Simma rasi guru peyarchi palangal 2018-19
குருப்பெயர்ச்சி பலன்கள் 2020-21
மேஷம் குருப்பெயர்ச்சி பலன்கள் 2020 | ரிஷபம் குருப்பெயர்ச்சி பலன்கள் 2020 | மிதுனம் குருப்பெயர்ச்சி பலன்கள் 2020 | கடகம் குருப்பெயர்ச்சி பலன்கள் 2020 | சிம்மம் குருப்பெயர்ச்சி பலன்கள் 2020 | கன்னி குருப்பெயர்ச்சி பலன்கள் 2020 | துலாம் குருப்பெயர்ச்சி பலன்கள் 2020 | விருச்சிகம் குருப்பெயர்ச்சி பலன்கள் 2020 | தனுசு குருப்பெயர்ச்சி பலன்கள் 2020 | மகரம் குருப்பெயர்ச்சி பலன்கள் 2020 | கும்பம் குருப்பெயர்ச்சி பலன்கள் 2020 | மீனம் குருப்பெயர்ச்சி பலன்கள் 2020
ஶ்ரீ குரு ஸ்தோத்ரம் பாடல் வரிகள்
குரு பகவானுக்குரிய திருத்தலங்கள்
சிம்ம இராசி அன்பர்களே…
இந்த குருமாற்றம் அவ்வப்போது ஏமாற்றங்களையும், இடமாற்றங்களையும் தந்தாலும் கடின உழைப்பால் முன்னேற வைப்பதாக அமையும்..
70-80%
பரிகாரம்
வியாழக்கிழமைகள் தோறும் குரு பகவானையும், தட்சிணாமூர்த்தியையும் கொண்டைக்கடலை மாலை சாற்றி, மஞ்சள் நிற பூக்கள் சமர்ப்பித்து, நெய் தீபங்கள் ஏற்றி வழிபடுவது குரு பகவானின் அருளை பெற்று தரும். ஏழை மாணவர்களுக்கு புத்தகங்கள், ஆடைகள், போன்றவற்றை தானமளிப்பது குரு பகவானின் முழுமையான அருளை பெற்று தரும் சிறந்த பரிகாரமாகும். தினமும் விநாய பெருமானையும் வழிபட்டு வர தடை தாமதங்கள் விலகும்.
கிருஷ்ணகிரி மாவட்டம், கல்லுக்குறிக்கை எனும் ஊரில் அருள்பாலித்துக் கொண்டிருக்கும் ஸ்ரீகாலபைரவரை அஷ்டமி திதி நடைபெறும் நாளில் சென்று வணங்க நன்மைகள் அதிகரிக்கும்.
போற்றுதலுக்கும், தூற்றுதலுக்கும் அஞ்சாத நீங்கள், யாருக்காகவும் தன் கொள்கைகளை மாற்றிக் கொள்ளாதவர்கள். முன் வைத்த காலைப் பின் வைக்காமல் முன்னேறும் குணமுடைய நீங்கள் திடீரென்று முடிவெடுத்து எதிரிகளை திக்குமுக்காடச் செய்துவிடுவீர்கள். இதுவரை உங்கள் ராசிக்கு 3ம் வீட்டில் அமர்ந்து கொண்டு உங்களின் புதிய முயற்சிகளை முடக்கி வைத்தாரே! எந்த ஒரு வேலைகளையும் முதல் கட்டத்திலேயே முடிக்க முடியாமல் அலைக்கழித்தாரே! எதை செய்தாலும் அதில் ஒரு தயக்கத்தையும், தடுமாற்றத்தையும் ஏற்படுத்தினாரே! தந்தையாருக்கு மருத்துவச் செலவுகளையும், அவருடன் கருத்து மோதல்களையும் ஏற்படுத்திய குருபகவான் 04.10.2018 முதல் 28.10.2019 ராசிக்கு 4ம் வீட்டில் அமர்வதால் சந்தர்ப்ப, சூழ்நிலையறிந்து செயல்படும் சாமர்த்தியத்தை கற்றுக் கொள்வீர்கள். உங்களின் பலம் எது, பலவீனம் எது என்பதை தெரிந்து கொள்வது நல்லது.
கணவன்-மனைவிக்குள் சிலர் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சி செய்வார்கள். உன் சொந்தம், என் சொந்தம் என்று மோதிக் கொள்ளாமல் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. உணர்ச்சி வசப்படாமல் அறிவுபூர்வமாக முடிவெடுக்கப் பாருங்கள். வீடு கட்ட அரசாங்க அனுமதி தாமதமாக கிடைக்கும். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகளும் அதிகமாகும். தாயாருக்கு சின்னச் ச்சின்ன அறுவை சிகிச்சை, மூட்டு வலி, முதுகு தண்டில் வலி வந்து போகும். வீடு, மனை வாங்கும் போது தாய் பத்திரம், வில்லங்க சான்றிதழ்களையெல்லாம் சரி பார்த்து வாங்குவது நல்லது. கூடாப்பழக்க வழக்கங்கள் இலவசமாக தொற்ற வாய்ப்பிருக்கிறது. நல்லவர்களின் நட்பை வளர்த்துக் கொள்ளுங்கள். தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். போக்குவரத்து விதிகளை மீறி வாகனத்தை இயக்க வேண்டாம். சின்னச் சின்ன அபராதம் செலுத்த வேண்டி வரும். பூர்வீக சொத்துப் பிரச்னையில் நேரத்தை வீணடிக்காதீர்கள்.
குருபகவானின் பார்வை பலன்கள்
குரு உங்கள் ராசிக்கு 8ம் வீட்டை பார்ப்பதால் அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். பயணங்களால் பயனுண்டு. மறைந்து கிடந்த திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்புகள் வரும். குரு உங்கள் உத்யோகஸ்தானத்தை பார்ப்பதால் சிலருக்கு புது வேலை கிடைக்கும். சம்பள பாக்கி கைக்கு வரும். குரு 12ம் வீட்டை பார்ப்பதால் புகழ் பெற்ற புண்ணிய தலங்கள் சென்று வருவீர்கள். வீட்டில் கூடுதல் அறை கட்டுவீர்கள்.
குருபகவானின் நட்சத்திர சஞ்சாரம்
04.10.2018 முதல் 20.10.2018 வரை உங்களின் பூர்வ புண்யாதிபதியும்அஷ்டமாதிபதியுமான குருபகவான் தன் சாரமான விசாகம் நட்சத்திரத்தில் செல்வதால் குலதெய்வக் கோயிலை புதுப்பிக்க உதவுவீர்கள். குழந்தை பாக்யம் கிடைக்கும். மகளின் திருமணத்தை சிறப்பாக நடத்துவீர்கள். மகனுக்கு அயல்நாடு சென்று படிக்கும் வாய்ப்பு வரும். பூர்வீக சொத்து கைக்கு வரும். வாகனத்தை மாற்றுவீர்கள். 21.10.2018 முதல் 19.12.2018 வரை உங்களின் சஷ்டமசப்தமாதிபதியான சனி பகவானின் அனுஷம் நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் பிறர் மீது நம்பிக்கையின்மை, அசதி, சோர்வு, சுபச் செலவுகள் வந்து போகும். திடீரென்று அறிமுகமாகுபவரை நம்பி வீட்டிற்குள் அழைத்து வர வேண்டாம். மறதியால் விலை உயர்ந்த பொருட்களை இழக்க நேரிடும்.
வேலைச்சுமையால் மனைவி கோபப்படுவார். பழைய கசப்பான சம்பவங்களை மனைவியிடம் விவாதிக்காதீர்கள். அவரின் ஆரோக்யத்தில் கூடுதல் கவனம் செலுத்தப் பாருங்கள். 20.12.2018 முதல் 12.03.2019 மற்றும் 09.08.2019 முதல் 27.10.2019 வரை தனாதிபதியும் லாபாதிபதியான புதனின் கேட்டை நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் மனஅழுத்தம், டென்ஷன் அதிகரிக்கும். சில சமயங்களில் தனிமைப்படுத்தப் பட்டதைப் போல் உணர்வீர்கள். பணப்பற்றாக்குறையால் வெளியில் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். உங்கள் மீது சிலர் வீண் பழி சுமத்த முயற்சி செய்வார்கள். சொத்து சம்பந்தப்பட்ட வழக்கில் வழக்கறிஞரை மாற்ற வேண்டிய சூழ்நிலை உருவாகும். வாகனத்தை இயக்கும் போது அலைபேசியை தவிர்ப்பது நல்லது.
குருபகவானின் அதிசார வக்ர சஞ்சாரம்
13.3.2019 முதல் 18.5.2019 வரை குருபகவான் அதிசாரத்தில் ராசிக்கு 5ம் வீட்டில் கேதுவின் நட்சத்திரமான மூலம் நட்சத்திரத்தில் செல்வதால் பணவரவு உண்டு. செல்வாக்கு அதிகரிக்கும். மகளுக்கு திருமணம் கூடி வரும். சொத்து சம்பந்தப்பட்ட வழக்குகள் சாதகமாகும். மகனுக்கு இருந்த கூடாபழக்க வழக்கங்கள் நீங்கும்.
குருபகவானின் வக்ர சஞ்சாரம்
10.04.2019 முதல் 18.5.2019 வரை மூலம் நட்சத்திரத்தில் வக்ர கதியிலும் மற்றும் 19.05.2019 முதல் 08.08.2019 வரை கேட்டை நட்சத்திரத்திலும் வக்ர கதியில் செல்வதால் இக்காலக்கட்டத்தில் திடீர் திருப்பம் உண்டாகும். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்யோகம், திருமணம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் பலிதமாகும். உறவினர், நண்பர்கள் வீட்டு விசேஷங்களில் கலந்து கொள்வீர்கள். சிலர் வீடு மாற வேண்டுமென்று நினைப்பீர்கள். சுற்றியிருப்பவர்களின் சுயரூபம் தெரிய வரும். புது பதவி, பொறுப்புகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். சிலர் வீட்டில் கூடுதலாக அறை அல்லது தளம் அமைப்பீர்கள்.
வியாபாரிகளுக்கு:
வியாபாரத்தில் ஏற்ற இறக்கங்கள் இருந்தபடி இருக்கும். சந்தை நிலவரம் அறிந்து முதலீடு செய்வது அவசியம். தொழில் ரகசியங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளவேண்டாம். விளம்பர யுக்திகளைக் கையாள்வதன் மூலம் வியாபாரத்தில் விற்பனையை அதிகரிக்கலாம். கடையை வேறு இடத்துக்கு மாற்றவேண்டிய சூழ்நிலை ஏற்படும். வாடிக்கையாளர்களின் அதிருப்தியை எதிர்கொள்ள நேரிடும். பங்குதாரர்களுடன் மோதல் போக்கு விலகும். நம்பிக்கைக்கு உரிய பங்குதாரர் விலக நேரிடும்.
உத்தியோகஸ்தர்களுக்கு:
அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரித்தபடி இருக்கும். உயரதிகாரிகள் பாரபட்சமாக நடந்து கொள்வார்கள். கஷ்டப்பட்டு உழைத்தாலும் அங்கீகாரமோ பாராட்டோ கிடைக்கும் என்று சொல்வதற்கில்லை. அடிக்கடி இடமாற்றம் ஏற்படும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். எதிர்பார்த்த பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைப்பதில் தாமதம் ஏற்படும்.
மாணவர்களுக்கு:
பாடங்களில் ஆரம்பத்திலிருந்தே கூடுதல் கவனம் செலுத்துவது அவசியம். எதிர்பார்த்த பாடப்பிரிவில், விரும்பிய கல்வி நிறுவனத்தில் இடம் கிடைக்க அதிகப்படியாக செலவு செய்யவேண்டி வரும்.
கலைத்துறையினருக்கு:
உங்கள் கற்பனைத் திறன் வளரும். ஆனால், உங்களின் படைப்புகளுக்கு வேறு சிலர் உரிமை கொண்டாடுவார்கள். மூத்த கலைஞர்களின் ஆதரவால் முன்னேறுவீர்கள்.
குருப்பெயர்ச்சி பலன்கள் 2020-21
மேஷம் | ரிஷபம் | மிதுனம் | கடகம் | சிம்மம் | கன்னி | துலாம் | விருச்சிகம் | தனுசு | மகரம் | கும்பம் | மீனம்
ஶ்ரீ குரு ஸ்தோத்ரம் பாடல் வரிகள்
குரு பகவானுக்குரிய திருத்தலங்கள்
குருப்பெயர்ச்சி பலன்கள் 2019-20
#குருப்பெயர்ச்சி பலன்கள் 2019-20
5/11/2019 அன்று நடைபெறும் குருப்பெயர்ச்சி பலன்கள் 2019-2020
http://bit.ly/gurupeyarchi19-20
மேஷம் – http://bit.ly/mesham
ரிஷபம் – http://bit.ly/rishabam
மிதுனம் – http://bit.ly/mithunam
கடகம் – http://bit.ly/kadagam
சிம்மம் – http://bit.ly/simmam
கன்னி – http://bit.ly/kannirasi
துலாம் – http://bit.ly/thulam
விருச்சிகம் – http://bit.ly/viruchigam
தனுசு – http://bit.ly/thanusu
மகரம் – http://bit.ly/magaram
கும்பம் – http://bit.ly/kumbam
மீனம் – http://bit.ly/meenamrasi
2018-19
மேஷம் – https://bit.ly/2RnZj3m
ரிஷபம் – https://bit.ly/2ycoVYe
மிதுனம் – https://bit.ly/2xWDPT1
கடகம் – https://bit.ly/2P41TKd
சிம்மம் – https://bit.ly/2O7a7oz
கன்னி – https://bit.ly/2QxXaRJ
துலாம் – https://bit.ly/2Nke1Fp
விருச்சிகம் – https://bit.ly/2zPM8l1
தனுசு – https://bit.ly/2zQ3gHf
மகரம் – https://bit.ly/2zQ54Ad
கும்பம் – https://bit.ly/2y0mngu
மீனம்- https://bit.ly/2NkdFyz