Events

Viruchiga rasi Guru peyarchi palangal 2021-22 | விருச்சிகம் ராசி குருப்பெயர்ச்சி பலன்கள்

Viruchiga rasi Guru peyarchi palangal 2021-22

விருச்சிகம் ராசி குருப்பெயர்ச்சி பலன்கள் – Viruchiga rasi Guru peyarchi palangal 2021-22

விருச்சிக ராசி அன்பர்களே, உங்கள் ராசிக்கு இது வரை 3ம் இடத்தில் மறைவு பெற்றிருந்த குரு இப்பொழுது 4ம் இடத்திற்கு வருகிறார். குரு 8ம் வீடான மிதுனத்தையும், 10ம் வீடான சிம்மத்தையும், 12ம் வீடான துலாத்தையும் பார்க்க போகிறது. இக்காலகட்டம் உங்கள் வாழ்க்கையில் பல மாற்றங்களை கொண்டு வரும். குரு பார்வை தொழில் ஸ்தானத்தின் மீது படுவதால் தொழில் வளர்ச்சி குறிப்பிட்டு சொல்லும்படி மிக மிக சிறப்பாக இருக்கும். விட்டுப்போன தொழிலை மீண்டு ஆரம்பித்து வெற்றி காண்பீர்கள். குரு பார்க்க கோடி நன்மை என்ற சொல்லுக்கு ஏற்ப 8, 10, 12ம் வீடுகள் சிறப்பாக அமையும். வீடு வாகனம் போன்ற வசதிகளும் அமையும். புதிய நண்பர்களின் சேர்க்கை கிட்டும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். சொந்த தொழில் விருத்தி அடையும். 12ம் இடமாகிய விரய ஸ்தானத்திற்கு குரு பார்வை கிடைப்பதால் குடும்பத்தில் சுப விரயங்கள் ஏற்படும். நீண்ட நாள் எதிர்பார்த்த விஷயங்கள் நடக்கும். 8ம் இடமாகிய மாங்கல்ய ஸ்தானத்தையும், 12ம் இடமாகிய அயன சயன ஸ்தானத்தையும் குரு பார்ப்பதால் திருமணங்கள் இனிதே நடைபெறும்.

இந்தப் பெயர்ச்சி, முற்றிலும் சாதகமான பெயர்ச்சி என்று கூற முடியாது. குரு கொஞ்சம் கஷ்டங்களைத்தான் அதிகம் தருவார் என்றாலும் கவலை வேண்டாம். உங்களின் பலம், பலவீனத்தைத் தெரிந்துகொள்வது நல்லது. பண வரவு இருந்தாலும் செலவுகளும் துரத்தும். நல்லவர்களின் நட்பு நன்மையை தரும். உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். பூர்வீகச் சொத்துப் விஷயத்தில் வில்லங்கம் இருக்கும். உங்களுக்கு திடீர் லாபம் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. சிலருக்கு, குடும்ப சொத்து அல்லது பூர்விக சொத்து வந்து சேரும் வாய்ப்புகள் உள்ளன. பொருளாதார நிலையில் ஏற்றத்தையும் நல்ல மாற்றத்தையும் பார்க்க முடியும். அதே சமயத்தில் இந்தக் காலக் கட்டத்தில் நீங்கள் சுப செலவுகள் செய்யும் வாய்ப்பும் உள்ளது. என்ற போதிலும் அந்த செலவுகள் அனைத்தும் கட்டுபாட்டுக்குள் இருக்கும். மனதில் அமைதி நிலவும். நீங்கள் எப்போதும் உற்சாகமாகவும், புத்துணர்ச்சியுடனும் இருப்பீர்கள்.

பிரியமானவர்களுடன் மனம் விட்டுப் பேசுவதும், அவர்களின் நம்பிக்கை மற்றும் ஆதரவையும் பெற முடியும். பெற்றோர்கள் உடல் நிலையில் கவனம் தேவை. உங்கள் ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்த வேண்டும். சில தேவையற்ற போட்டி, பொறாமைகள் வரலாம். நீங்கள் கணிசமான வருமானத்தைப் பெற முடியும். அதே சமயத்தில் செலவுகளும் சந்திக்க நேரும். வீடு, வண்டி வாகனம் போன்ற வகையில் செலவுகள் தவிர்க்க முடியாமல் போகலாம். மருத்துவ செலவுகளும் ஏற்பட வாய்ப்புள்ளது. செலவுகளை கட்டுப்படுத்தி சேமிப்பை அதிகரிக்க முயற்சி மேற்கொள்ள வேண்டியிருக்கும். குடும்ப உறவு முறைகள் சாதாரணமாக இருக்கும். சில சமயங்களில் கருத்து வேறுபாடு காரணமாக ஒற்றுமையின்மை தலை தூக்கும். என்றாலும் அவர்களிடம் இருந்து விலகிக் கொள்ளாமல் விட்டுக் கொடுத்து அனுசரணையுடன் நடந்து கொள்வதன் மூலம் நிலைமையை சமாளிக்க இயலும். குடும்ப உறுப்பினர்களுடன் கருத்து முரண்பாடுகள் இருந்தாலும் சுமூக உறவை வளர்த்துக்கொள்வது அவசியம்.

திருமணமான தம்பதிகள் பரஸ்பரம் தங்களுக்குள் ஒற்றுமையை கடைப்பிடிப்பது அவசியம். குடும்பத்தில் பிரச்சனைகள் வராமல் இருக்க விட்டுக் கொடுத்து போகவும். உணர்ச்சி வசப்படாமல் பொறுமையுடன் நடந்து கொள்ள வேண்டிய நேரம் இது. திருமணம் தொடர்பான முயற்சிகளை தாராளமாக மேற்கொள்ளலாம். இந்தக் காலக் கட்டத்தில் ஆரோக்கியம் சாதாரணமாக இருக்கும். உடல் உபாதைகள் சிறிய அளவில் இருக்கும் போதே தகுந்த மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொள்ளவும். நீங்கள் சூழ்நிலையை திறமையாகக் கையாள வேண்டியிருக்கும்.

வேலை இல்லாதோருக்கு வேலையும், வேளையில் இருப்போர்க்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு, கெளரவம், புகழ் ஆகியன கிடைக்கும். வேலை, தொழில், வெளிநாட்டு வாய்ப்புகள் போன்ற விஷயங்கள் அனுகூலமாக இருக்கும். உத்யோகத்தில் வரும் தடைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். சக ஊழியர்கள் ஒத்துழைப்பும் ஆதரவும் இல்லாத போதும் உங்களால் முன்னேற முடியும். உங்கள் வருமானம் உங்கள் தேவைகளை நிறைவேற்றப் போதுமானதாக இருக்கும். உத்யோகத்தில் புது முயற்சிகளுக்கு தக்க பலன்கள் கிடைக்கும். வேலை விஷயமாக அடிக்கடி பயணங்கள் மேற்கொள்ள வேண்டிவரும். சிலர் பணி தொடர்பாக வெளி நாடு செல்ல வேண்டிவரும். தொழில், வியாபாரத்தில் சாதாரண பலன்களையே எதிர்பார்க்க இயலும். மேலும் தொழில் வகையில் போட்டிகளும், பொறாமைகளும் இருக்கும். புதிதாகத் தொழில் தொடங்க விரும்புவோர், அவ்வாறு செய்வதற்கு முன், நன்கு யோசித்துச் செய்வது நல்லது.

பரிகாரம் : குரு பகவானை வியாழக்கிழமைகளில் சென்று வணங்கி வரலாம்.

விருச்சிக ராசி வாசகர்களுக்கு எப்போதும் பக்கபலமாக துணையாக இருப்பது ஸ்ரீ துர்கை அம்மன் வழிபாடு தான். எனவே பட்டீஸ்வரம் துர்கை அம்மன், கதிராமங்கலம் வனதுர்கை போன்ற துர்கை ஆலயங்களுக்குச் சென்று வருவதன் மூலம் நன்மைகள் அதிகமாகப் பெற முடியும். பிரச்சினைகள் எது வந்தாலும் எதிர்த்து நின்று வெற்றி பெற முடியும். வாழ்க வளமுடன்.

கருவூரில் அருள்பாலித்துக் கொண்டிருக்கும் ஸ்ரீ பசுபதீஸ்வரரை வணங்குங்கள். பார்வையற்றோருக்கு உதவுங்கள். மகிழ்ச்சி பெருகும்

குருப்பெயர்ச்சி பலன்கள் 2021-22

மேஷம் | ரிஷபம் | மிதுனம் | கடகம் | சிம்மம் | கன்னி | துலாம் | விருச்சிகம் | தனுசு | மகரம் | கும்பம் | மீனம்

108 குரு பகவான் போற்றி 

ஶ்ரீ குரு ஸ்தோத்ரம் பாடல் வரிகள்

குரு பகவானுக்குரிய திருத்தலங்கள்

Share
ஆன்மிகம்

Leave a Comment
Published by
ஆன்மிகம்
  • Recent Posts

    Girivalam benefits | திருவண்ணாமலை கிரிவலம் பலன்கள் | கிரிவலம் வரலாறு

    பக்தியோடு பக்தர்களால் சுற்றிக் கும்பிடப்படும் நிகழ்வு மலைவலம் அல்லது கிரிவலம் எனப்படும். கிரி என்றால் மலை ; வலம் என்றால் சுற்றுதல்… Read More

    18 hours ago

    வைகாசி விசாகம் விரதமுறை மற்றும் பலன்கள் | Vaikasi Visakam Fasting Benefits

    வைகாசி விசாகம் விரதமுறை மற்றும் பலன்கள் | Vaikasi Visakam Fasting Benefits வைகாசி விசாகம் (Vaikasi Visakam) விரதம்… Read More

    2 days ago

    செல்வ வளம் தரும் சித்ரா பௌர்ணமி | Chitra Pournami

    செல்வ வளம் தரும் சித்ரா பவுர்ணமி::°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°ஒவ்வொரு மாதமுமே பவுர்ணமி வரும். ஆனால் மற்ற எந்தப் பவுர்ணமிக்கும் இல்லாத சிறப்பு, சித்ரா… Read More

    1 month ago

    ஶ்ரீ நரசிம்மர் ஜெயந்தி ஸ்பெஷல்

    🌻🙏ஶ்ரீ நரசிம்மர் ஜெயந்தி ஸ்பெஷல் (4/5/23, வியாழக் கிழமை) 🌻🕉️ 🍒ஶ்ரீ லக்ஷ்மீந்ருஸிம்ஹ பரப்ரஹ்மணே நம🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾 🌹 ஸ்ரீ லக்ஷ்மி… Read More

    1 month ago

    அட்சய திரிதியை பூஜை முறையும் பலனும் | Akshaya Tritiya benefits

    அட்சய திரிதியை பூஜை முறையும் பலனும் Akshaya Tritiya benefits சித்திரை (10) நாள் 23.4.2023 ஞாயிற்றுக்கிழமை அட்சய திருதியை… Read More

    1 month ago