Events

Rishaba rasi Guru peyarchi palangal 2021-22 | ரிஷபம் ராசி குருப்பெயர்ச்சி பலன்கள்

Rishaba Rasi Guru Peyarchi Palangal 2021-22

ரிஷபம் ராசி குருப்பெயர்ச்சி பலன்கள் Rishaba Rasi Guru Peyarchi Palangal 2021-22

ரிஷப ராசி அன்பர்களே, இது வரை உங்கள் ராசிக்கு 9ம் இடத்தில இருந்து கலப்படமான பலன்களை தந்த குரு பகவான் 10ம் இடமான தொழில் ஸ்தானத்திற்கு பெயர்ச்சியாகிறார். 10ல் குரு பதவியை கொடுப்பர் என்று சொல்ல வேண்டும். செல்வங்கள் சேர்த்து தான தர்மங்கள் செய்யும் மன நிலை உருவாகும். பலரது பாராட்டுகளை கிடைக்க பெறுவீர்கள். 2ம் இடமானது பொருளாதாரத்தையும் குடும்ப வாழ்க்கையும் குறிக்கும் இடமாகும். தனஸ்தானம், வாக்குஸ்தானம், குடும்பஸ்தானம் எனப்படும் 2ம் இடத்திற்கு குரு பார்வை கிடைப்பதால் பொருளாதார ரீதியாக முன்னேற்றம் ஏற்படும்.

குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். உடன் பிறப்புகளுடன் இருந்த கருத்து வேற்றுமைகள் முற்றிலுமாக மறையும். 4ம் இடத்தை குரு பார்ப்பதால் புதிய வீடு வாங்கும் யோகம் ஏற்படும். வண்டி வாகன யோகம் மிக சிறப்பாக உள்ளது. 6ம் இடத்தை குரு பார்ப்பதால் எதிரி தொல்லை இருக்காது. 10ம் இடம் காரியஸ்தானம், அங்கு குரு இருப்பதால் சுப காரியங்களை செய்வீர்கள். 10ல் குரு வரும்போது ழில் வளர்ச்சி போன்ற நல்ல விஷயங்கள் நடைபெறும். 4ம் இடமாகிய சுகஸ்தானத்தையும் 6ம் இடமாகிய ரோக, சத்ரு ஸ்தானத்தையும் குரு பார்வை படுவதால் ஆரோக்கியத்தில் இருக்கும் அணைத்து குறைபாடுகளும் நீங்கிவிடும்.

(10ம் இடம் குருவுக்கு அவ்வளவு சிறப்பான இடமில்லை). குருவின் பார்வை 2, 4, 6, ஆகிய ஸ்தானத்தை பார்க்கிறார். குடும்ப ஸ்தானத்தை குரு பார்ப்பதால் பொருளாதார வளர்ச்சி ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். சொல்லும் செயலும் நிறைவேறும். இது வரை கொடுத்த வாக்குறுதி நிறைவேற்ற முடியும். பணம், பொன், பொருள் சேர்க்கை ஏற்படும். மனவருத்தம் காரணமாக பிரிந்த தம்பதியினர் மீண்டும் ஓன்று சேருவர். வர வேண்டிய பழைய பாக்கிகள் வசூல் ஆகும். புது முயற்சிகள் கை கூடும். குரு தன்னுடைய ஏழாம் பார்வையால் சுகஸ்தானம் என்ற 4ம் பாவத்தை பார்க்கிறார். தாயார், வீடு வாகனம் ஆகிய ஸ்தானத்தை பார்ப்பதால் புது வீடு கட்டி அதில் குடிபோகலாம். வண்டி, வாகனம் வாங்கும் யோகம் உண்டு. நீண்ட நாட்களாக இருந்த உடல் உபாதைகள் நீங்கி நலம் உண்டாகும். நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். தன்னுடைய 9 ஆம் பார்வையாக 6ம் பாவத்தை பார்ப்பதால் எதிரிகள் கூட நண்பர்களாக மாறுவர். கடன்கள் தொந்தரவு, கோர்ட் வழக்குகள் முற்றிலும் அகலும். புது முயற்சிகள் கை கூடும்.

இந்த பெயர்ச்சி சாதகமான பெயர்ச்சி என்று சொல்ல முடியாவிட்டாலும், மனம் வைத்தால் உங்கள் வாழ்வில் முன்னேற்றங்களைக் காண இயலும். குருவுக்கு 10ம் இடமென்றால் பதவியைப் பறித்துவிடுவாரே, கையில் காசு பணம் தங்காதே என்றெல்லாம் பதற்றப்பட வேண்டாம். ஒரளவு நன்மையே உண்டாகும். உங்கள் திறமையையும், உழைப்பையும் வேறு சிலர் பயன்படுத்தி முன்னேறுவர். எந்த விஷயத்தையும் நீங்களே முன்னின்று முடிக்கவும். எவருக்கும் வாக்குறுதி தரவேண்டாம். முக்கிய விஷயங்களை கையாளும்போது அலட்சியம் வேண்டாம். வீண் பழி வந்து சேரும். உங்கள் முயற்சிகளில் ஒரு சில தடை வரும் என்பதால் மன வலிமையை வளர்ததுக் கொள்ள வேண்டியது அவசியம். நீங்கள் எந்த ஒரு வேலை செய்தாலும் அது கடினமாக இருப்பது போல் ஒரு உணர்வு இருக்கும். புதிய முயற்சியில் தாமதம் ஆனாலும் நிச்சயம் நல்ல பலன்கள் கிடைக்கும். பண விஷயங்களை பொறுத்தவரை சாதகமான வகையில் இருக்க வாய்ப்பில்லை. குடும்பத்தில் ஆடம்பர செலவுகள் அதிகம் இருக்கும் என்பதால் சேமிப்புகளுக்கான வாய்ப்பும் குறைவு.

சொத்துக்கள் வாங்கல் விற்றல், வண்டி வாகனம் வாங்கல் விற்றல், வீட்டு உபயோகப் பொருட்கள் போன்ற விஷயங்கள் லாபகரமாக இருக்காது என்பதால் இந்த முயற்சிகளை தள்ளிப் போடுவது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். மனம் ஆரோக்கியமாக இருந்தால் தான் உடல் ஆரோக்கியமாக இருக்கும். மன அழுத்தம் குறைய தினமும் தியானம் செய்வது நல்லது. அவ்வப்போது மருத்துவ பரிசோதனை மேற்கொள்வது முக்கியம். குடும்ப உறவுகளில் பிரச்சினை ஏற்படும் என்பதால் கவனமாக நடந்து கொள்ள வேண்டும். புதிதாக திருமணமான தம்பதியர்களுக்கு பிரச்சனைகள் வர வாய்ப்புண்டு. சில நேரங்களில் கோபமே உங்களுக்கு எதிரியாக மாறும். வீண் வாதங்களில் ஈடுபட வேண்டாம். இது போன்ற ஒரு சூழ்நிலையில் மன அழுத்தத்திற்கு உள்ளாகும் வாய்ப்பு உள்ளது.

உங்கள் நிதி நிலையில் ஏற்றத் தாழ்வுகள் இருக்கும். அனாவசிய செலவுகளை கட்டுப்படுத்துவதன் மூலம் சேமிக்க முடியும். குடும்பத்தில் செலவுகள் அதிகம் இருக்கும் என்பதால் பணப்பற்றாக்குறை ஏற்படும். கடன் வாங்கும் விஷயத்தில் கவனமுடன் இருக்கவும். குடும்ப உறவுகளில் சலசலப்பும், சச்சரவுகளும் தலை தூக்கும். குடும்ப நபர்களின் ஒத்துழைப்பு கிடைப்பது சற்று கடினமே. உறவினர்கள் ஆதரவு சற்று குறைவாக இருக்கும். மனச் சோர்வு ஏற்பட வாய்புள்ளது. சுற்றி இருப்பவர்களிடம் அனுசரித்து அமைதியுடன் நடந்து கொள்வது நல்லது. நல்ல ஆரோக்கியத்துடன் இருந்தால் தான் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். வருமுன் காப்பது நல்லது என்பதை உணர்ந்து, உடல் நலத்தை பாதுகாப்பது நல்லது. குடும்ப நபர்களின் ஆரோக்கியத்திலும் கவனம் தேவை.

அலுவலகத்தில் இது வரை இருந்த பிரச்சனைகள் காணாமல் போகும். உத்யோகத்தில் எதிர்பார்த்த பலன்கள் கிடைத்தாலும், இடையே தடைகளும், தாமதங்களும் ஏற்படலாம். உத்யோக இடத்தில் நீங்கள் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். இந்த சமயத்தில் பதவி உயர்வு, உதிய உயர்வு, சாதகமான இடமாற்றம் போன்றவற்றையும் எதிர்பார்க்க முடியாது. சிலருக்கு வெளிநாட்டில், அண்டை மாநிலத்தில் வேலை அமையும். வேலைப்பளுவால் டென்ஷன் கூடும். தொழில், வியாபாரம் வகையில் பல பிரச்சனைகள் வரலாம். புதிய தொழில், வியாபாரம் தொடங்குவது பற்றி சற்று யோசித்தே முடிவு எடுக்க வேண்டும். கூட்டுத் தொழில், வியாபாரத்தில் அதிக செலவுகளோ, நஷ்டங்களோ ஏற்படலாம். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெரும்.

பரிகாரம் : பெற்றோர்களின் கால்களில் விழுந்து சாஷ்டாங்கமாக நமஸ்கரித்து ஆசி பெறுவது சிறப்பு

ரிஷப ராசி அன்பர்கள், திருச்சி வெக்காளியம்மன், திருவக்கரை வக்ரகாளியம்மன் முதலான ஆலயங்களுக்குச் சென்று வருவதன் மூலம் அதிகப்படியான நன்மைகளும் சிறப்பான பலன்கள் கிடைக்கும். வாழ்க வளமுடன்.

தென்குடித்திட்டையில் வீற்றிருக்கும் ஸ்ரீதட்சணாமூர்த்தியைச் சென்று வழிபடுங்கள். ஆதரவற்ற சிறுவர் சிறுமியர்களுக்கு உதவுங்கள். அவர்களின் கல்விக்குச் செய்யும் தானம் உங்கள் துன்பங்களைத் தூளாக்கிவிடும்.

குருப்பெயர்ச்சி பலன்கள் 2021-22

மேஷம் | ரிஷபம் | மிதுனம் | கடகம் | சிம்மம் | கன்னி | துலாம் | விருச்சிகம் | தனுசு | மகரம் | கும்பம் | மீனம்

108 குரு பகவான் போற்றி 

ஶ்ரீ குரு ஸ்தோத்ரம் பாடல் வரிகள்

குரு பகவானுக்குரிய திருத்தலங்கள்

Share
ஆன்மிகம்

Leave a Comment
Published by
ஆன்மிகம்
 • Recent Posts

  அட்சய திரிதியை பூஜை முறையும் பலனும் | Akshaya Tritiya benefits

  அட்சய திரிதியை பூஜை முறையும் பலனும் Akshaya Tritiya benefits சித்திரை (20) நாள் 3.5.2021 செவ்வாய்க்க்கிழமை அட்சய திருதியை… Read More

  4 weeks ago

  Today rasi palan 28/5/2022 in‌‍‌ tamil | இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கம் சனிக்கிழமை வைகாசி – 14

  Today Rasi Palan in Tamil | இன்றைய இராசிப்பலன் Join our WhatsApp group II. *🔯🕉ஶ்ரீராமஜெயம்🔯🕉* *பஞ்சாங்கம்… Read More

  17 hours ago

  Guru Peyarchi Palangal 2022-23 Parigarangal | குருப்பெயர்ச்சி பலன்கள் 2022-2023

  Guru Peyarchi Palangal 2022-23 Parigarangal குரு பெயர்ச்சி பலன்கள் 2022 - 2023 (Guru Peyarchi Palangal 2022-23)… Read More

  1 month ago

  Mesha rasi Guru peyarchi palangal 2022-23 | மேஷம் ராசி குருப்பெயர்ச்சி பலன்கள்

  Mesha rasi guru peyarchi palangal 2022-23 குருப்பெயர்ச்சி பலன்கள் 2021-22 Mesha rasi guru peyarchi palangal 2022-23… Read More

  1 month ago

  Rishaba rasi Guru peyarchi palangal 2022-23 | ரிஷபம் ராசி குருப்பெயர்ச்சி பலன்கள்

  Rishaba Rasi Guru Peyarchi Palangal 2022-23 ரிஷபம் ராசி குருப்பெயர்ச்சி பலன்கள் Rishaba Rasi Guru Peyarchi Palangal… Read More

  1 month ago

  Mithuna rasi Guru peyarchi palangal 2022-23 | மிதுனம் ராசி குருப்பெயர்ச்சி பலன்கள்

  Mithuna rasi Guru peyarchi palangal 2022-23 மிதுனம் ராசி குருப்பெயர்ச்சி பலன்கள்.. Mithuna rasi guru peyarchi palangal… Read More

  1 month ago