கடகம் ராசி குருப்பெயர்ச்சி பலன்கள்.. Kadaga rasi guru peyarchi palangal 2019-20

குருப்பெயர்ச்சி பலன்கள் 2020-21

மேஷம் குருப்பெயர்ச்சி பலன்கள் 2020 | ரிஷபம் குருப்பெயர்ச்சி பலன்கள் 2020 | மிதுனம் குருப்பெயர்ச்சி பலன்கள் 2020 | கடகம் குருப்பெயர்ச்சி பலன்கள் 2020 | சிம்மம் குருப்பெயர்ச்சி பலன்கள் 2020 | கன்னி குருப்பெயர்ச்சி பலன்கள் 2020 | துலாம் குருப்பெயர்ச்சி பலன்கள் 2020 | விருச்சிகம் குருப்பெயர்ச்சி பலன்கள் 2020 | தனுசு குருப்பெயர்ச்சி பலன்கள் 2020 | மகரம் குருப்பெயர்ச்சி பலன்கள் 2020 | கும்பம் குருப்பெயர்ச்சி பலன்கள் 2020 | மீனம் குருப்பெயர்ச்சி பலன்கள் 2020

108 குரு பகவான் போற்றி 

ஶ்ரீ குரு ஸ்தோத்ரம் பாடல் வரிகள்

குரு பகவானுக்குரிய திருத்தலங்கள்

கடக ராசி பலன்கள் – 62/100

கடக ராசிக்கு குரு பகவான் ஆறாம் அதிபதியும் ஒன்பதாம் அதிபதியும் வருவார்.

தற்போது குரு பெயர்ச்சி ஆகியுள்ள இடம் ருண, ரோக, சத்ரு ஸ்தானம் எனப்படும் ஆறாம் இடம் ஆகும்.

ஆறாம் இடத்தில் குரு வரும்போது சுபக் கடன்களை ஏற்படுத்தும். நீண்ட நாட்களாக வங்கியில் கேட்டுக்கொண்டிருந்த லோன் கடன் தொகை தற்போது கையில் கிடைக்கும்.

தொழில் செய்பவருக்கு புதிய தொழில் போட்டியாளர்கள் உருவாவார்கள்.

ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. சர்க்கரை, ரத்த கொதிப்பு போன்ற நோய் உள்ளவர்கள் முறையான தொடர் சிகிச்சை எடுத்துக் கொள்வது நல்லது.

சிலருக்கு கடன் சார்ந்த வகையில் கோர்ட், கேஸ் என அலைச்சலும் உண்டு.

சொத்துக்கள் விரயம் ஆகும் காலம் என்பதால் கவனம் தேவை.

கடக லக்கினத்திற்கு 9-க்குடையவர் ஆகவும் குரு வருவதால் சிலருக்குத் தந்தையின் உதவியும் அரவணைப்பும் கிடைக்கப்பெறும். ஆலய அறப்பணிகளை செய்து சுபச்செலவு ஆக மாற்றுவது நல்லது. தான தர்மம் பெரிய அளவில் செய்வது நல்லது.

சிலருக்கு ஆன்மீக யாத்திரை செல்லும் அமைப்பு உண்டாகும்.

குரு தனுசில் இருந்து ஐந்தாம் பார்வையாக பத்தாம் இடத்தை பார்ப்பதால் தொழிலில் பிரச்சினை இருக்காது. சிலருக்கு இடமாற்றம் ஏற்படும். மேலதிகாரியை அனுசரித்து செல்வது நல்லது.

தன்னுடன் பணிபுரியும் சக பணியாளர்களிடமும் அனுசரணையாக நடந்து கொள்வது நல்லது.

தனக்கு கீழே இருக்கும் நபர்களிடமும் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.

வேலை சார்ந்த விஷயங்களில் எச்சரிக்கையாக இல்லாவிடில் புதிய எதிரிகள் உருவாவர்.

குற்றம் கண்டு பிடிப்பது, கோள் மூட்டுவது போன்ற விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டாம்.

குரு தன்னுடைய ஏழாம் பார்வையாக பன்னிரெண்டாம் இடத்தை பார்ப்பதால் சுபச் செலவுகளை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.

குரு தன்னுடைய ஒன்பதாம் பார்வையாக 2-ஆம் இடத்தைப் பார்ப்பதால் கடனாக இருந்தாலும் யார் பணமாவது நம்மிடம் இருக்கும்.

14 .12 .2019 முதல் 10.1.2020 வரை குரு அஸ்தமனமாக இருப்பதால் இக்காலகட்டங்களில் பணம் சார்ந்த விஷயங்களில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

அதுபோல் நீண்டகாலமாக குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் 14.12.2019 முதல் 10.1.2020 வரை இந்த இடைப்பட்ட நாளை செயற்கை கருத்தரிப்பிற்கு பயன்படுத்த வேண்டாம்.

இந்த காலகட்டங்களில் நீங்கள் செய்யும் முயற்சி தோல்வியில் முடியலாம்.

30.3.2020 முதல் குரு அதிசாரமாக மகர ராசிக்கு செல்வதால் நிதி நிலை சீராகும். 01 – 6 – 2020 வரை இந்நிலை நீடிக்கும்.

தனுசு ராசியில் மூலம் 4 பாதம், பூராடம் 4 பாதம் உத்திராடம் 1 பாதம் நட்சத்திரங்கள் உள்ளன.

குரு சுக்கிரனின் நட்சத்திரமான பூராடத்தில் செல்லும் போது மிக கவனம் தேவை.

மற்றபடி இந்த குருப்பெயர்ச்சி பணத்தின் அருமை, நண்பர்களின் நட்புகளை தோலுரித்துக் காட்டி செல்லும். கடன் கொடுப்பதில் உள்ள சிரமங்களையும், கடன் வாங்குவதில் உள்ள சிரமங்களையும் கண்ணாடி போல் தெரியப்படுத்தும்.

கடக ராசிக்கு 2020 ஆம் ஆண்டு மிதமான பலன் தரும் ஆண்டாகவே இருக்கும்.

அறிவுரை
திட்டமிட்டு செலவு செய்யுங்கள்.
கூடியவரையில் புதியகடன்களைத் தவிர்க்கவும்.
பிறருடன் நெருங்கிப் பழகுவதை விளக்கவும்.
உத்யோகஸ்தர்கள் மேலதிகரிகாளுடன் அனுசரித்து நடந்து கொள்ளவும்.
5. முன் கோபம், பிடிவாதம் ஆகியவற்றை தவிர்கவும்,
பரிகாரம்
திருமலை – திருப்பதி ஸ்ரீ வேங்கடவன் திவ்ய தரிசனம் நல்ல பலனை அளிக்கும்.
தென்திட்டைக்குடி குருபகவான் தரிசனம் மிகச்சிறந்த பலன் தரும்.
3. மந்திராலயம் ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள் பிருந்தாவன தரிசனம் சிறந்த கவசமாகும்.
4. திருவானைக்கோவில் ஸ்ரீ அகிலாண்டேசுவரி தரிசனம்
வியாழக்கிழமைகளில், மாலையில் வீட்டின் பூஜையறையில் மண் அகலில் நெய் தீபம் ஏற்றி வருதல்…

கடக ராசியின் அதிபதி சந்திரன் என்பதால் திருப்பதி ஏழுமலையானை தினசரி வழிபடவும். பௌர்ணமி அன்று விரதம் இருந்து அண்ணாமலையாரையும் அபிராமி அம்மனையும் ஒரு சேர தரிசித்து அன்னம் எடுத்துக் கொள்ள அவதிகள் குறையும்.

குருப்பெயர்ச்சி பலன்கள் 2020-21

மேஷம் | ரிஷபம் | மிதுனம் | கடகம் | சிம்மம் | கன்னி | துலாம் | விருச்சிகம் | தனுசு | மகரம் | கும்பம் | மீனம்

108 குரு பகவான் போற்றி 

ஶ்ரீ குரு ஸ்தோத்ரம் பாடல் வரிகள்

குரு பகவானுக்குரிய திருத்தலங்கள்

குருப்பெயர்ச்சி பலன்கள் 2019-20

மேஷம் – http://bit.ly/mesham
ரிஷபம் – http://bit.ly/rishabam
மிதுனம் – http://bit.ly/mithunam
கடகம் – http://bit.ly/kadagam
சிம்மம் – http://bit.ly/simmam
கன்னி – http://bit.ly/kannirasi
துலாம் – http://bit.ly/thulam
விருச்சிகம் – http://bit.ly/viruchigam
தனுசு – http://bit.ly/thanusu
மகரம் – http://bit.ly/magaram
கும்பம் – http://bit.ly/kumbam
மீனம் – http://bit.ly/meenamrasi

Leave a Comment