Thula rasi Guru peyarchi palangal 2019-20 | துலாம் ராசி குருப்பெயர்ச்சி பலன்கள்

துலா ராசி பலன்கள் – 60/100. துலா ராசிக்கு குருபகவான் 3க்கு உடையவராகவும், 6க்குடையவராகவும் வருவார்.

குருபகவான் மூன்றாமிடத்தில் மறைவதும் ஒரு விதத்தில் நல்லதே.

துலா லக்னத்திற்கு குருபகவான் முழு பாவி. ருண, ரோக, சத்ரு ஸ்தானாதிபதி.

அதேநேரத்தில் குருபகவான் தனகாரகன் என்பதால் மறைவது நல்லதல்ல.

தொழில் வியாபாரத்தில் மந்த நிலை ஏற்படும். போராடி வெற்றிபெறும் அமைப்பைக் கொடுக்கும்.

பணம் சார்ந்த விஷயங்களில் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. மாணவர்கள் சிரத்தை எடுத்து படிக்க வேண்டும்.

குரு தனுசு வீட்டில் ஆட்சி பெற்று ஐந்தாம் பார்வையாக 7-ஆம் இடத்தையும், 7-ஆம் பார்வையாக 9-ஆம் இடத்தையும், ஒன்பதாம் பார்வையாக 11-ஆம் இடத்தையும் பார்ப்பார்.

குருவின் பார்வைக்கு பலம் அதிகம் என்பதால் பார்க்கும் இடங்கள் எல்லாம் வலுப்பெறும்.

ஐந்தாம் பார்வையாக களத்திர ஸ்தானத்தைப் பார்ப்பதால் திருமண முயற்சிகள் கைகூடும்.

சிலருக்கு காதல் திருமணம் கனிய வாய்ப்புள்ளது.

கணவன் மனைவி உறவு வலுப்பெறும். கூட்டுத் தொழில் செய்வோர்களிடையே இருந்த பிணக்குகள் நீங்கும்.

ஆலய புனரமைப்பு, ஆன்மீக யாத்திரை செல்லும் வாய்ப்பு உண்டு.

லாப ஸ்தானத்தை குரு பார்ப்பதால் தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். அதே நேரத்தில் தொழிலை விரிவாக்க இந்த நேரம் உகந்தது அல்ல.

பண விஷயங்களிலும், வாடிக்கையாளர்களிடமும் பணிவுடன் நடந்து கொள்வது நல்லது.

மூன்றாம் இடத்தில் குரு ஆட்சி பெறுவதால் புதிய முயற்சிகள் உதிக்கும்.

எந்த ஒரு செயலிலும் முன்னெச்சரிக்கையாக துணிச்சலாக இறங்கும் மனப்பான்மை உண்டாகும்.

ஆறுக்குடையவன் ஆட்சி பெறுவதால் கடனை வாங்கி கடனை அடைக்க வேண்டாம். உடல்நலத்தில் எச்சரிக்கை தேவை.

ஆடம்பரச் செலவுகளுக்காக கடன் வாங்கி அவதிப்பட வேண்டாம்.

14 .12 .2019 முதல் 10.1.2020 வரை குரு அஸ்தமனமாக இருப்பதால் இக்காலகட்டங்களில் பணம் சார்ந்த விஷயங்களில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

அதுபோல் நீண்டகாலமாக குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் 14.12.2019 முதல் 10.1.2020 வரை இந்த இடைப்பட்ட நாளை செயற்கை கருத்தரிப்பிற்கு பயன்படுத்த வேண்டாம்.

இந்த காலகட்டங்களில் நீங்கள் செய்யும் முயற்சி தோல்வியில் முடியலாம்.

30.3.2020 முதல் குரு அதிசாரமாக மகர ராசிக்கு செல்வதால் பணம் பல வழியில் வரும். 01.6.2020 வரை இந்நிலை நீடிக்கும்.

தனுசு ராசியில் மூலம் 4 பாதம், பூராடம் 4 பாதம் உத்திராடம் 1 பாதம் நட்சத்திரங்கள் உள்ளன.

மொத்தத்தில் எதிர்காலத்திற்கு தேவையான அனைத்து விஷயங்களுக்கும் அடிக்கோடிட்டு இந்த குரு பெயர்ச்சி அமையும்.

அறிவுரை
தேவையற்ற செலவுகளை கண்டிப்பாக தவிர்க்கவும்.
வருமானத்திற்குள் குடும்பத்தை நிர்வகிக்க வேண்டும்.
உத்தியோகத்துறையினர் அலுவலகத்தில் தானுண்டு, தன் பணியுண்டு என்று பிறர் விஷயங்களில் தலையிடாமல் விலகி நிற்கவேண்டும்.
பரிகாரம்
திருக்குடந்தை (கும்பகோணம்) காவிரிக்கரையில் திகழும் ஸ்ரீவிஜயேந்திர தீர்த்தர் பிருந்தாவன தரிசனம், திரிதீய குருவினால் ஏற்படும் தோஷத்தை அடியோடு போக்கும்.
வியாழக்கிழமைகளில் பகல் உணவு ஒருவேளை மட்டும் உணவருந்தி, இரவில் உபவாசம் இருத்தல். இரவில் பால், பழம் மட்டும் சாப்பிடலாம். ஒருவருடம் அனுஷ்டித்தால் போதும்.
தினமும் ஸ்ரீ விஷ்ணு சகஸ்ரநாமம் படித்து வருதல் நல்ல பலனை அளிக்கும்.
உங்கள் குல குரு அல்லது ஆச்சார்யன் தரிசனம்

திருசெந்தூர் சென்று முருகப்பெருமானையும் , தக்ஷ்ணாமூர்த்தியையும் வழிபட மிகப்பெரிய மாற்றங்களையும் ,சந்தோஷத்தையும் தரும். ஸ்ரீரங்கம் சென்று சைன கோலத்தில் இருக்கும் பெருமானையோ அல்லது குருவாயூர் சென்று குருவாயூரப்பனையோ வழிபட சகல சௌபாக்கியங்களையும் பெறுவீர்கள் .

மேஷம் – http://bit.ly/mesham
ரிஷபம் – http://bit.ly/rishabam
மிதுனம் – http://bit.ly/mithunam
கடகம் – http://bit.ly/kadagam
சிம்மம் – http://bit.ly/simmam
கன்னி – http://bit.ly/kannirasi
துலாம் – http://bit.ly/thulam
விருச்சிகம் – http://bit.ly/viruchigam
தனுசு – http://bit.ly/thanusu
மகரம் – http://bit.ly/magaram
கும்பம் – http://bit.ly/kumbam
மீனம் – http://bit.ly/meenamrasi

Leave a Comment