Guru Peyarchi Palangal 2020-21 Parigarangal

குரு பகவான் இப்போது தனுசு ராசியில் சஞ்சரிக்கிறார். தனது வீடான தனுசு ராசியில் ஆட்சி பெற்று அமர்ந்திருக்கும் குரு பகவான் வாக்கிய பஞ்சாங்கப்படி வரும் ஐப்பசி 30ஆம் தேதி, நவம்பர் 15ஆம் நாள் குரு பெயர்ச்சி (Guru Peyarchi Palangal 2020-2021 Parigarangal) நிகழ உள்ளது. குரு பகவான் தனுசு ராசியில் இருந்து மகரம் ராசிக்கு பெயர்ச்சியாகிறார். திருக்கணித பஞ்சாங்கப்படி கார்த்திகை 5ஆம் தேதி நவம்பர் 20ஆம் தேதி வெள்ளிக்கிழமை நிகழ உள்ளது. இந்த குரு பெயர்ச்சியால் ரிஷபம், கடகம், கன்னி, தனுசு, மீனம் ராசிகள் பலம் பெறுகின்றன. குரு பெயர்ச்சியால் மேஷம், மிதுனம்,சிம்மம், துலாம், விருச்சிகம், மகரம், கும்பம் சுமாரான பலன்களை பெறுவதால் பரிகாரம் செய்ய வேண்டும். ராசிப்பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை நம் ஆன்மீக தளத்தின் கருத்துகள் அல்ல.

மேஷம் ராசி குருப்பெயர்ச்சி பலன்கள் 2020-2021

https://bit.ly/2TBYN47

உங்களது ராசிக்கான மதிப்பெண் 70/100.

இந்தக் குருப் பெயர்ச்சி உங்களைச் செம்மைப்படுத்துவதாகவும் சமூகத்தில் வளைந்துகொடுத்துப் போகும் கலையைக் கற்றுத் தருவதாகவும் அமையும்.

தொழில் குரு 9,12க்குடைய குரு 10ஆம் வீட்டில் சஞ்சரிக்கப்போகிறார். தொழில் அல்லது வேலை மாற்றம் நிகழும். செய்தொழில் மற்றும் வேலை ரீதியான பிரச்சினைகள் நிகழும். உங்களுடைய தொழில் காரகன் சனி தொழில் ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார் ஓரளவு பிரச்சினைகளை சமாளிக்கலாம். குரு அதிசாரமாக உங்க ராசிக்கு லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் உங்களுக்கு வேலை தொழிலில் ஏற்பட்ட பிரச்சினைகள் நீங்கி சந்தோஷம் அதிகரிக்கும்.

வழிபாடு :

திருச்செந்தூரில் இருக்கக்கூடிய முருகப்பெருமானை சஷ்டி தினத்தில் சென்று வழிபாடு செய்து வர முன்னேற்றமான வாய்ப்புகளும், உதவிகளும் கிடைக்கப் பெறுவீர்கள்.

திண்டிவனத்துக்கு அருகிலுள்ள மயிலம் தலத்தில் அருளும் ஸ்ரீமுருகப்பெருமானை, சஷ்டி திதி நாளில் சென்று தீபமேற்றி வணங்கி வாருங்கள்; வாழ்வில் உயர்வு பெருவீர்கள்.

 

ரிஷபம் ராசி குருப்பெயர்ச்சி பலன்கள் 2020-2021

https://bit.ly/2TBofXJ

உங்களது ராசிக்கான மதிப்பெண் 90/100.

இந்தக் குருப்பெயர்ச்சி, வசதி- வாய்ப்புகளை அதிகப்படுத்துவதாக அமையும்.

பாக்ய குரு ரிஷபம் ராசிக்கு குரு பகவான் 8ஆம் இடத்திருந்து 9ஆம் இடத்திற்கு செல்லப் போகிறார்.9ஆம் இடம் என்பது தெய்வ வழிபடுகளையும், சன்னதியையும் குறிக்கும். குரு உங்க ராசிக்கு 8,11க்குடையர். நிறைய தொலை தூர தெய்வ வழிபாடுகளைச் செய்வீர்கள். தங்க நகைகள் வாங்குவதற்கு ஏற்ற காலகட்டம் இது. குரு பெயர்ச்சியின் இறுதி காலகட்டங்களில் அரசு மற்றும் அரசியலில் இருப்பவர்களுக்கு மேன்மை உண்டாகும்.

வழிபாடு :

வெள்ளிக்கிழமைதோறும் சுக்கிர ஓரையில் மகாலட்சுமியை மல்லிகை மலர்கள் சாற்றி வணங்கி வழிபாடு செய்துவர எண்ணத்தெளிவும், காரிய சித்தியும், பூர்வீக மேன்மையும் உண்டாகும்.

சென்னை – திருவொற்றியூரில் அருளும் ஸ்ரீதட்சிணாமூர்த்தியை, வியாழக் கிழமைகளில் கொண்டைக் கடலை சமர்ப்பித்து வழிபட்டு வாருங்கள். அவரின் திருவருளால் தடைகள் நீங்கும்; வெற்றி கிடைக்கும்.

 

மிதுனம் ராசி குருப்பெயர்ச்சி பலன்கள் 2020-2021

https://bit.ly/34HoSFk

உங்களது ராசிக்கான மதிப்பெண் 70/100.

இந்தக் குருப்பெயர்ச்சி, அதீத உழைப்பால் புதிய முயற்சிகளை முடிக்கவைப்பதாக அமையும்.

அஷ்டம குரு மிதுன ராசிக்கு குரு பகவான் 7,10க்குடையர் குரு பகவான் இப்போது உங்க ராசிக்கு 8ஆம் வீட்டிற்கு வரப்போகிறார். அஷ்டமச் சனி பாதிப்பை தரும் நிலையில் அஷ்டம குரு வந்து சனியின் பாதிப்பை சற்றே குறைப்பார். தொழில் வேலை விசயங்களில். புதிய முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். யாரேனும் ஒருவர் உங்களுக்கு உதவிக்கரம் நீட்டுவார். 2021 ஆம் ஆண்டில் உங்கள் நிலைமை சிறப்பாக மாறும் நம்பிக்கையுடன் இருங்கள்.

வழிபாடு :

வியாழக்கிழமைதோறும் மஞ்சள் பூக்களை கொண்டு குருமார்களை வழிபாடு செய்துவர சுபகாரியம் மற்றும் தொழிலில் இருந்துவந்த காலதாமதங்கள் விலகி சுபிட்சம் உண்டாகும்.

தூத்துக்குடி மாவட்டம், ஆழ்வார்திருநகரி எனும் ஊரில் வீற்றிருக்கும் ஸ்ரீஆதிநாதன், ஸ்ரீஆதிநாத நாயகியைச் சனிக்கிழமைகளில் சென்று, மலர் மாலை அணிவித்து வணங்கி வாருங்கள்; மகிழ்ச்சி தொடங்கும்.

 

கடகம் ராசி குருப்பெயர்ச்சி பலன்கள் 2020-2021

https://bit.ly/32d9rTV

உங்களது ராசிக்கான மதிப்பெண் 75/100.

களத்திர குரு குரு பகவான் உங்க ராசிக்கு 7ஆம் வீட்டில் அமர்கிறார். கேந்திர ஆதிபத்திய தோஷம்தான் என்றாலும் குருவின் பார்வை உங்க ராசிக்கு கிடைக்கிறது. குரு பார்வையால் கடந்த காலங்களில் இருந்த கஷ்டங்கள் நீங்கும் கண்டச்சனியால் ஏற்பட்ட கவலைகள் தீரு. குடும்பத்தில் அசாத்திய சூழ்நிலைகள் நிலவும். கணவன் மனைவி உறவில் சிக்கல்கள் வரலாம் விட்டுக்கொடுத்து அனுசரித்துச் செல்லவும். குரு அதிசாரமாக செல்லும் காலங்களில் ஓரளவு நன்மையைத் தருவார்.

வழிபாடு :

தட்சிணாமூர்த்தியை வியாழக்கிழமைதோறும் வெள்ளை மற்றும் மஞ்சள் நிற பூக்களை சமர்ப்பித்து வழிபாடு செய்துவர உத்தியோக உயர்வும், தந்தை வழியில் ஆதரவுகளும் அதிகரிக்கும்.

செவ்வாய்க்கிழமைகளில் திருத்தணிக்குச் சென்று, தணிகை முருகனுக்குத் தீபமேற்றி வணங்கி வழிபட்டு வாருங்கள். தடைகள் அனைத்தும் விலகும்; விருப்பங்கள் நிறைவேறும்.

 

சிம்மம் ராசி குருப்பெயர்ச்சி பலன்கள் 2020-2021

https://bit.ly/3kHTEDG

உங்களது ராசிக்கான மதிப்பெண் 65/100

இந்தக் குருப்பெயர்ச்சி எதிர்பாராத செலவுகள், அலைச்சல்களோடு குறிப்பிடத் தகுந்த வெற்றிகளை அளிப்பதாகவும் அமையும்.

ருண ரோக சத்ரு குரு குரு பகவான் உங்க ராசிக்கு ஆறாம் வீட்டிற்கு வருகிறார். வேலை தொழில் ரீதியான விசயங்களில் முன்னேற்றம் நிகழும். கடன் எதிரி தொந்தரவு கட்டுக்குள் இருக்கும். கடன் தொந்தரவு அதிகமாகும் உடம்பில் உள்ள நோய்கள் வெளிப்படும். மனஸ்தாபங்களும் பிரச்சினைகளும் நிகழும். பெரிய அளவில் தொழில் முதலீடுகள் செய்ய வேண்டாம். பங்குச் சந்தை முதலீடுகள் பலன் தராது. கடன் கொடுத்தால் திரும்பி வருவது கடினம்.

வழிபாடு :

வியாழக்கிழமைதோறும் மலைமேல் அமைந்திருக்கும் சித்தர்களை வெள்ளை மற்றும் நீலநிற பூக்களால் வழிபாடு செய்துவர பூர்வீகம் தொடர்பான பிரச்சனைகளும், உத்தியோகத்தில் இருந்துவந்த தடைகளும் நீங்கி முன்னேற்றம் உண்டாகும்

கருவூரில் அருள்பாலித்துக் கொண்டிருக்கும் ஸ்ரீபசுபதீஸ்வரரையும், ஸ்ரீதட்சிணாமூத்தியையும் பூரட்டாதி நட்சத்திரம் நடைபெறும் நாளில் சென்று வணங்குங்கள். வசதி, வாய்ப்புகள் பெருகும்.

 

கன்னி ராசி குருப்பெயர்ச்சி பலன்கள் 2020-2021

https://bit.ly/2HN6NwI

உங்களது ராசிக்கான மதிப்பெண் 90/100.

இந்தக் குருப்பெயர்ச்சி, தொட்ட காரியங்களைத் துலங்கவைப்பதுடன், திடீர் யோகங்களை அளிப்பதாகவும் அமையும்.

பூர்வ புண்ணிய குரு குரு 5ஆம் வீட்டில் வரப் போகிறார். புது முயற்சிகளுக்கும் ஆதாயம் உண்டு. இந்த குரு பெயர்ச்சியில் நீங்கள் தான் நம்பர் 1 என்றாலும் குரு அதிசாரமாக செல்லும் 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் நீங்கள் மனதில் வைத்திருக்கும் காரியங்களை செயல்படுத்துவதில் பிரச்சினை ஏற்படும். சில பிரச்சினையில் இருந்து மீள்வதற்கான சூழ்நிலைகள் ஏற்படும்.

வழிபாடு :

வியாழக்கிழமைதோறும் ஸ்ரீராகவேந்திரரை வழிபாடு செய்துவர மனை மற்றும் சுபகாரியங்கள் தொடர்பான செயல்பாடுகளில் இருந்துவந்த தடை, தாமதங்கள் நீங்கி சுபிட்சம் உண்டாகும்.

காஞ்சிபுரத்திலிருந்து உத்திரமேரூர் செல்லும் பாதையில் அமைந்துள்ளது திருப்புலிவனம். இவ்வூரில் அருளும் ஸ்ரீசிம்மகுரு தட்சிணாமூர்த்தியை, சித்திரை நட்சத்திர நாளில் சென்று வணங்குங்கள்; வெற்றி உண்டு.

 

துலாம் ராசி குருப்பெயர்ச்சி பலன்கள் 2020-2021

https://bit.ly/3oQ9z5o

உங்களது ராசிக்கான மதிப்பெண் 80/100.

இந்தக் குருப்பெயர்ச்சி அவ்வப்போது ஏமாற்றங்களையும், இடமாற்றங் களையும் தந்தாலும், கடின உழைப்பால் உங்களை முன்னேற வைப்பதாக அமையும்.

சுக ஸ்தான குரு குரு 4ஆம் வீட்டில் அமரப் போகிறார். அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டவும். சுக ஸ்தானத்தில் உள்ள குரு சுகங்களை தடுப்பார் எச்சரிக்கையாக இருக்கவும். தங்கள் சுக விசயங்களை அனுபவிப்பதில் சிக்கல்கள் ஏற்படும். பலருக்கும் வீடு அல்லது வேலை ரீதியான இடங்களில் இட மாற்றம் நிகழும். இந்த குரு பெயர்ச்சி மனைவி அல்லது தாய்க்கு பிரச்சினைகளை கொடுக்கும். புது முயற்சிகளில் கவனம் தேவை. ஏப்ரல் மாதத்திற்குப் பிறகு குரு ஐந்தாம் வீட்டிற்கு அதிசாரத்தில் செல்லும் போது குருவின் பார்வை உங்க ராசிக்கு கிடைக்கும் காலத்தில் பாதிப்புகள் நீங்கி நன்மைகள் நடைபெறும்.

வழிபாடு :

சனிக்கிழமைதோறும் ஆஞ்சநேயரை மஞ்சள் நிற பூக்களால் வழிபாடு செய்துவர முயற்சிகளில் இருந்துவந்த தடைகள் நீங்கி முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும்.

காஞ்சிபுரம் ஸ்ரீஏகாம்பரேஸ்வரரயும் அவர் கோயிலில் அருளும் ஸ்ரீதட்சிணா மூத்தியையும், புனர்பூசம் நட்சத்திர நாளில் சென்று வணங்குங்கள். தடைகள் நீங்கும்; நினைத்த காரியங்கள் நிறைவேறும்.

 

விருச்சிகம் ராசி குருப்பெயர்ச்சி பலன்கள் 2020-2021

https://bit.ly/3kINl2y

உங்களது ராசிக்கான மதிப்பெண் 70/100.

இந்தக் குருப்பெயர்ச்சி சிறு சிறு தடைகளையும், தடுமாற்றங்களையும் தந்தாலும், அவ்வப்போது வெற்றியையும் மகிழ்ச்சியையும் தருவதாக அமையும்.

முயற்சி ஸ்தான குரு குரு பகவான் 3ஆம் இடத்தில் சஞ்சரிக்க உள்ளதால் கடந்த ஆண்டுகளில் சந்தித்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். உங்களுடைய கடின முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். புதிய வேலை சார்ந்த விசயங்களில் வெற்றி கிடைக்கும். சிறு தூர பயணங்களை மேற்கொள்வீர்கள். கடன் பிரச்சினைகள் கட்டுக்குள் இருக்கும். இளைய சகோதர வகையில் மனஸ்தாபங்கள் நிகழும் கவனம் தேவை.

வழிபாடு :

செவ்வாய்க்கிழமைதோறும் வராஹி அம்மனை நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்துவர முயற்சிகள் மற்றும் பொருளாதாரத்தில் இருந்துவந்த தடைகள் நீங்கி முன்னேற்றம் உண்டாகும்.

சஷ்டி திருநாளில் திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணிய சுவாமியையும், ஸ்ரீவள்ளி – ஸ்ரீதெய்வானை அம்மையரையும் சென்று வணங்கி வழிபடுங்கள். கிரக தோஷங்கள் யாவும் விலகும்; சந்தோஷம் நிலைக்கும்

 

தனுசு ராசி குருப்பெயர்ச்சி பலன்கள் 2020-2021

https://bit.ly/3kJQSxD

உங்களது ராசிக்கான மதிப்பெண் 95/100.

இந்தக் குருப்பெயர்ச்சி நீங்கள் தொட்டதையெல்லாம் துலங்க வைக்கும்; அடிப்படை வசதிகளை அதிகப்படுத்தித் தருவதாக அமையும்.

குடும்ப குரு குரு 2ஆம் வீட்டில் வரப் போகிறார். வம்பு, வழக்கு நீதிமன்ற பிரச்சினைகள் சாதகமாக வரும். கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும். வாக்கில் கவனம் தேவை. திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் கைகூடும். மனதில் நினைத்த காரியங்கள் வெற்றிகரமாக முடியும். தொழிலில் லாபம் கிடைக்கும் பணம் விசயத்தில் எச்சரிக்கை தேவை. யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போட்டு மாட்டிக்கொள்ள வேண்டாம்.

வழிபாடு :

வியாழக்கிழமைதோறும் நவகிரகங்களில் இருக்கக்கூடிய குருபகவானை மஞ்சள் நிற பூக்களால் வழிபாடு செய்துவர எண்ணத்தெளிவும், ஆரோக்கியத்தில் மேன்மையும் உண்டாகும்.

திருப்பரங்குன்றத்தில் அருள்பாலிக்கும் ஸ்ரீசுப்பிரமணிய சுவாமியையும், ஸ்ரீதெய்வானையையும், கிருத்திகை நட்சத்திர நாளில் சென்று வணங்குங்கள். துன்பங்கள் நீங்கும்; நிம்மதி பெருகும்.

 

மகரம் ராசி குருப்பெயர்ச்சி பலன்கள் 2020-2021

https://bit.ly/34EuOik

உங்களது ராசிக்கான மதிப்பெண் 75/100.

  • இந்தக் குருப்பெயர்ச்சி வேலைச் சுமையையும் எதிர்மறை எண்ணங்களையும் தருவதாக இருந்தாலும், எதிர்காலத்துக்கான பலமான அஸ்திரவாரத்தை இடவைப்பதாக அமையும்.

 

  • ஜென்ம குரு மகரம் ராசிக்காரர்களுக்கு ஜென்ம சனி கால கட்டம். குரு ஜென்ம ராசிக்கு வருகிறார். ஜென்ம குரு வனத்தினிலே என்பது போல 30 வயதுக்கு உட்பவர்களுக்கு சோதனை மிகுந்த காலம். மனச்சஞ்சலங்களும் டென்ஷனும் அதிகமாக இருக்கும். எதிலும் நிதானித்து பயனிப்பது நல்லது. குரு பெயர்ச்சியின் முக்கால் பகுதி வரை கடன் வேலை சார்ந்த விசயங்களில் பிரச்சினை இருக்கும். கணவன் மனைவி இடையே கருத்து மோதல்கள் வரும். ஒருவரையொருவர் அனுசரித்து செல்வது நல்லது. சொந்த முதலீடுகள் வேண்டாம். குரு பெயர்ச்சியின் இறுதியில் தொழில் வேலை ரீதியான முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும்.

வழிபாடு :

  • வியாழக்கிழமைதோறும் சிவன் கோவிலுக்கு சென்று மஞ்சள் நிற பூக்களை சூட்டி, எள் எண்ணெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்து வர மனதில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கி தெளிவும், மகிழ்ச்சியும் கிடைக்கப் பெறுவீர்கள்.

 

  • திருவிடைமருதூருக்கு அருகிலுள்ள திருக்கஞ்சனூரில் அருளும் ஸ்ரீஅக்னீஸ் வரரையும் ஸ்ரீதட்சிணாமூர்த்தியையும் பூசம் நட்சத்திரம் நடைபெறும் நாளில் சென்று வணங்குங்கள்; நல்லது நடக்கும்..

கும்பம் ராசி குருப்பெயர்ச்சி பலன்கள் 2020-2021

https://bit.ly/3oEqyHJ

உங்களது ராசிக்கான மதிப்பெண் 68/100.

இந்தக் குருப்பெயர்ச்சி, சுபச் செலவுகளைத் தருவதாகவும் நட்பு வட்டத்தை விரிவடையச் செய்வதாகவும் அமையும்.

விரைய ஸ்தான குரு கும்பம் ராசிக்காரர்களுக்கு இந்த குரு பெயர்ச்சியால் சில சோதனைகள் நடந்தாலும் நன்மைகளும் அதிகம் நடைபெறும். வேலை தொழில் ரீதியாக முன்னேற்றங்களும் நன்மைகளும் ஏற்படும். புதிய வேலைகளுக்கு முயற்சி செய்பவர்களுக்கு சாதகமான சூழ்நிலைகள் ஏற்படும். குரு பெயர்ச்சியின் ஆரம்ப காலங்களில் விரையச் செலவு இருக்கும் சுப விரைய செலவுகளாக மாற்றுங்கள்.

வழிபாடு :

சனிக்கிழமைதோறும் ஜீவசமாதி அடைந்த குருமார்களை வழிபாடு செய்துவர எண்ணத்தெளிவும், புத்துணர்ச்சியும் கிடைக்கப் பெறுவீர்கள்.

சென்னை – திருவல்லிக்கேணியில் அருளும் ஸ்ரீபார்த்தசாரதிப் பெருமாளை, ஏகாதசி திதி நடைபெறும் நாளில் சென்று வணங்கி வழிபடுங்கள்; எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.

 

மீனம் ராசி குருப்பெயர்ச்சி பலன்கள் 2020-2021

https://bit.ly/3kNyZhG

உங்களது ராசிக்கான மதிப்பெண் 95/100.

இந்தக் குருப்பெயர்ச்சி, உங்களைப் பிரபலமாக்குவதுடன், பண வசதி மற்றும் சொத்து சேர்க்கையைத் தருவதாக அமையும்.

லாப குரு குரு லாப ஸ்தானமான 11ஆம் வீட்டிற்கு வரப்போகிறார். வேலை தொழிலில் இருந்த நல்ல இட மாற்றங்கள் நிகழும். சம்பள உயர்வு ஏற்படும்.தொழில் ரீதியான லாபம் பெருகும். வெளிநாட்டு முயற்சிகள் கைகூடும். வெளிநாட்டில் வசிப்பவருக்கு முன்னேற்றம் ஏற்படும். சொந்த ஊரில் வசிப்பவர்களுக்கு முன்னேற்றம் இருந்தாலும் விரையச் செலவுகள் ஏற்படும். குரு பெயர்ச்சியின் முற்பகுதியிலும் இறுதியிலும் திருமணம் நிகழ்வதற்கான வாய்ப்புகள் அதிகம்

வழிபாடு:

வியாழக்கிழமை தோறும் நவகிரகங்களில் இருக்கக்கூடிய பிரகஸ்பதியான தேவகுருவிற்கு மஞ்சள் நிற மலர்களை சூட்டி வழிபாடு செய்துவர செயல்பாடுகளில் இருந்துவந்த காலதாமதம் நீங்கி முன்னேற்றம் உண்டாகும்.

பழநியில் கோயில்கொண்டிருக்கும் அருள்மிகு தண்டாயுதபாணியின் ராஜ அலங்காரத் திருக்கோலத்தை ஒருமுறை தரிசித்து வாருங்கள். முருகனின் அருளால் வாழ்வில் முன்னேற்றம் உண்டாகும்.

குருப்பெயர்ச்சி பலன்கள் 2021-22

மேஷம் | ரிஷபம் | மிதுனம் | கடகம் | சிம்மம் | கன்னி | துலாம் | விருச்சிகம் | தனுசு | மகரம் | கும்பம் | மீனம்

108 குரு பகவான் போற்றி 

ஶ்ரீ குரு ஸ்தோத்ரம் பாடல் வரிகள்

குரு பகவானுக்குரிய திருத்தலங்கள்

1 Comment

Leave a Comment