதாகும். இந்த காலகட்டத்தில் தான் உங்களை சுற்றி இருப்பவர்களை பற்றி நன்கு புரிந்துகொள்ள முடியும்.

மனதில் தோன்றிய எண்ணங்களை மற்றவர்களுக்கு புரிய வைப்பதில் சிரமம் இருக்கும். எதையும் சமாளிக்கும் சாமர்த்தியமும், மனப் பக்குவமும் வாய்க்கும். உங்களின் பிடிவாத போக்கையும் கொஞ்சம் மாற்றிக்கொள்ளவும். கடன் பிரச்னை மனத்தை வாட்டும். ஈகோவை சற்று ஒதுக்கிவைக்கவும், அதனால் நட்பும் குடும்பமும் நலம்பெறும். குடும்ப விஷயத்தில் மற்றவர்கள் தலையிட அனுமதிக்க வேண்டாம். செலவுகளும் வழக்கால் நெருக்கடிகளும் வேலைப்பளுவும் உண்டு. குருவின் பார்வை உங்கள் ராசியின் முக்கிய இடத்திற்கு கிடைப்பதால் பல நன்மைகள் நடக்கும். குடும்பத்தில் சுபகாரியம் நடக்கும். கொடுக்கல் வாங்கலில் உள்ள சிக்கல்கள் மறையும். வரவேண்டிய பணவரவுகள் கைக்கு வரும். பண வரவால் குடும்பத்தில் ஏற்பட்டுள்ள மனகசப்புகள் அகலும். கணவன் மனைவி உறவு பலப்படும். 4 ஆம் பாவத்தை குரு பார்ப்பதால் சிலர் அசையா சொத்து வாங்குவர். புது வீடு கட்டி குடிபோவர். சிலருக்கு வாழ்க்கைத்துணை வகையிலும் சொத்து வசதி வாய்ப்புகள் சேரும். புது முயற்சிகள் கை கூடும். பயணம் தொடர்பான விஷயங்களில் வருமானம் வரும். கொடுத்த வாக்குறுதியை சிறிய தடங்கலுக்கு பின் நிறைவேற்ற முடியும். கடுமையான முயற்சிக்கு பின் பணம் வரும்.

எதிர்பாராத வகையில் பண விரையம் ஏற்படும். குடும்பத்தில் கணவன் மனைவிடையே இருந்த மனஸ்தாபம் நீங்கும். உணவு விஷயத்தில் கட்டுப்பாடு அவசியம். ஒரு சில உடல் உபாதைகள் வர வாய்ப்புண்டு, அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டாகும். எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் உண்டாகும். அறிவுப்பூர்வமாக சிந்தித்து சில முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டிவரும். பழைய கடன்களை நினைத்து அவ்வப்போது கலக்கம் உண்டாகும். திடீர்ப் பயணங்களால் அலைச்சலும், டென்ஷனும் ஏற்படும். சொத்து வழக்குகளில் இருந்த நெருக்கடிகள் நீங்கும். யாரையும் முழுமையாக நம்பி ஏமாற வேண்டாம். வேண்டாதவர்களிடம் சற்று ஒதுங்கி இருப்பது நல்லது. எல்லாவற்றிக்கும் மேலாக உங்கள் எதிர்பார்ப்பை குறைத்துக்கொள்ளவும். நண்பர்களிடம் கேட்ட உதவி கிடைக்காமல் போகலாம். வாகன வசதிகள் பெருகும். தாயாரால் சில செலவுகளும், அலைச்சலும் ஏற்படும். புது வீட்டிற்கு குடியேற முடியும். வேற்று மதத்தினரின் உதவியும் ஆதரவும், கிடைக்கும்.

 

உத்யோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். எதிர்பாராத சில இடமாற்றங்களால் புதிய அனுபவங்களையும், சில சங்கடங்களையும், சந்திக்க நேரிடும். மேல் அதிகாரிகளின் சூழ்நிலைக்கு தகுந்தவாறு அனுசரித்து செல்வது நல்லது. தொழில், வியாபாரத்தில் லாபம் கூடும். தற்சமயம் வேலையில் முன்னேற்றம் வரும். உத்தியோகத்தில் அலைச்சல் காரணமாக சற்று உடல்நிலை பாதிப்பை தருவார் கவனம் தேவை. சக ஊழியர்களிடம் தங்களது கருத்துக்களை கூறும் போது சற்று சிந்தித்து செயல்பட வேண்டும். உத்யோகத்தில் கிடைக்க வேண்டிய சலுகைகள் தாமதமாகலாம். உத்யோகத்தில் மறைமுக பிரச்சனைகள் இருக்கும். தொழிலில் ஏற்படும் பொருள் தேக்க நிலையினால் சில நெருக்கடியான சூழல் ஏற்படும். புதிய தொழில் வாய்ப்புகள் அமையும். சிறு தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். இந்த குரு பெயர்ச்சியில் ஆரம்பத்தில் நிறைய தடைகளை சந்தித்தாலும் நாளடைவில் நல்லது நடக்க ஆரம்பிக்கும் என்பது உன்மை.

பரிகாரம் : வியாழக்கிழமையில் ஏழைகளுக்கு தானம் செய்யவும்

கடகராசிக்காரர்களுக்கு எப்போதுமே ஆதிசேஷன் மேல் சயனித்திருக்கும் ஸ்ரீ மகா விஷ்ணு வழிபாடு மிகச் சிறந்த பலன்களை தரும். அதேபோல குருபகவான் ஆலயங்களாக இருக்கக்கூடிய ஆலங்குடி, திட்டை போன்ற ஆலயங்களுக்கும் சென்று வருவது மிகச் சிறந்த பலன்களை தரக் கூடியதாக இருக்கும். வாழ்க வளமுடன்.

காஞ்சிபுரத்திலிருந்து உத்திரமேரூர் செல்லும் பாதையில் அமைந்துள்ள திருப்புலிவனம் என்னும் ஊரில் அருள்பாலிக்கும் ஸ்ரீவியாக்ரபுரீஸ்வரரை வணங்குங்கள். விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவுங்கள். சகலமும் நன்மையாகும்.

குருப்பெயர்ச்சி பலன்கள் 2021-22

மேஷம் | ரிஷபம் | மிதுனம் | கடகம் | சிம்மம் | கன்னி | துலாம் | விருச்சிகம் | தனுசு | மகரம் | கும்பம் | மீனம்

108 குரு பகவான் போற்றி 

ஶ்ரீ குரு ஸ்தோத்ரம் பாடல் வரிகள்

குரு பகவானுக்குரிய திருத்தலங்கள்

 

Share
ஆன்மிகம்

Leave a Comment
Published by
ஆன்மிகம்
 • Recent Posts

  அட்சய திரிதியை பூஜை முறையும் பலனும் | Akshaya Tritiya benefits

  அட்சய திரிதியை பூஜை முறையும் பலனும் Akshaya Tritiya benefits சித்திரை (20) நாள் 3.5.2021 செவ்வாய்க்க்கிழமை அட்சய திருதியை… Read More

  4 weeks ago

  Today rasi palan 28/5/2022 in‌‍‌ tamil | இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கம் சனிக்கிழமை வைகாசி – 14

  Today Rasi Palan in Tamil | இன்றைய இராசிப்பலன் Join our WhatsApp group II. *🔯🕉ஶ்ரீராமஜெயம்🔯🕉* *பஞ்சாங்கம்… Read More

  17 hours ago

  Guru Peyarchi Palangal 2022-23 Parigarangal | குருப்பெயர்ச்சி பலன்கள் 2022-2023

  Guru Peyarchi Palangal 2022-23 Parigarangal குரு பெயர்ச்சி பலன்கள் 2022 - 2023 (Guru Peyarchi Palangal 2022-23)… Read More

  1 month ago

  Mesha rasi Guru peyarchi palangal 2022-23 | மேஷம் ராசி குருப்பெயர்ச்சி பலன்கள்

  Mesha rasi guru peyarchi palangal 2022-23 குருப்பெயர்ச்சி பலன்கள் 2021-22 Mesha rasi guru peyarchi palangal 2022-23… Read More

  1 month ago

  Rishaba rasi Guru peyarchi palangal 2022-23 | ரிஷபம் ராசி குருப்பெயர்ச்சி பலன்கள்

  Rishaba Rasi Guru Peyarchi Palangal 2022-23 ரிஷபம் ராசி குருப்பெயர்ச்சி பலன்கள் Rishaba Rasi Guru Peyarchi Palangal… Read More

  1 month ago

  Mithuna rasi Guru peyarchi palangal 2022-23 | மிதுனம் ராசி குருப்பெயர்ச்சி பலன்கள்

  Mithuna rasi Guru peyarchi palangal 2022-23 மிதுனம் ராசி குருப்பெயர்ச்சி பலன்கள்.. Mithuna rasi guru peyarchi palangal… Read More

  1 month ago