Magara rasi guru peyarchi palangal 2020-21
மகர ராசி பலன்கள் – 75/100 – மகரம் ராசி குருப்பெயர்ச்சி பலன்கள்.. Magara rasi guru peyarchi palangal 2020-21
மன உறுதி அதிகம் கொண்ட மகர ராசி அன்பர்களே..!!
நடைபெற இருக்கின்ற குருப்பெயர்ச்சியில் மகர ராசியில் பனிரெண்டில் இருந்துவந்த குருதேவர் ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். குருதேவர் தான் நின்ற இடத்திலிருந்து ஐந்தாம் பார்வையாக மகர ராசிக்கு ஐந்தாம் இடமான பூர்வீக ஸ்தானத்தையும், ஏழாம் பார்வையாக ராசிக்கு ஏழாம் இடமான களத்திர ஸ்தானத்தையும், ஒன்பதாம் பார்வையாக ராசிக்கு ஒன்பதாம் இடமான பாக்கிய ஸ்தானத்தையும் பார்க்கிறார்.
பூர்வீக சொத்துக்களை விருப்பம் போல் மாற்றி அமைப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். வாரிசுகளின் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கப் பெறுவீர்கள். நண்பர்களுடன் கேளிக்கையில் ஈடுபட்டு மனம் மகிழ்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். வாழ்க்கை துணைவருடன் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் ஒற்றுமை குறையாது. எதிர்பாராத சில வாய்ப்புகளின் மூலம் முன்னேற்றம் உண்டாகும்.
பெண்களுக்கு :
திருமணமான தம்பதிகளுக்கு சுபச்செய்திகள் விரைவில் கிடைக்கப் பெறுவீர்கள். வாழ்க்கை துணைவருடன் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். பணி நிமிர்த்தமான இடமாற்றங்கள் கிடைக்கப் பெறுவீர்கள். சிறுதொழில் செய்பவர்களுக்கு முயற்சிக்கேற்ப முன்னேற்றம் உண்டாகும். தந்தை வழி உறவினர்களின் மூலம் அனுகூலமான பலன்கள் கிடைக்கப் பெறுவீர்கள்.
மாணவர்களுக்கு :
மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும். இலக்கியம் சார்ந்த துறைகளில் உயர்கல்வி பெறுபவர்களுக்கு சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவீர்கள். விளையாட்டு தொடர்பான செயல்பாடுகளில் ஈடுபட்டு பாராட்டுகளை பெறுவீர்கள்.
வியாபாரிகளுக்கு :
கூட்டாளிகளின் மூலம் மேன்மையான பலன்கள் ஏற்படும். புதிய வாகனம் தொடர்பான பயணங்களின் மூலம் லாபம் உண்டாகும். உணவு சார்ந்த தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு புதிய வாடிக்கையாளர்களின் அறிமுகமும், ஆதரவும் கிடைக்கப் பெறுவீர்கள்.
விவசாயிகளுக்கு :
மனைகளின் மூலம் பொருளாதாரம் மேம்படும். தானியம் தொடர்பான விளைச்சலில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். விளைச்சலுக்கு ஏற்ப லாபங்கள் கிடைக்கும். கால்நடைகளின் ஆரோக்கியம் சார்ந்த பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கப் பெறுவீர்கள்.
அரசியல்வாதிகளுக்கு :
அரசியல் சார்ந்த புதிய முயற்சிகளில் சற்று கவனத்துடன் இருக்க வேண்டும். பயணங்கள் தொடர்பான செயல்பாடுகளில் மாற்றங்கள் ஏற்பட்டு கொண்டிருக்கும். நீண்ட நாட்களாக இருந்துவந்த பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கப் பெறுவீர்கள். போட்டிகள் தொடர்பான செயல்பாடுகளில் நிதானத்துடன் செயல்பட்டால் வெற்றி பெறுவதற்கான சூழ்நிலைகள் உண்டாகும்.
கலைஞர்களுக்கு :
கலை சார்ந்த துறையில் இருப்பவர்களுக்கு சக ஊழியர்களின் ஒத்துழைப்பு சாதகமாக அமையும். வயதில் மூத்த கலைஞர்களின் அறிவுரைகளை கேட்டு நடப்பதன் மூலம் நன்மதிப்பை உருவாக்கி கொள்வதற்கான சூழ்நிலைகள் அமையும். தொழில் நிமிர்த்தமாக புதிய ஒப்பந்தங்கள் கிடைப்பதில் சற்று காலதாமதம் உண்டாகும்.
உத்தியோகஸ்தர்களுக்கு :
அரசு தொடர்பான பணிகளில் இருந்துவந்த காலதாமதம் நீங்கி சுபிட்சம் உண்டாகும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். சிலருக்கு பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். நண்பர்களின் மூலம் சில செயல்களை செய்து முடிப்பதற்கான தருணங்கள் ஏற்படும்.
மொத்தத்தில் இந்தக் குருப்பெயர்ச்சி வேலைச் சுமையையும் எதிர்மறை எண்ணங்களையும் தருவதாக இருந்தாலும், எதிர்காலத்துக்கான பலமான அஸ்திரவாரத்தை இடவைப்பதாக அமையும்.
ஜென்ம குரு மகரம் ராசிக்காரர்களுக்கு ஜென்ம சனி கால கட்டம். குரு ஜென்ம ராசிக்கு வருகிறார். ஜென்ம குரு வனத்தினிலே என்பது போல 30 வயதுக்கு உட்பவர்களுக்கு சோதனை மிகுந்த காலம். மனச்சஞ்சலங்களும் டென்ஷனும் அதிகமாக இருக்கும். எதிலும் நிதானித்து பயனிப்பது நல்லது. குரு பெயர்ச்சியின் முக்கால் பகுதி வரை கடன் வேலை சார்ந்த விசயங்களில் பிரச்சினை இருக்கும். கணவன் மனைவி இடையே கருத்து மோதல்கள் வரும். ஒருவரையொருவர் அனுசரித்து செல்வது நல்லது. சொந்த முதலீடுகள் வேண்டாம். குரு பெயர்ச்சியின் இறுதியில் தொழில் வேலை ரீதியான முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும்.
வழிபாடு :
வியாழக்கிழமைதோறும் சிவன் கோவிலுக்கு சென்று மஞ்சள் நிற பூக்களை சூட்டி, எள் எண்ணெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்து வர மனதில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கி தெளிவும், மகிழ்ச்சியும் கிடைக்கப் பெறுவீர்கள்.
திருவிடைமருதூருக்கு அருகிலுள்ள திருக்கஞ்சனூரில் அருளும் ஸ்ரீஅக்னீஸ் வரரையும் ஸ்ரீதட்சிணாமூர்த்தியையும் பூசம் நட்சத்திரம் நடைபெறும் நாளில் சென்று வணங்குங்கள்; நல்லது நடக்கும்.
குருப்பெயர்ச்சி பலன்கள் 2020-21
மேஷம் | ரிஷபம் | மிதுனம் | கடகம் | சிம்மம் | கன்னி | துலாம் | விருச்சிகம் | தனுசு | மகரம் | கும்பம் | மீனம்
ஶ்ரீ குரு ஸ்தோத்ரம் பாடல் வரிகள்
குரு பகவானுக்குரிய திருத்தலங்கள்