Kumba rasi guru peyarchi palangal 2018-19
குருப்பெயர்ச்சி பலன்கள் 2020-21
மேஷம் குருப்பெயர்ச்சி பலன்கள் 2020 | ரிஷபம் குருப்பெயர்ச்சி பலன்கள் 2020 | மிதுனம் குருப்பெயர்ச்சி பலன்கள் 2020 | கடகம் குருப்பெயர்ச்சி பலன்கள் 2020 | சிம்மம் குருப்பெயர்ச்சி பலன்கள் 2020 | கன்னி குருப்பெயர்ச்சி பலன்கள் 2020 | துலாம் குருப்பெயர்ச்சி பலன்கள் 2020 | விருச்சிகம் குருப்பெயர்ச்சி பலன்கள் 2020 | தனுசு குருப்பெயர்ச்சி பலன்கள் 2020 | மகரம் குருப்பெயர்ச்சி பலன்கள் 2020 | கும்பம் குருப்பெயர்ச்சி பலன்கள் 2020 | மீனம் குருப்பெயர்ச்சி பலன்கள் 2020
ஶ்ரீ குரு ஸ்தோத்ரம் பாடல் வரிகள்
குரு பகவானுக்குரிய திருத்தலங்கள்
கும்ப இராசி அன்பர்களே…
இந்த குருப்பெயர்ச்சி செலவுகளையும் அலைச்சல்களையும் தந்தாலும் ஓரளவு வெற்றியும் தரும்.
60 – 70%
பரிகாரம்
உங்கள் ராசிக்கு குருபகவான் 10 ஆம் இடத்தில் இருப்பதால் வியாழக்கிழமைகள் தோரும் குருபகவானுக்கு விரதமிருந்து அவரை வழிபடுவது நல்லது. மேலும் ராகு காலங்களில் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சம் பழ தீபமேற்றி வழிபடுவது நன்மையை தரும். ஆடைகள், தேன், நெய் போன்றவற்றை ஏழை பிராமணர்களுக்கு தானம் செய்வது சிறந்த பரிகாரமாகும். சரபேஸ்வரர் வழிபாட்டை மேற்கொள்வது நன்மை பயக்கும்.
திருப்போரூர் முருகன் கோயிலில் சந்நிதி கொண்டிருக்கும் ஶ்ரீசிதம்பர சுவாமிகளை ஒரு வியாழக்கிழமையன்று தரிசித்து வழிபட சிரமங்கள் குறையும்.
திருவண்ணாமலையிலுள்ள சேஷாத்ரி சுவாமிகளின் ஜீவசமாதிக்கு சென்று தரிசியுங்கள்.
தன்கடன் பணிசெய்து கிடப்பதே என்று காலநேரம் பாராமல் கடினமாக உழைக்கும் நீங்கள், அழுதாலும் உதட்டால் புன்னகைக்கும் குணமுடையவர்கள். அமைதியை விரும்பும் நீங்கள், போட்டியென வந்து விட்டால் விஸ்வரூபம் எடுத்து மற்றவர்களை மிரள வைப்பீர்கள். இதுவரை உங்கள் ராசிக்கு 9ம் வீட்டில் அமர்ந்து கொண்டு தொட்ட காரியங்களையெல்லாம் துலங்க வைத்ததுடன், வி.ஐ.பிகள் மத்தியில் ஒரு அந்தஸ்தையும் பெற்றுத் தந்த குருபகவான் 04.10.2018 முதல் 28.10.2019 வரை உங்கள் ராசிக்கு 10ம் வீட்டில் நுழைந்து பலன் தரப்போகிறார். பத்தாம் இடமென்றால் பதவியை பறித்துவிடுவாரே! கையில் காசுபணம் தங்காதே! என்றெல்லாம் பதட்டப்படாதீர்கள். ஓரளவு நன்மையே உண்டாகும். சிலருக்கு வெளிநாட்டில், அண்டை மாநிலத்தில் வேலை அமையும். என்றாலும் அநாவசியமாக யாருக்காகவும் எந்த உறுதிமொழியும் தர வேண்டாம். ஒரே நாளில் முக்கியமான நான்கைந்து வேலைகளை பார்க்க வேண்டி வரும். இதை முதலில் முடிப்பதா, அதை முதலில் முடிப்பதா என்ற ஒரு டென்ஷன் இருக்கும்.
குருபகவானின் பார்வை பலன்கள்
குரு உங்கள் ராசிக்கு 2ம் வீட்டை பார்ப்பதால் எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். குடும்பத்தில் நல்லது நடக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். சொத்து சேரும். குரு ஏழாம் பார்வையால் 4ம் வீட்டைப் பார்ப்பதால் தாயாருடன் இருந்த மனவருத்தம் நீங்கும். கை, கால், முதுகு வலியிலிருந்து தாயார் விடுபடுவார். வீடு கட்ட வங்கிக் கடன் கிடைக்கும். புது வீட்டில் குடி புகுவீர்கள். கணவன், மனைவிக்குள் மனம் விட்டுப் பேசுவீர்கள். இருவரும் கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பீர்கள். நவீன ரக வாகனம், செல்போன் வாங்குவீர்கள். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். மனைவிவழியில் செல்வாக்கு உயரும். குரு 6ம் வீட்டைப் பார்ப்பதால் மாதக் கணக்கில் தள்ளிப் போன காரியங்களெல்லாம் முடிவடையும். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். அதிக வட்டிக் கடனில் ஒருபகுதியை பைசல் செய்ய வழி பிறக்கும்.
குருபகவானின் நட்சத்திர சஞ்சாரம்
04.10.2018 முதல் 20.10.2018 வரை உங்களின் தனாதிபதியும், லாபாதிபதியுமான குருபகவான் தன் சாரமான விசாகம் நட்சத்திரத்தில் செல்வதால் கடனாகக் கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். வீட்டை விரிவுபடுத்துவது, அழகுபடுத்துவது போன்ற முயற்சிகள் பலிதமாகும். குடும்பத்தில் நல்லது நடக்கும். மழலை பாக்கியம் கிடைக்கும். புது பொறுப்புகள், பதவிகள் தேடி வரும். என்றாலும் செலவுகளும், வேலைச்சுமையும் இருந்து கொண்டேயிருக்கும். மூத்த சகோதர வகையில் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டாகும். 21.10.2018 முதல் 19.12.2018 வரை உங்களின் ராசிநாதனும், விரயாதிபதியுமான சனி பகவானின் அனுஷம் நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் திடீர் செல்வாக்கு, யோகம், பணவரவு உண்டாகும்.
வி.ஐ.பிகள் வீட்டு விசேஷங்களில் கலந்து கொள்வீர்கள். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். வேற்றுமதத்தவர்கள், மொழியினர்கள், மாநிலத்தவர்களால் ஆதாயமடைவீர்கள். புதிய நண்பர்களால் உற்சாகமடைவீர்கள். பயணங்களால் புது அனுபவம் உண்டாகும். செலவுகளை க் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். 20.12.2018 முதல் 12.03.2019 வரை மற்றும் 09.08.2019 முதல் 27.10.2019 வரை உங்களின் பூர்வ புண்யாதிபதியும், அஷ்டமாதிபதியுமான புதனின் கேட்டை நட்சத்திரத்தில் குரு செல்வதால் பழைய கடனைத் தீர்க்க புது வழி பிறக்கும். பிள்ளைகளால் சொந்த, பந்தங்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். பூர்வீக சொத்தை சீர் செய்வீர்கள். மகளின் பிடிவாத குணம் மாறும். மகனின் உயர்கல்வி, உத்யோகம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் சாதகமாகும்.
குருபகவானின் அதிசார வக்ர சஞ்சாரம்
13.03.2019 முதல் 18.05.2019 வரை குருபகவான் அதிசாரத்தில் ராசிக்கு 11ம் வீட்டில் கேதுவின் நட்சத்திரமான மூலம் நட்சத்திரத்தில் செல்வதால் செல்வம், செல்வாக்கு கூடும். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். புது பதவி, பொறுப்புகள் தேடி வரும்.
குருபகவானின் வக்ர சஞ்சாரம்
10.04.2019 முதல் 18.5.2019 வரை மூலம் நட்சத்திரத்தில் வக்ர கதியிலும் மற்றும் 19.05.2019 முதல் 08.08.2019 வரை கேட்டை நட்சத்திரத்திலும் வக்ர கதியில் செல்வதால் திடீர் பயணங்களும், செலவுகளும் துரத்தும். தர்ம சங்கடமான சூழ்நிலைக்கு ஆளாவீர்கள். பால்ய நண்பர்களுடன் மோதல்கள் வரும். வெளிவட்டாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். பழைய பிரச்னைகள் மீண்டும் வந்துவிடுமோ என்ற பயம் வந்து போகும். படபடப்பு, நெஞ்சு எரிச்சல், இன்ஃபெக்ஷன் வரக்கூடும். கர்ப்பிணிப் பெண்கள் உணவு விஷயத்தில் கட்டுப்பாட்டு டன் இருப்பது அவசியம். மருத்துவரின் ஆலோசனையின்றி எந்த மருந்தையும் உட்கொள்ள வேண்டாம். இடையிடையே பணவரவு உண்டு. வீடு, மனை வாங்குவது, விற்பது நல்ல விதத்தில் முடியும்.
வியாபாரிகளுக்கு:
வியாபாரத்தில் அதிரடி மாற்றங்கள் செய்து லாபம் ஈட்டுவீர்கள். வேலையாள்கள் முரண்டு பிடிப்பார்கள். தொழில் போட்டி அதிகமாகும். வாடிக்கையாளர்களிடம் கனிவாக நடந்துகொள்ளுங்கள். பழைய நிறுவனங்களைக் காட்டிலும் புதிய நிறுவனங்களின் பொருட்களை விற்பதன் மூலமாக அதிக ஆதாயமடைவீர்கள். கடையை விரிவுபடுத்த லோன் கிடைக்கும். சிமெண்ட், கணிணி உதிரி பாகங்கள், ரியல் எஸ்டேட், எண்டர்பிரைசஸ் வகைகளால் லாபமடைவீர்கள்.
உத்தியோகஸ்தர்களுக்கு:
உத்தியோகத்தில் உண்மையாக இருப்பது மட்டும் போதாது உயரதிகாரிகளுக்கு தகுந்தாற்போல் பேசும் வித்தையையும் கற்றுக் கொள்ள வேண்டுமென்ற முடிவுக்கு வருவீர்கள். சக ஊழியர்களின் விடுப்பால் வேலைச்சுமை அதிகமாகும். மற்றவர்கள் செய்த தவறுகளுக்கெல்லாம் நாம் பலிகடா ஆகி விட்டோமே என்றெல்லாம் வருத்தப்படுவீர்கள். புது உத்தியோக வாய்ப்புகள் வந்தாலும் பொறுத்திருந்து செயல்படுவது நல்லது.
மாணவர்களுக்கு:
படிப்பில் கூடுதல் கவனம் தேவை. நினைவாற்றலை அதிகப்படுத்திக்கொள்ள முயற்சி செய்யுங்கள். விளையாட்டுத்தனமாக இல்லாமல், பாடங்களில் கூடுதல் அக்கறை காட்டுங்கள். சந்தேகங்களை அவ்வப்போது ஆசிரியர்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்வது நல்லது.
கலைத்துறையினருக்கு:
மறைமுகப் போட்டிகளும் விமர்சனங்களும் அதிகரிக்கும். வரவேண்டிய சம்பளப் பாக்கியைப் போராடித்தான் வாங்க நேரிடும். மூத்த கலைஞர்களிடம் சில நுணுக்கங்களைக் கற்றுத் தெளிவீர்கள்.
குருப்பெயர்ச்சி பலன்கள் 2020-21
மேஷம் | ரிஷபம் | மிதுனம் | கடகம் | சிம்மம் | கன்னி | துலாம் | விருச்சிகம் | தனுசு | மகரம் | கும்பம் | மீனம்
ஶ்ரீ குரு ஸ்தோத்ரம் பாடல் வரிகள்
குரு பகவானுக்குரிய திருத்தலங்கள்
குருப்பெயர்ச்சி பலன்கள் 2019-20
#குருப்பெயர்ச்சி பலன்கள் 2019-20
5/11/2019 அன்று நடைபெறும் குருப்பெயர்ச்சி பலன்கள் 2019-2020
http://bit.ly/gurupeyarchi19-20
மேஷம் – http://bit.ly/mesham
ரிஷபம் – http://bit.ly/rishabam
மிதுனம் – http://bit.ly/mithunam
கடகம் – http://bit.ly/kadagam
சிம்மம் – http://bit.ly/simmam
கன்னி – http://bit.ly/kannirasi
துலாம் – http://bit.ly/thulam
விருச்சிகம் – http://bit.ly/viruchigam
தனுசு – http://bit.ly/thanusu
மகரம் – http://bit.ly/magaram
கும்பம் – http://bit.ly/kumbam
மீனம் – http://bit.ly/meenamrasi
2018-19
மேஷம் – https://bit.ly/2RnZj3m
ரிஷபம் – https://bit.ly/2ycoVYe
மிதுனம் – https://bit.ly/2xWDPT1
கடகம் – https://bit.ly/2P41TKd
சிம்மம் – https://bit.ly/2O7a7oz
கன்னி – https://bit.ly/2QxXaRJ
துலாம் – https://bit.ly/2Nke1Fp
விருச்சிகம் – https://bit.ly/2zPM8l1
தனுசு – https://bit.ly/2zQ3gHf
மகரம் – https://bit.ly/2zQ54Ad
கும்பம் – https://bit.ly/2y0mngu
மீனம்- https://bit.ly/2NkdFyz