மகரம்: ராகு – கேது பெயர்ச்சி பொதுப்பலன்கள் (1.9.2020 முதல் 21.3.2022 வரை) Magara rasi palangal Rahu ketu peyarchi 2020

மகர ராசி வாசகர்களே

ராகு பலன்கள்: இது நாள் வரை உங்கள் ராசிக்கு 6 ல் இருந்த ராகு பகவான் மறைமுக எதிரிகளால் மன உளைச்சலையும், எதிர்ப்புகளையும் கொடுத்து வந்தார் இனி அவர் உங்கள் ராசிக்கு 5 ம் வீட்டில் அமர போகிறார்

இதனால் கணவன் மனைவிக்குள் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் விலகி அன்யோனியம் பெருகும். செய்வதறியாது இருந்து வந்த மந்த நிலை மாறி புது உத்வேகத்துடன் செயல்படுவீர்கள். கிடைக்கும் வேலையில் உங்களை நிலை நிறுத்திக்கொள்ளுங்கள். ஒரு சிலருக்கு இட மாறுதல்கள் ஏற்படவும் வாய்ப்புண்டு.

புது முயர்ச்சியில் சற்று நிதானம் தேவை. ஆடை, ஆபரணங்கள் சேரும். வீட்டிற்கு தேவையான ஆடம்பர பொருட்களை வாங்குவீர்கள்.

கேது பலன்கள்: இது நாள் வரை உங்கள் ராசிக்கு 12 ம் வீட்டில் அமர்ந்து வீண் விரையங்களை , மன சோர்வையும் அளித்து வந்த கேது பகவான் இனி உங்கள் ராசிக்கு 11-ல் வந்து அமர போகிறார். இதனால் தடைபட்ட சுபகாரியங்கள் இனிதே கைகூடும். வங்கியில் வாங்கிய கடன்களை பைசல் செய்வீர்கள். திடீர் அதிர்ஷ்டம் உங்களை தேடி வரும். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் கூடும். புது புது உத்திகளை கையாண்டு வியாபாரத்தை விரிவுபடுத்துவார்கள்.

குடும்ப வருமானம் உயரும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். பெண்கள் விஷயத்தில் சற்று கவனம் தேவை.

உத்திராடம் – 2, 3, 4:

இந்த பெயர்ச்சியில் சுபச்செலவுகள் உண்டாகும். அடுத்தவர் பிரச்சனைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. அன்னிய மனிதர்கள் மூலம் உதவிகளை செய்வார். வெளிநாடு செல்வதில் எதிர்பாராத சிக்கல் ஏற்படலாம். கவனம் தேவை. நண்பர்களிடம் பழகும் போது எச்சரிக்கை அவசியம்.

திருவோணம்:

இந்த பெயர்ச்சியின் மூலம் குடும்பத்தில் மதிப்பை பெறுவீர்கள். ஆக்க பூர்வமான யோசனைகளை செயல்படுத்தி எதிலும் வெற்றி காண்பீர்கள். தெளிவான மனநிலை இருக்கும். சாமர்த்தியமாக செயல்பட்டு சாதகமான பலன் பெறுவீர்கள். செயல்திறன் அதிகரிக்கும் ஆனால் உங்களுக்கு எதிராக சிலர் செயல்படும் சூழ்நிலை இருப்பதால் கவனம் தேவை.

அவிட்டம் – 1, 2:

இந்த பெயர்ச்சியினால் தொழில், வியாபாரம் தொடர்பாக வீண் அலைச்சல் இருக்கும். சில நேரங்களில் முக்கிய முடிவு எடுப்பதில் தயக்கம் காட்டுவீர்கள். வாடிக்கையாளர்களை அனுசரித்து செல்வதன்மூலம் கூடுதல் லாபம் கிடைக்க பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையுடன் செயல்பட்டு நிர்வாகத்தினரால் பாராட்டு கிடைக்க பெறுவார்கள்.

பரிகாரம்: ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் சாற்றி அர்ச்சனை செய்து வணங்க வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். மனதில் தைரியம் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட எண்கள்: 2 – 6 – 7 – 9

மலர் பரிகாரம்: துளசியை சனிக்கிழமைதோறும் பெருமாளுக்கு அர்ப்பணித்து பிரார்த்தனை செய்யுங்கள்.

சொல்ல வேண்டிய மந்திரம்: “ ஓம் ஸ்ரீசாஸ்தாய நமஹ” என்ற மந்திரத்தை தினமும் 9 முறை சொல்லவும்.

ராகு & கேது பரிகார ஸ்லோகம்:
ஓம் ஸ்ரீ காருண்யாய, கருடாய, வேத ருபாய, வினதா புத்ராய, விஷ்ணு பக்தி பிரியாய, அம்ருத கலச ஹஸ்தாய, பஹீ பராக்ரமாய,  பக்ஷி ராஜாய , சர்வ வக்ர, சர்வ தோஷ, சர்ப்ப தோஷ, விஷ சர்ப்ப விநாசநாய ஸ்வாஹா.
இந்த மந்திரத்தை 27 முறை சொல்லவும்.

Leave a Comment