Thula rasi Guru peyarchi palangal 2020-21

துலா ராசி பலன்கள் – 80/100 துலாம் ராசி குருப்பெயர்ச்சி பலன்கள்- Thula rasi Guru peyarchi palangal 2020-21

துலாக்கோல் போல் எதையும் சீர்தூக்கி பார்த்து எடை போடும்… தூய்மையான இதயம் கொண்ட துலாம் ராசி அன்பர்களே…!!

நடைபெற இருக்கின்ற குருப்பெயர்ச்சியில் குருவானவர் ராசிக்கு மூன்றாம் இடத்தில் இருந்து நான்காம் இடமான சுக ஸ்தானத்திற்கு பெயர்ச்சி அடைகிறார். குரு தான் நின்ற இடத்தில் இருந்து ஐந்தாம் பார்வையாக துலாம் ராசிக்கு எட்டாம் இடமான அஷ்டம ஸ்தானத்தையும், ஏழாம் பார்வையாக தொழில் ஸ்தானமான பத்தாம் இடத்தையும், ஒன்பதாம் பார்வையாக ராசிக்கு பனிரெண்டாம் இடமான அயன சயன போக ஸ்தானத்தையும் பார்க்கின்றார்.

 

மனதில் புதுவிதமான சிந்தனைகளையும், செயல்பாடுகளையும் மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். வாரிசுகளின் மூலம் அனுகூலமான சூழ்நிலைகள் உண்டாகும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்துவந்த தனவரவுகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் ஏற்படும். ஆரோக்கியம் தொடர்பான செலவுகள் குறையும். தனக்கென்று புதிய ஆதரவான நபர்களை புரிந்துக்கொள்வதற்கான சூழ்நிலைகள் ஏற்படும். வாழ்க்கை பற்றிய புதுவிதமான கண்ணோட்டங்கள் உண்டாகும்.

 

பெண்களுக்கு :

குடும்ப உறுப்பினர்களின் மூலம் மகிழ்ச்சியான தருணங்கள் ஏற்படும். தாய்வழி உறவினர்களின் மூலம் ஆதரவு கிடைக்கும். கடன் தொடர்பான பிரச்சனைகள் நீங்கும். விலகி சென்றவர்கள் நெருங்கி வருவதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். சுபகாரியம் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.

 

மாணவர்களுக்கு :

மாணவர்களுக்கு கல்வியில் விளையாட்டும், கவனக்குறைவும் அவ்வப்போது ஏற்பட்டு நீங்கும். ஒருமுறைக்கு இருமுறை பாடத்தை படித்து எழுதி பார்ப்பதன் மூலம் நல்ல மதிப்பெண்களை பெறமுடியும். பயணங்களின் போதும், விளையாட்டுகளில் ஈடுபடும் போதும் கவனத்துடன் இருக்க வேண்டும்.

 

உத்தியோகஸ்தர்களுக்கு :

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த பணிமாற்றங்கள் கிடைக்கும். சக ஊழியர்களின் மூலம் சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் அவர்கள் அனுகூலமாக நடந்து கொள்வார்கள். நண்பர்களிடத்தில் பணி நிமிர்த்தமான செயல்களை பகிர்வதை தவிர்க்கவும்.

 

வியாபாரிகளுக்கு :

வியாபாரிகளுக்கு தொழில் நிமிர்த்தமான செயல்பாடுகளில் இருந்துவந்த தடை, தாமதங்கள் நீங்கி முன்னேற்றம் உண்டாகும். மறைமுகமாக இருந்துவந்த சில தடைகளை அறிந்து அதை நிவர்த்தி செய்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரம் தொடர்பான பயணங்களில் லாபமும், புதிய அறிமுகமும், ஆதரவும் கிடைக்கப் பெறுவீர்கள்.

 

கலைஞர்களுக்கு :

கலைத்துறையில் இருப்பவர்களுக்கு பொருளாதாரம் தொடர்பான பிரச்சனைகள் நீங்கி முன்னேற்றம் உண்டாகும். ஆரோக்கியம் தொடர்பான சில இன்னல்கள் படிப்படியாக குறையும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். தள்ளிப்போன சில ஒப்பந்தங்கள் மீண்டும் கிடைப்பதற்கான சூழ்நிலைகள் ஏற்படும்.

 

அரசியல்வாதிகளுக்கு :

மக்கள் தொடர்பு பணியில் இருப்பவர்கள் தங்களுக்கென்று தனி அடையாளத்தை உருவாக்கி கொள்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். புதிய முயற்சிகளின் மூலம் முன்னேற்றமான சூழ்நிலைகள் உண்டாகும். வழக்கு தொடர்பான பிரச்சனைகளில் தீர்ப்புகளும், முடிவுகளும் கிடைக்கும்.

 

விவசாயிகளுக்கு :

மனை தொடர்பான கடன் உதவிகள் கிடைக்கும். வேலையாட்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை உண்டாகும். எண்ணெய் வித்துக்கள் தொடர்பான பயிர்களின் மூலம் லாபம் மேம்படும். அக்கம்பக்கம் இருப்பவர்களிடம் நீண்ட நாட்களாக இருந்துவந்த பிரச்சனைகள் நீங்கி சுபிட்சம் உண்டாகும்.

மொத்தத்தில் இந்தக் குருப்பெயர்ச்சி அவ்வப்போது ஏமாற்றங்களையும், இடமாற்றங் களையும் தந்தாலும், கடின உழைப்பால் உங்களை முன்னேற வைப்பதாக அமையும்.

சுக ஸ்தான குரு குரு 4ஆம் வீட்டில் அமரப் போகிறார். அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டவும். சுக ஸ்தானத்தில் உள்ள குரு சுகங்களை தடுப்பார் எச்சரிக்கையாக இருக்கவும். தங்கள் சுக விசயங்களை அனுபவிப்பதில் சிக்கல்கள் ஏற்படும். பலருக்கும் வீடு அல்லது வேலை ரீதியான இடங்களில் இட மாற்றம் நிகழும். இந்த குரு பெயர்ச்சி மனைவி அல்லது தாய்க்கு பிரச்சினைகளை கொடுக்கும். புது முயற்சிகளில் கவனம் தேவை. ஏப்ரல் மாதத்திற்குப் பிறகு குரு ஐந்தாம் வீட்டிற்கு அதிசாரத்தில் செல்லும் போது குருவின் பார்வை உங்க ராசிக்கு கிடைக்கும் காலத்தில் பாதிப்புகள் நீங்கி நன்மைகள் நடைபெறும்.

வழிபாடு :

சனிக்கிழமைதோறும் ஆஞ்சநேயரை மஞ்சள் நிற பூக்களால் வழிபாடு செய்துவர முயற்சிகளில் இருந்துவந்த தடைகள் நீங்கி முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும்.

காஞ்சிபுரம் ஸ்ரீஏகாம்பரேஸ்வரரயும் அவர் கோயிலில் அருளும் ஸ்ரீதட்சிணா மூத்தியையும், புனர்பூசம் நட்சத்திர நாளில் சென்று வணங்குங்கள். தடைகள் நீங்கும்; நினைத்த காரியங்கள் நிறைவேறும்.

குருப்பெயர்ச்சி பலன்கள் 2020-21

மேஷம் | ரிஷபம் | மிதுனம் | கடகம் | சிம்மம் | கன்னி | துலாம் | விருச்சிகம் | தனுசு | மகரம் | கும்பம் | மீனம்

108 குரு பகவான் போற்றி 

ஶ்ரீ குரு ஸ்தோத்ரம் பாடல் வரிகள்

குரு பகவானுக்குரிய திருத்தலங்கள்

Leave a Comment