Viruchiga rasi Guru peyarchi palangal 2023-24
விருச்சிகம் குருப்பெயர்ச்சி பலன்கள் 2023 – 2024
பணத்துக்கும் பகட்டான வாழ்க்கைக்கும் மயங்காதவர்களே…!
ருண ரோக சத்ரு குரு – விருச்சிகம்
இவ்வுலகில் உள்ள அனைத்து உயிர்களையும் வழி நடத்தும் ஆற்றல் பெற்றது நவக்கிரகங்கள் நவக்கிரகங்களிலே சுபக்கிரகமாக விளங்கக் கூடிய ஸ்ரீ குருபகவான் ஒரு இராசியில் இருந்து மற்றொரு இராசிக்கு கடக்கும் காலம் 1 வருடம் ஆகும் ஸ்ரீ சோபகிருது வருஷம் சித்திரை மாதம் 09-ம் தேதி 22.04.2023 சனிக்கிழமை இரவு 11.27-க்கு மணிக்கு ஸ்ரீ குருபகவான் ரேவதி நட்சத்திரம் 4-ம் பாதம் மீன இராசியிலிருந்து அஸ்வினி நட்சத்திரம் 1-ம் பாதம் மேஷ இராசிக்கு பெயர்ச்சி ஆகிறார்.
செவ்வாய் பகவானின் அருள் பெற்ற விருச்சிக ராசி அன்பர்களே!!! குருபகவான் உங்கள் ராசிக்கு 2 மற்றும் 5-ம் இடத்துக்கு அதிபதி ஆவார். இப்போதைய பெயர்ச்சியில் உங்கள் ராசிக்கு நோய் -கடன் -எதிரி ஸ்தானமான 6-வது இடத்திற்கு செல்கிறார். அவருடைய சிறப்பு பார்வைகள் உங்கள் ராசிக்கு முறையே தொழில் (10-மிடம் ) குடும்பம் ,வாக்கு (2-மிடம்) விரயம் -தூக்கம் (12மிடம்) ஸ்தானங்களில் பதியும். வரும் குரு பெயர்ச்சி உங்களுக்கு எப்படிப்பட்ட பலன்களை வழங்கப் போகிறது என்பதை பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.
குரு பகவான் உங்க ராசிக்கு 5வது வீட்டிலிருந்து 6வது வீடான ருனரோக சத்திர ஸ்தானத்தில் அமரப்போகிறார். குரு பகவான் ருனரோக சத்திர ஸ்தானத்தில் அமருவது என்பது விருச்சிக ராசியினருக்கு சிறப்பு கிடையாது. ஏற்கனவே அர்த்தாஷ்டம சனி காலம் உங்களுக்கு ஆரம்பித்துக்கும் வேளையில், குரு பகவானும் ராசிக்கு சரியில்லாத இடத்தில் அமரப் போகிறார். குருவும் சனியும் சரியில்லாத இடத்தில் இருக்கிறார்கள்; எனவே ரொம்ப ரொம்ப ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். 6வது வீட்டில் அமரும் குரு பகவானால் விருச்சிக ராசியினர் உடல் ஆரோக்கிய ரீதியான பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். நிம்மதியற்ற சூழ்நிலையில் இருப்பீர்கள். எதிர்காலம் சார்ந்த மனக்குழப்பத்தால் மிகவும் வருத்ததோடே காணப்படுவீர்கள்.
எதிரிகள் அதிகரிக்கும் காலம் என்பதால், யாரிடம் பேசுவதாக இருந்தாலும் 3க்கு 4தடவை யோசித்து வார்த்தையை கவனமாக பேச வேண்டும். விளையாட்டாக பேசுவது கூடு பெரிய வினையாக மாறிவிரும். நீங்க அமைதியாக இருந்தாலும் உங்களை தேடி வந்து வம்புக்கு இழுப்பார்கள். எனவே, நீங்க உண்டு உங்க வேலையுண்டுனு இருப்பது சிறப்பு. அடுத்தவர் பிரச்சனையில் மூக்கை நுழைப்பதை தவிர்க்க வேண்டும். பெரிய பிரச்சனையில் சிக்காமல் இருக்க வேண்டுமென்றால், அனைவரையும் அரவணைத்து நடந்துக்கொள்ள வேண்டும். குடும்பத்தாரிடம் அனுசரித்து நடந்துக்கொண்டால் தேவையில்லாத பின்விளைவுகளை தவிர்க்கலாம். தொழில் பெரிய முதலீடு செய்வதை தவிர்க்க வேண்டும். குரு பகவான் அமரும் இடம்தான் சிறப்பில்லாமல் இருக்கிறது, ஆனால் பார்வையிடும் இடம் அற்புதமாக இருக்கிறது.
அதாவது குரு பகவான் 5வது பார்வையாக 10வது வீடான தொழில் ஸ்தானத்தை பார்வையிடுவதால், புதிய தொழில் தொடங்குவது சம்பந்தமான எண்ணங்கள் தோன்றும். 6ல் குரு இருப்பதால் புதிய தொழில் தொடங்குவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
எதற்கும் ஆசைபட கூடாது. கடன் வாங்குவதையும், கடன் கொடுப்பதை தவிர்க்க வேண்டும். ஆடம்பர செலவுகளை தள்ளி வைக்க வேண்டும். பணத்தை சேமிக்க வைத்துக் கொள்ள முயற்சி செய்ய வேண்டும். திருமணம் சார்ந்த பிரச்சனையால் கவலையில் இருப்பீர்கள், அவை அனைத்தும் ஆரம்பத்தில் பயத்தை ஏற்படுத்தினாலும் இறுதியில் உங்களுக்கு சாதகமாகவே அமையும்.
வாழ்க்கை துணைக்கு இருந்துவந்த உடல் ஆரோக்கிய பிரச்சனைகள் நீங்கும். வேலைபறிப்போகும் வாய்ப்புள்ளதால் பணியிடத்தில் ரொம்ப கவனமாக இருக்க வேண்டும். அரசு வேலைக்காக காத்திருப்பவர்களுக்கு முயற்சி அதிகமாக இருந்தால் நிச்சயம் கிடைக்கும். குடும்பத்தில் வரவும் செலவும் சரியாக இருக்கும். பெரிய அளவிலான கஷ்டங்கள் இருக்காது. அடுத்தது, குரு பகவான் தனது 7வது பார்வையாக உங்க ராசிக்கு 12வது வீடான சுபவிரைய ஸ்தானத்தை பார்வையிடுவதால், தண்டச் செலவுகள் குறையும். வண்டி, வாகனம் வாங்குவதற்கான யோகம் உண்டு. குடும்பத்தினரின் ஆசைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். திருமண முயற்சிகள் வெற்றியை கொடுக்கும்.
அதேபோல், குரு பகவான் தனது 9வது பார்வையாக உங்க ராசிக்கு 2வது விடான தன ஸ்தானம், குடும்ப ஸ்தானம், வாக்கு ஸ்தானத்தை பார்வையிடுவதால் கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். வார்த்தையில் தெளிவு பிறக்கும். வழக்கறிஞர்களுக்கு அற்புதமான காலக்கட்டம். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். இருப்பினும், தாயாரிடம் பேசும்போது கவனமாக இருக்க வேண்டும். ஆக மொத்தம் இந்த குரு பெயர்ச்சி உங்களுக்கு எப்படி இருக்குமென்றால் கவனமிருந்தால் கவலை இல்லை.
உங்கள் ராசியில் இருந்து ஆறாம் வீடான ருண ரோக சத்ரு ஸ்தானத்தில் குரு பயணம் செய்யப்போகிறார். வேலை செய்யும் இடத்தில் நிதானமும் கவனமும் தேவை. குரு பயணிக்கும் இடம் கடன் வம்பு வழக்கு இடம் என்பதால் வங்கிக் கடன் வாங்கி இடம் வீடு நிலம் வாங்கலாம். ஆவணங்களை சரி பார்த்து வாங்குவது அவசியம். அலுவலகத்தில் உயரதிகாரிகளால் தொல்லைகள் ஏற்படும். கவனமாகவும் நிதானமாகவும் அடி எடுத்து வைப்பது நல்லது.
பரிகாரம்
வாரம் தோறும் செவ்வாய்க்கிழமை முருகன் கோயில்களில் இருக்கும் நவகிரக சன்னதிக்கு சென்று செவ்வாய் பகவானுக்கு அர்ச்சனை செய்து, முருகப்பெருமானை வழிபாடு செய்து வாருங்கள். ஒரு முறை திருச்செந்தூர் சென்று வாருங்கள் நல்லதே நடக்கும்.
குருப்பெயர்ச்சி பலன்கள் 2023-24
மேஷம் | ரிஷபம் | மிதுனம் | கடகம் | சிம்மம் | கன்னி | துலாம் | விருச்சிகம் | தனுசு | மகரம் | கும்பம் | மீனம்
ஶ்ரீ குரு ஸ்தோத்ரம் பாடல் வரிகள்